Announcement

Collapse
No announcement yet.

akshaya thruthiyai

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • akshaya thruthiyai

    பவுர்ணமி அல்லதுஅமாவாசைக்குப் பிறகு வரும்மூன்றாவது திதி நாள் திருதியை.க்ஷயம்என்றால் தேய்தல் என்று பொருள்.அட்சயம் என்றால்தேயாது,குறையாது,வளர்தல் என்றுபொருள்.சித்திரை மாதவளர்பிறையில் வரும் திருதியைநாளே அட்சய திருதியை எனப்படுகிறது.
    எல்லா நலன்களையும்குறைவிலாது அள்ளிக் கொடுக்கும்இந்தத் திருதியை நன்னாளைஅட்சய திருதியை என அழைத்துப்போற்றிக் கொண்டாடினர்.அதனால் தான்மிக விலையுயர்ந்ததாகக்கருதப்படும் தங்கத்தை அன்றுமக்கள் வாங்குகின்றனர்.மகாகவி காளிதாசர்அருளிய உத்திர காலாமிருதம்என்னும் ஜோதிட நூல்,திதி நாட்களில்மிகவும் விசேஷமானது திருதியைஎன்று கூறுகிறது.
    பௌர்ணமி திதி,அமாவாசை திதி,சதுர்த்திதிதி,ஏகாதசி திதி,அஷ்டமி திதிபோன்ற திதிகளைப் போன்றேஅமாவாசைக்குப் பிறகு வரும்திருதியை திதியும் சிறப்புதிதியாகத் திகழ்கிறது.அமாவாசைக்குப்பிறகு வரும் மூன்றாவது திதிநாளான திருதியைத் திருநாள்திருமகளுக்குரிய நாளாகத்திகழ்கிறது.அதிலும் தமிழ்மாதத்தில்,சித்திரை மாதஅமாவாசைக்குப் பிறகு வரும்3-வதுபிறையான அட்சயத் திருநாள்மிகவும் மகிமைமிக்கது எனசாஸ்திரங்கள் கூறுகின்றன.

    அட்சயதிருதியையால் அமைந்த நிகழ்வுகள்:
    முற்காலத்தில்வைசியன் ஒருவன் மிகவும்ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தான்.அன்றாட உணவுக்கேவழியில்லை.ஆயினும்,அவன் மிகவும்பக்தியுடன் வாழ்ந்து வந்தான்.அவன் பக்தியைக்கண்ட பெரியோர்,அவனிடம் அட்சயதிருதியை வழிபாடு பற்றிக்கூறினார்கள்.அவன் ஓர் அட்சயதிருதியை நன்னாளில் அதிகாலைஎழுந்து நீராடி,பாத்திரத்தில்அன்னம் வைத்து தண்ணீர்,
    கோதுமை,சத்துமாவு,கரும்புச்சாறு,பால்,தட்சிணைமுதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத்தானம் கொடுத்தான்.அன்றையவழிபாடுகளையும் முறைப்படிஅனுசரித்தான்.வறுமையின்காரணமாக அவனது மனைவி அவனைத்தடுத்தும்கூட,குறைவில்லாதுஅட்சய திருதியை நன்னாளைஅனுசரித்தான் வைசியன்.இதன் பயனாகஅவன் தனது மறுபிறவியில் குஷபதிசக்ரவர்த்தியாகப் பிறந்து
    புகழ் பெற்றான் எனபுராணங்கள் பேசுகின்றன.
    யுகங்களுள் இரண்டாவதுயுகமான திரேதாயுகம்,ஓர் அட்சயதிருதியை திருநாளில்தான்ஆரம்பாமாயிற்றாம்.
    தன் குருகுல நண்பனானஏழைக் குசேலன் தன்னைப் பார்க்கவந்தபோது அவன் கொடுத்த மூன்றுபிடி அவலைத் தின்று,பதிலாக கோடிகோடி செல்வங்களைக் கொட்டிக்கொடுத்து குசேலனை கிருஷ்ணபரமாத்மா குபேரனாக்கியதிருநாளும் இந்த அட்சய திருதியைநன்னாளில்தான்!
    பரசுராமர் அவதரித்தநன்னாள்,பலராமர் தோன்றியபொன்னாள் அட்சய திருதியையே!


    துரியோதனனின்சூழ்ச்சியினால்,பஞ்ச பாண்டவர்கள்வனவாசத்தை மேற்கொள்ளக்கூடியநிலை ஏற்பட்ட போது,ஆகாரத்துக்குஅவர்கள் கஷ்டப்படாமல் இருக்கஅவர்களின் முக்கிய ஆலோசகரானகண்ணன்,திரௌபதியிடம்இருந்து அந்த அட்சய பாத்திரத்தைவாங்கி அவர்களிடம் கொடுத்தார்.
    அவர்களுக்குத்தேவையானபோது அந்த அட்சயபாத்திரத்தின் மூலம் அள்ளஅள்ளக் குறையாத அன்னங்களை,அவர்கள்விருப்பப்பட்ட உணவுப்பொருட்களைப்பெற்று சந்தோஷமாகப் புசித்துவந்தார்கள்.இதை நினைவுபடுத்தும்வகையிலும் இந்த அட்சய திருதியைகொண்டாடப்படுகிறது.

    இந்தஅட்சய திரிதியை நாளில்தான்பிட்சாடனரான சிவபெருமான்தன் கபால (பிரம்மகபாலம்)பிட்சைபாத்திரத்தில் நிரம்பும்அளவு உணவை காசியில்அன்னபூரணியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
    கௌரவர்கள் சபையில்துச்சாதனன் பாஞ்சாலியின்உடையை உருவி மானபங்கப்படுத்தினான்.அப்போதுகண்ணபிரான் அட்சய என்று கூறிகைகாட்டி அருள,துச்சாதனன்உருவ உருவ புடவை வளர்ந்துகொண்டே இருந்த நாள் இந்த அட்சயதிரிதியை நாளில்தான்.
    இதனால் தான் பாஞ்சாலிமானம் காப்பாற்றப்பட்டது.அட்சய திருதியையில்,எதைச் செய்தாலும்வளர்ந்து கொண்டே இருக்கும். அன்றுகொடுக்கும் தானம்,அளவற்றபுண்ணியத்தைக் கொடுக்கும்.அன்றுபித்ருக்களுக்கு பிதுர்பூஜைஎன்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச்செய்து அவர்களின் ஆசியைப்பெற்றால்,குடும்பமும்வாரிசுகளும்வளர்ச்சியடைவார்கள்.



    அட்சயதிருதியால்ஏற்படும் பலன்கள்:இந்தநாளில் ஏழை,எளியவர்களுக்குஅன்னதானம் செய்வது,நல்லகாரியங்களுக்கு உதவுவது,எந்தவகையிலாவது பிறருக்கு உறுதுணையாகஇருப்பது இவற்றினாலும்தர்மதேவதையின் அருளைப் பெற்று,இந்த அட்சயதிருதியையில் புண்ணியங்களைச்சேர்த்துக் கொள்ளலாம்.
    திருமகள் அம்சமாகநல்ல மனைவி அமைய விரும்புவோர்,தங்களுக்குநல்ல மருமகள் வர விரும்பும்பெற்றோர்,அட்சயதிருதியையில்,திருக்கோயிலில்வைத்து பெண் பார்க்கும்வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோநடத்தினால் விரும்பியபடிமணமகள் அமைவாள்.


    அட்சயதிருதியை அன்று என்ன செய்யவேண்டும்:இந்நாளில்வாங்கப்படும் எந்தப் பொருளும்இல்லத்தில் குறைவின்றிநிறைந்திருக்கும் என்பதுநம்பிக்கை.எனவேதான்இந்நாளில் தங்கம் வாங்கவிரும்புகின்றனர்.ஆனால் இவ்வளவுவிலை உயர்ந்த பொருளை அனைவராலும்வாங்க இயலாது.அதற்காக மனம்தளர வேண்டாம்.நமக்கு மிகவும்உபயோகமான பொருட்களை வாங்கிப்
    பயனடையலாமே.
    அன்று உப்பு,அரிசி மற்றும்தேவையான ஓரிரு ஆடைகள்,ஏதாவது ஒருசிறு பாத்திரம் என வாங்கலாம்.எப்படியும்நாம் மாதாமாதம் மளிகைப்பொருட்கள் வாங்கி ஆக வேண்டும்.அதனை இம்மாதத்தில்மட்டும் இந்த அட்சயதிரிதியைநாளில் வாங்கி வளம் பெறலாமே.
    வட இந்தியாவில் இந்நாளைஅகஜித் என்பர்.ஸ்ரீமகாலட்சுமிவிஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான்இடம் பெற்றாள்;நிரந்தரமாகத்தங்கினாள்.அஷ்ட லட்சுமிகளில்ஐஸ்வரிய லட்சுமியும்,தான்ய லட்சுமியும்தோன்றிய நாளும் இதுதான்.
    ஸ்ரீலட்சுமியானவள்வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும்,பாற்கடலில்ஸ்ரீலட்சுமியாகவும்,இந்திரனிடம்சுவர்க்க லட்சுமியாகவும்,அரசர்களிடம்ராஜ லட்சுமியாகவும்,வீரர்களிடம்தைரிய லட்சுமியாகவும்,குடும்பத்தில்கிரக லட்சுமியாகவும்,பசுக்களில்கோமாதாவாகவும்,யாகங்களில்தட்சிணையாகவும்,தாமரையில்கமலையாகவும்,அவிர்பாகம்அளிக்கும்போது ஸ்வாகாதேவியாகவும் விளங்குகிறாள்
    இப்படி சகல யோகங்களுக்கும்ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்.எனவே, அட்சயதிரிதியை அன்று ஸ்ரீமன்நாராயணனின் இணைபிரியாத தேவிஸ்ரீலட்சுமியைப் பூஜிக்கவேண்டும்.


    நம்இல்லத்தில் சாஸ்திரப்படிபூஜை செய்பவர்களுக்குதிருவருளும் லட்சுமி கடாட்சமும்கிட்டும்.அன்று செய்யும்தான-தர்மத்தால்மரண பயம் நீங்கி உடல் நலம்உண்டாகும்.அன்னதானத்தால்விபத்து விலகும்.ஏழை மாணவர்களின்கல்விக்கு உதவினால் நம்குடும்ப குழந்தைகளின் கல்விமேம்படும்.தானதர்மங்கள்செய்தால் எம வேதனை கிடையாது.
    நலிந்தவர்களுக்குஉதவி செய்தால் மறுபிறவியில்ராஜயோக வாழ்க்கை அமையும்.ஆடைகள்தானம் செய்தால் நோய்கள்நீங்கும்;பழங்கள்தானம் செய்தால் உயர் பதவிகள்கிடைக்கும்.மோர்,பானகம்அளித்தால் கல்வி நன்கு வளரும்;தானியங்கள்தானம் கொடுத்தால் அகால மரணம்ஏற்படாது.
    தயிர் சாதம் தானம்அளித்தால் பாவ விமோசனம்ஏற்படும்.முன்னோருக்குதர்ப்பணம் செய்தால் வறுமைநீங்கும்.அட்சயதிருதியை அன்று ஆலிலையில்மிருத்யுஞ்ஜய மந்திரத்தைஜபித்து,அதை நோயாளிகளின்தலையணையின் அடியில் வைத்தால்நோய் விரைவில் குணமாகும்என்பது நம்பிக்கை.

    அட்சயதிருதியும் அதன் வழிபாட்டுஅமைப்பும்:

    அட்சயதிருதியை நாளில்,பூஜையறையில்குலதெய்வ -இஷ்ட தெய்வங்களைவணங்கி வழிபடும் போது,பூஜையில்தொழில் ஆவணங்கள்,பணம் இவற்றையெல்லாம்வைத்து அவர்களுக்குரியமந்திரங்களையும் உச்சரித்து,வலம்புரிச்சங்கில் தீர்த்தம்,பால் போன்றவைவைத்து சாமிக்கு நிவேதனம்செய்ய வேண்டும்.மேலும் இத்துடன்அருகம்புல்,வில்வம்,துளசி,மரிக்கொழுந்து,மல்லிகை,செந்தாமரைமலர்களாலும் வீட்டிலும்வியாபார ஸ்தலங்களிலும்வழிபட்டால்,தொழில்முன்னேற்றமும் குடும்பவிருத்தியும் ஏற்படும்.


    அளவற்றவளம் தரும் அட்சய திருதியை!

    *
    கர்நாடகமாநிலத்தில் அட்சய திருதியைதினத்தன்று பெண்கள் ஒருமண்டபத்தில் கலசம் வைத்துஅதில் கௌரி தேவியை எழுந்தருளச்செய்து சொர்ண கௌரி விரதம்கடைபிடிப்பர்.இதன்மூலம்பார்வதிதேவி,தங்கள் வீட்டுக்குவருவதாக நம்புகின்றனர்.குழந்தைப்பேறு,சுமங்கலிப்பாக்கியம்,உடல்நலம்ஆகியவற்றுக்காக கர்நாடகபெண்கள் விரதம் இருப்பர்.விரத முடிவில்அட்சய திருதியை தானமும்வழங்குவர்.

    *
    அட்சய திருதியைதினத்தன்று பவானி சங்கமேஸ்வரர்ஆலயத்தில் உள்ள முக்கூடல்புண்ணிய தீர்த்தத்தில்நீராடினால் நமது எல்லாபாவங்களும் விலகிவிடும்என்பது ஐதீகம்.

    *
    நவ திருப்பதிகளில்ஒன்றான திருக்கோளூர்,தூத்துக்குடிமாவட்டம் ஆழ்வார் திருநகரிஅருகில் உள்ளது.பெருமாள்,குபேரனுக்குமரக்கால் என்ற அளவை பாத்திரம்கொண்டு செல்வத்தை அளந்துகொடுத்தார்.அந்த மரக்காலைதன் தலைக்கு அடியில் வைத்தபடிபடுத்திருப்பார்.இவரை வைத்தமாநிதிஎன்றும்,செல்வம் அளித்தபெருமாள் என்றும் அழைப்பர்.அட்சய திருதியைநாளில் இவரை தரிசித்தால்வாழ்வில் வளம்சேரும்.

    *
    காசியில்ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது.மக்களின் பசிபோக்குவதற்காக பார்வதிதேவி,அன்னபூரணியாகஅவதாரம் எடுத்தார்.அன்னம் என்றால்உணவு என்று பொருள்.பூரணி என்றால்முழுமையாக உடையவள் என்றுபொருள்.உணவை முழுமையாககொண்ட அன்னபூரணி அட்சய பாத்திரம்பெற்று அதிலிருந்து வற்றாதஉணவை எடுத்துக் கொடுத்துபக்தர்களின் பசியைப் போக்கினார்.
    அந்த சமயத்தில் மக்களோடுமக்களாக சிவபெருமானும்அன்னபூரணியிடம் உணவு வாங்கிச்சாப்பிட்டார்.அந்த நாள்தான்அட்சய திருதியை.எனவே,அட்சய திருதியைதினத்தன்று ஓம் நமச்சிவாயசொல்லி பரமேஸ்வரனின் அருளைப்பெறுவோம்.

    *
    அட்சய திருதியைதினத்தன்று கும்பகோணம் மற்றும்அதன் சுற்று வட்டாரப் பகுதியில்உள்ள 16பெருமாள்கோயில்களிலிருந்தும் 16பெருமாள்கள்கருட வாகனத்தில் புறப்பட்டுவருவார்கள்.கும்பகோணம்பெரிய தெருவில் 16பெருமாள்களும்ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்குத்தரிசனம் தருவார்கள்.இந்த அற்புததரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையேநடைபெறும்.அன்று 16பெருமாள்களையும்வழிபட்டால் வாழ்வில் வளம்பெருகும் என்பது நம்பிக்கை.

    *
    மத்திய பிரதேசம்,ராஜஸ்தான்மாநிலங்களில் அட்சய திருதியைஎன்றால் திருமணம் தான்என்கிறார்கள்.அந்த நாளில்திருமணம் செய்தால் எல்லாவளமும் பெறலாம் என்பது அவர்களதுநம்பிக்கை.அதனால் அன்றுநிறைய திருமணங்கள்நடைபெறுகின்றன.

    அட்சயதிரிதியைதினத்தில் மகாலட்சுமியைவழிபட்டால் செல்வம் பெருகும்என்பது நம்பிக்கை.ஆனால் மகாலட்சுமியேபிரதிஷ்டை செய்து வழிபட்டசிவன்கோயிலுக்கு சென்றால்பலன் பல மடங்கு பெருகும்என்பது நம்பிக்கை.திருச்சிஅருகே அமைந்துள்ள வெள்ளூரில்தான் மகாலட்சுமி பிரதிஷ்டைசெய்த திருக்காமீஸ்வரர்கோயில் அமைந்துள்ளது.இங்குள்ளஅம்மன் சிவகாம சுந்தரி தெற்குநோக்கி தனி சன்னதியில்அருள்பாலிக்கிறாள்
Working...
X