அக்பர்சக்கிரவர்த்தி இந்த ஊருக்குவந்தவுடன் ஊரை அல்லா+ஆபாத்=இறைவன் உறைவிடம்என்று சொன்னான்.இதுவே மருவிஅலஹாபாத் ஆயிற்று;.
மாதவர்கோவில் ஆதி சேஷன் கோவில்உள்ளது.


கங்கைஜலம் வேண்டியதை வாங்கி ஈயபற்று வைத்து ஊருக்கு எடுத்துசெல்ல தயார் செய்து கொள்ளலாம்.கங்கையைபூஜித்து கங்கா ஸமாராதனைசெய்து ஆச்சார்ய ஸபாவனை செய்துகிளம்ப வேண்டும் காசிக்கு..


தேசீயநெடுஞ்சாலை அலகாபாத்திலிருந்துகாசிக்கு 170கிலோ மீட்டர்.உள்ளது.நடுவில் 85கிலோ மீட்டரில்விந்தியாசல் உள்ளது.இங்கு துர்க்காவிந்தியா வாஸினி என்ற பெயருடன்அருள் பாலிக்கிறாள்.;


காசியிலிருந்துகயா 276கிலோ மீடர்.ரயிலில் சென்றால்220கிலோ மீட்டர்.
கோஆசூப்பர் எக்ஸ்ப்ரஸ் (12358 ) 4 மணி நேரத்தில்சென்று விடலாம்..


ப்ரயாகையில்ஆண்கள் வபநம் பெண்கள் வேணிதாநம் செய்து வேணி மாதவர்உள்ளிட்ட தெய்வங்களை வழிபடவேண்டும் .இதனால்ஆத்ம ருணம் விலகுகிறது.


காசியில்கங்கா ஸ்நானம் செய்து காலபைரவரிடமும் தன்டபாணியிடமும்
தண்டத்தால்அடி பெற்றுக் கொண்டு அங்குபல தெய்வங்களை வழி படுவதால்தேவ ருணம் விலகும்.


ராமேஸ்வரம்ப்ரயாகை;காசி;கயா ஆகியக்ஷேத்ரங்களில் தீர்த்தசிராத்தம் செய்து விஷ்ணுபாதத்திலும் அக்ஷய வட சாயையிலும்பிண்டங்கள் இடுவதால் பித்ருருணம் விலகும்..
..சிலர்சென்னையிலிருந்து நேரேகாசிக்கு ரயிலில் சென்றுவிட்டு காசியிலுள்ள வாத்யாரையும்அழைத்து கொண்டு 3மணி நேரத்தில்கார் மூலம் ப்ரயாகை வந்துஒரே நாளில் எல்லாம் முடித்துகோண்டு காரில் காசி


திரும்பிவிடுகிறார்கள்.மறுபடியும்காசியிலிருந்து காரில் 4மணி நேரத்தில்கயா சென்று ஒரே நாளில் எல்லாம்முடித்துக்கொண்டு காசிவருகிறார்கள்.காசியிலிருந்துநேரே ரயிலில் சென்னை வருகிறார்கள்.இது அதம பக்ஷம்.


சிலவாத்யாரிடம் சொந்த கார்உள்ளது.அதில் வாத்யாரேகாரை ஓட்டி சென்று திரும்பிவிடுகிறார்.


திரிவேணிக்குமுதல் முறை போகும் போது மட்டும்தான் வேணி தானம்.அதன் பிறகு எத்தனைமுறை சென்றாலும் வேணிதானம்செய்ய வேண்டியது இல்லை.
சாஸ்திரிகள்வீட்டிலேயே ஸ்நானம் செய்துவிட்டு பிள்ளையார் பூஜை மஹாஸங்கல்பம் செய்து கிரஹ ப்ரீதிக்ருச்சர ப்ரதிநிதி தானம்செய்து
விட்டுமனைவி கணவனுக்கு பாத பூஜைசெய்து கணவனின் நல்வாழ்வுவேண்டி வேணி தானம் செய்யஅநுமதி கேட்டு பெற வேண்டும்.பிறகு நதிக்கரைசெல்ல வேண்டும்.யுவதிகளும்வேணி தானம் செய்ய வேண்டும்.


வேணிதானம் செய்வதனால் ஸெளபாக்கியம்,செல்வ செழிப்புசந்ததி ஆயுள் விருத்தி பதியிடம்ப்ரியமும் உண்டாகும்...
பரித்ராஜகோபனிஷத்எல்லா பாபங்களும் தலை முடியில்போய் தங்குகிறது.ஆதலால் முடியைசுத்தமாக எடுத்து.காணிக்கையாகஅளித்து விட வேண்டும் என்கிறது.


வேணிதானம் செய்யும் போது சொல்லவேண்டிய ஸ்லோகங்கள்.


திரிவேணிதேவிக்கு அநேக நமஸ்காரங்கள்.எனக்கு எப்போதும்பாதி வ்ரத்யம் கொடுப்பாயாக;.என் ஸெளபாக்கியம்பெருகட்டும்;.நான் இங்கு வந்துவேணி தானம் செய்ததால் இந்தஜன்மாவிலும் முன் ஜன்மாக்களிலிலும்நான் செய்த பாபங்கள் என்னைவிட்டு நீங்கட்டும்..


வேணிதானம் சுக்கில பக்ஷத்தில்செய்ய வேண்டும்.திதி,நக்ஷத்திரம்இரண்டும் நன்மை செய்ய க்கூடியதினம் பார்த்து ப்ரயாகைக்குசென்ற நாளன்றோ அல்லது மறுநாளோ வேணி தானம் செய்ய வேண்டும்.
தலைமுடிபிரிந்து விடா வண்ணம் முடிந்துகொண்டு முகத்தில் மஞ்சள்பூசிக்கொண்டு கணவன் மனைவிஇருவரும் கைகோர்த்து கொண்டுஇருவரும் சேர்ந்து திரிவேணிசங்கம ஸ்நானம் செய்ய வேண்டும்


பிறகுஇருவரும் போட்டில் வந்துகிழக்கு அல்லது வடக்கு நோக்கிஉட்கார்ந்து மனைவி கணவனிடம்வேணி தானம் செய்ய அனுமதிவாங்கி
பின்னர்கணவன் மனைவியின் தலை முடியைபிண்ணி விட்டு பூச்சூடி தலைமுடியை இரண்டு அங்குலம்நுனியில் வெட்டி மனைவியிடம்கொடுக்க வேண்டும்.மனைவி அதை ஸெளபாக்கியத்ரவ்யங்களுடன் சேர்த்து


பண்டாவிடம்தானம் செய்து விட்டு பண்டாவிடம்முடியை த்ரிவேணியில் போடசொல்லி கொடுக்க வேண்டும்முடி மிதந்து வெளியே போகாமல்தண்ணிரில் அடியின் செல்வதுநல்லது.பிறகு தம்பதிகள்கை கோர்த்து
மறுபடியும்ஸ்நானம்:போட்டிற்கு வந்துவேறு காய்ந்த ஆடை உடுத்தித்ரிவேணிக்கு பூஜை செய்யவேண்டும்.ப்ராஹ்மணர்களுக்கும்


சுமங்கலிகளுக்கும்தானம் செய்ய வேண்டும்.பிறகு தம்பதியர்வீட்டுக்கு வந்து தம்பதிபூஜை செய்து சாப்பாடு போடவேண்டும்.பிறகு தம்பதியர்சாப்பிட வேண்டும்..
தலைமுடி நுனியை கத்தரித்துபண்டாவிற்கு தானமாக கொடுத்துஅதை கங்கை,யமுனை ஸரஸ்வதிசங்கமிக்கு மிடத்தில்போடச்சொல்லி முத்தேவியற்கும்காணிக்கையாக போடுவதற்கு வேணீதானம் எனப்பெயர்...


வேனிமாதவர் மணலை தண்ணீரில் கரைக்கவேண்டும்.ஸங்கம இடத்திலிருந்துசற்று நகர்ந்து சுத்த கங்கைநீரை கேனில் பிடித்து கொள்ளவேண்டும்.
த்ரிவேணிஸங்கமம் இடத்திலும் மற்றஇடங்களிலும் சுமங்கலிகளுக்குதாம்பூலம் பழம் புஷ்பம்ரவிக்கை துண்டு.கண்ணாடி சீப்பு;மஞ்சள் பொடி;குங்குமம்;கண்ணாடி வளையல்;;கண்மை;மருதாணி பவுடர்தக்ஷிணை கொடுக்க வேண்டும்


வீட்டிற்குவந்து ஈர வஸ்த்ரம் தானம் செய்யவேண்டும்.


தீர்த்தசிராத்தம் செய்ய வேண்டும்.17 பிண்டங்கள்பிண்ட தானம்;தர்பணம் செய்யவேண்டும்.சிராத்தம்முடித்த பிற்கு வேணி மாதவர்கோயில் செல்ல வேண்டும்.தச தானம் செய்யவேண்டும்.
த்ரிவேணிகரையில் பூஜை செய்யும் போதுஅந்தந்த தேவிகளுக்கு இந்தப்ரார்த்தனைகளும் சொல்லலாம்.


த்ரிவேணிசங்கமத்தில் கங்கைக்கு பூஜைசெய்யும் போது இந்த ஸ்லோகம்சொல்லலாம்.


விஷ்ணுபாதோத்பவே தேவி மாதவ ப்ரியதேவதே தர்சனே மம பாபம் மேதஹத்வக்நிரிவேந்தனம்.லோக த்ரயேபிதீர்த்தாணி யானி ஸந்தி சதேவதாஹா.தத் ஸ்வரூபாத்வமேதாஸி பாஹி ந ஹ பாப ஸங்கடாத்


கங்கேதேவி நமஸ்துப்யம் சிவசூடாவிராஜிதே சரணத்ராண ஸம்பன்னேத்ராஹி மாம் சரணாகதம்.


யமுநாவிற்குபூஜை செய்யும் போது இந்தஸ்லோகம் சொல்லலாம்.


இந்த்ரநீலோத்பலாகாரே பானுகன்யேயசஸ்வினி ஸர்வ தேவஸ்துதேமாதஹ யமுநே த்வாம் நமாம்யஹம்
ஸர்வதீர்த்த க்ருதாவாஸே ஸர்வ காமவரப்ரதே ஸர்வ பாப க்ருதத்வம்ஸேநமஸ்தே விஸ்வபூஜிதே.
ஸம்ஞ்ஞாகர்பஸமுத்பூதே ஸம்ஜ்ஞோசாரண புண்யதேவிஷ்ணு ப்ரியதமே தேவி யமஜ்யேஷ்டேநமோ நமஹ.


ஸரஸ்வதிநதிக்கு பூஜை செய்யும்போதுஇதை சொல்லலாம்.


ப்ரஜாபதிமுக்கோத்பூதே ப்ரணதார்திப்ரபஞ்சினி ப்ரயாக மிலிதேதேவி ஸரஸ்வதி நமோஸ்துதே
பத்மராகதலாபாஸே பத்மகர்ப அருணேக்ஷனேபத்மமாலா வினிதாங்கே பாபக்ந்யைதே நமோநமஹ
வீணாவாதரஸாபிஞ்ஞே வீணயா ஸமலங்க்ருதேகீத வீணாரவே மாதஹ பாஹிமாம்சரணாகதம்;


த்ரீவேணியில்பூஜிக்கும் போது சொல்லக்கூடியஸ்லோகம்


த்ரிவர்ணேத்ரியம்பிகே தேவி த்ரிவிதஅக-விநாசினி த்ரிமார்கே த்ரிகுணே த்ராஹித்ரிவேணி சரணாகதம்;ஸம்சார அநலசந்தர்பம் காம க்ரோதாதிவேஷ்டிதம் பதிதம் த்வத்பாதாப்ஜே மாம் சீதளம் குருவேணிகே
தீர்த்தராஜே ப்ரயாகே அஸ்மின்ப்ரத்யக்ஷவாஸி ஜகத் ஹிதேநானா ஜன்ம க்ருதா ப்யாஸாத்பாதகாத் உத்தரஸ்வ மாம்


அரசமரத்தின் வேர் அக்ஷயவடம்காணும் போது சொல்ல வேண்டியஸ்லோகம்


ஜடரே அகிலமாதாய த்வயி ஸ்வபிதிமாதவஹ;க்ருத்வா முகாம்புஜேபாதெள நமோ அக்ஷயவடே நமஹ
த்வன்மீலேவஸதே ப்ருஹ்மா தவ மத்யே ஜநார்தனஹத்வதக்ரே வஸதே சூலி தாத்ருசம்த்வாம் நமாம்யஹம்.
ஸெளவர்ணானிதலான்யஸ்ய ஸப்த பாதாலகா ஜடாஹா யாவன் மண்டல விஸ்தாரோ வடராஜாயதே நமஹ.


வேணிமாதவரை காணும் போது சொல்லவேண்டிய ஸ்லோகம்;


நீலஜிமூத ஸங்காச பீத கெளசேய பூஷிதப்ரயாக நிலய ஸ்வாமின் வேணிமாதவ தே நமஹ
சங்கசக்ர கதா பத்ம விபூஷித சதுர்புஜசதுர்வர்க பலாதார வேணி மாதவதே நமஹ; த்வத் பாத ப்ரணதம்மாம் த்வம் கமல ஸ்ரீ முகாத்ருசா உத்தரஸ்வ மஹோதாரவேணீமாதவ தே நமஹ.
சனகாதிமுனிவருக்கு ஆதிசேஷன் உரைத்தத்ரிவேணி தேவி ஸ்தோத்ரம்வ்யாஸர் அருளிச்செய்தது.


உடல்இந்திரியங்கள்.ப்ராணன் மனது,புத்தி.சித்தம் அஹங்காரம்அஞ்ஞான துகள்கள் போன்றஅனைத்தையும் தனது ப்ரகாசத்தால்ப்ரகாசிக்க செய்யம் த்ரிவேணிதேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாகஇருக்கட்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஜாக்ரத்ஸ்வப்ணம் சுஷுப்தி ஆகிய மூன்றுநிலைகளிலும் ப்ரகாசிக்கசெய்பவளும் இவற்றின் விகாரங்களைமாற்றுபவளும் விகாரங்களைஅகற்றுபவளுமாக உபனிஷத்துகளால்போற்றப்படும் த்ரிவேணி தேவிஎனக்கு ஸித்தி அளிக்கட்டும்.


ஸுஷுப்திநிலையில் அறிவு அழியும்போதும்இந்திரியங்களின் ஆளும் சக்திகுறையும் போதும் கூட என்னைநடமாட வைக்கும் த்ரிவேணிதேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாகஇருக்கட்டும்
அனைத்துஉலக விஷயங்களிலும் தினம்கட்டுண்டு கிடக்கும் எம்மோடுதாமே வந்து கலந்து அபரிமிதமானப்ரியம் செலுத்தி ஆதரிக்கும்ஸாக்ஷாத் திரிவேணி தேவி எனக்குஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.


மறைபொருளானவிஞ்ஞானம் பரந்த ப்ரபஞ்சத்தின்பலவிதமான வேறுபாடுகளைப்ரகாசபடுத்தி ஞானமளிக்கும்த்ரிவேணி தேவி எனக்கு ஸித்திஅளிக்கட்டும்.
ஆரம்பத்தில்ப்ருஹ்மாவையும் மத்தியில்விஷ்ணுவையும் இறுதியில்சிவனையும் ப்ரகாசபடுத்திகாட்டும் திரிவேணி தேவி எனக்குஸித்தி அளிக்கட்டும்.
.

அகாரவடிவில் ப்ருஹ்மா விசுவேதேவஸ்வரூபி;மகார வடிவில்அக்னி ஸ்வரூபி;என்றுதேஜஸ் ஸூத்ரம் சொல்வதைஉணர்த்தும் த்ரிவேணி தேவிஎனக்கு ஸித்தி அளிக்கட்டும்;
சிவபெருமானின்தேகத்திலிருந்து வேறுபடாதவளும்முக்தி தேவி ஸ்வரூபியும் அஞ்ஞானிகளுக்கு சூன்ய மானவளும்ஓங்கார லக்ஷ்மியுமான திரிவேணீதேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்


இந்ததுதியை தினமும் காலை,மதியம் மாலைசொல்பவர்களுக்கு திரிவேணிதேவிபிரசன்னமாகி அருள் புரிவாள்என்பதில் சந்தேகம் இல்லை;
மந்திரஸாரமான இந்த ஸ்தோத்ரம் வ்யாஸபகவான் செய்தது.இதை ஜபிப்பதால்திரிவேணி தேவி நம்மோடு எப்போதும்இருந்து காபாற்றுவாள்.


சிவமடம் தாரா கஞ்ச் அலஹாபாத் (0532 ) 2500799.


இனிகாசியில் செய்ய வேண்டுபவற்றைபார்ப்போம்..