காசியில்திருவண்ணாமலை கிரி வலம் மாதிரிகோவில்கள் சுற்றும் வழக்கம்உண்டு. இது 16கிலோமீட்டர் பாதை.நடந்தோ,பல்லக்கிலோ, ஊர்திகளிலோசெல்கின்றனர். இதற்குபஞ்ச க்ரோஸி பரிக்ரமா என்றுபெயர்.


காசிரஹஸ்யம் என்ற நூலில் இது பற்றிவிவரம் உள்ளது.அந்தகால பழக்கம் இதை ஐந்து நாட்களில்செய்வர். தற்காலத்தில்ஒரே நாளில் சில மணி நேரத்தில்முடித்து விடுகின்றனர்.


இந்தபரிக்ரமாவை மல மாஸத்தில்செய்வது விசேஷம் . ஆண்,பெண் இரு பாலரும்,அனைத்து ஜாதியினரும்வேறுபாடின்றி ஒன்றாக செல்வர்.மாதவிடாயின் போதுபங்கேற்க கூடாது.செறுப்புஅணிந்து செல்லக்கூடாது.கையில் கட்டுச்சோறுஎடுத்து செல்லக்கூடாது.


ஹர ஹரசம்போ மஹாதேவ , காசிவிசுவநாத் கி ஜய் என்று கோஷமிட்ட வாறு செல்ல வேண்டும். ஆண், பெண்உடலுறவு அறவே தவிர்க்க வேண்டும்.


பரிக்ரமாவிற்குமுதல் நாள் கங்கையில் ஸங்கல்பஸ்நானம்; டுண்டிகணபதி மற்றும் விசுவ நாதர்தரிசனம். மறு நாள்அதிகாலை மணிகர்ணிகா கட்டத்தில்ஸ் நானம்.
ஞானவாபியில்கணேசரின் நாமங்கள் 56; நரசிம்மர் நாமங்கள்-13;விஷ்ணுவின் நாமங்கள்16; சூரியனின்நாமங்கள்12; பைரவர்நாமங்கள் 8; சிவ,விஷ்ணு நாமங்கள்ஆகியவை கூறி ஸங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.

ஸங்கல்பம்செய்து வைக்கும் குரு ,பரிக்ரமாவில் கூடவேவந்து பூஜைகள் செய்து வைப்பார்.விசுவ நாதரையும்,அன்னபூரணியையு தரிசனம்செய்து விட்டு மெளன
மாகமணிகர்ணிகா வந்து அங்கிருந்துபரிக்ரமாவை துவங்க வேண்டும்.


பரிக்ரமா நிறைந்தவுடன் மணிகர்ணிகாகட்டத்திற்கே வந்து வணங்கிவிட்டு ஞானவாபியில் முடித்துகொள்ள வேண்டும். பரிக்ரமாவில்ஐந்து தங்குமிடங்கள்குறிப்பிடபடுகின்றன. இந்தஇடங்களில் மட்டுமே பூஜைகள்சற்று நிதானமாக

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
செய்யபடுகின்றது. மற்றஇடங்களில் வழியில் காணும்தெய்வங்களுக்கு புஷ்பம்,அட்சதை, சந்தனம்,கங்கா ஜலம் ஆகியவற்றைஅர்பணித்த வண்ணமே செல்கின்றனர். ஒரே நாளில் பரிக்ரமாவைமுடிப்பவர் கை கூப்பி தொழுதவண்ணம் சென்று கொண்டேஇருக்கின்றனர்.


தீவிரவ்ருதம் மேற்கொண்டோர் மட்டும்ஐந்தாம் நாளில் கபில் தாராவிற்குபிறகு செல்லும் வழியில்பார்லியை பாதை முழுவதும் ஸர்வ விநாயகர் கோவிலி லிருந்துஸப்த வருண விநாயகர் கோவில்வரை இறைத்து கொண்டே செல்வர்.


ஐந்துதங்குமிடங்களும் அங்குள்ளபூஜிக்கபடும் தெய்வங்களும்.

  1. கர்த்தமேஸ்வர்- இங்கு கிணற்றில் ஸ் நானம். ஐந்து தான்யங்கள் அளித்து சிவாராதனை.
  2. பீம் சண்டி--உக்கிரமான பீம் சண்டி மாதாவிற்கு குங்குமம் ஸெளபாகிய ஸாமாங்களால் ஆராதனை. ஸ்ருங்கார் ஹாரத்தி.
  3. ராமேஸ்வர்--வருணா நதியில் ஸ்நானம்; பிண்ட ப்ரதானம்; லிங்க பூஜை. ஸ்ருங்கார் ஹாரத்தி.
  4. சிவாப்பூர்- பஞ்ச பாண்டவர் கோவிலில் வழிபாடு.
  5. கபில்தாரா- கபில் தார குண்டத்தில் ஸ்நானம். வ்ருஷபத்வஜேஸ்வர மஹா தேவர் ஆலய வழிபாடு. சமபந்தி போஜனம்.

வழியில்தென்படும் தெய்வங்களில் சில.முதல் நாள்;-ஸோமநாதர்; விருபாட்சர்;நீல்கண்டர். இரண்டாம்நாள்;-நாகனாதர்,சாமுண்டா தேவி;மோட்சேஸ்வரர்,கார்ணேஸ்வரர்; வீர்பத்ரர்; உன்மத்தபைரவர்; பீம்லதுர்கா; நந்த கேஸ்வர்;கெளரி ப்ரியர்;விரூபாட்சர்;குஸ்மேஸ்வரர்;பீம்லேஸ்வரர்;ஞானேஸ்வரர்;அம்ருதேஸ்வரர்;கந்தர்வேசர்;


மூன்றாவதுநாள்;-மஹாபீம பைரவர்;பூதநாத்; ஸிந்தூரோடி;குலநதாஸ்வரர்;காமேஸ்வரர்,வீரபத்ரர்;சதுர்முகஞானேஸ்வரர்;டெல்லிவிநாயகர்;குந்தாஸ்வி நாயகர்; உட நாடுவிநாயகர்; தபோபூமி


நாங்காம்நாள்:- பரதேஸ்வர்;லட்ஸ்மனேஸ்வர்;சத்ருக்னேஸ்வர்;பூமிஸ்வர்;ஹரேஸ்வர்; ஐந்தாம்நாள்:-ஜ்வாலாநரசிம்மர்; ஸர்வநாயக்; வருண ஸங்கமம்;
( காசி மாநகருக்குள் நுழைந்து)பிந்து மாதவர்;கவிஷ்டினீஸ்வரர்,மங்கள கெளரி,


வசிஷ்டேஸ்வரர்;வடேஸ்வர்; ஸித்திவிநாயகர்; ஸப்தவருண விநாயகர்;
விசுவநாதர்,அன்ன பூர்ணா; தண்டபாணி,டுண்டி விநாயகர்,கால பைரவர்.

இந்தயாத்திரையை ஆண்டுக்கு இருமுறை செய்யலாம். ஐந்துமுறை பஞ்ச க்ரோசி பரிக்ரமாசெய்தவர்கள் ஸப்த வருணாவிநாயகர் கோவிலில் சிறப்புபூஜை செய்து முடித்து கொள்ளலாம்.


இதை செய்யஇயலாதவர்கள் பஞ்சக்ரோசிமந்திர் என்ற ஆலயத்திலுள்ளசிவலிங்கத்தை தரிசித்தால்போதுமானது என்பது ஒரு ஐதீகம்.
இந்தஆலயம் வாராணாசியில் செளக்பகுதியில் காஷ்மீரி மால்ஹவேலிக்கு பின்புறம்,கோலாகல்லில் உள்ளது.இந்த ஆலயம் தான்அவிமுக்த ஷேத்திரம் என்றும்


மூலவர்தான் ஜ்யோதிர் லிங்கம் என்றும்சொல்ல படுகிறது. பஞ்சக்ரோசி பரிக்ரமா வழியிலுள்ள128 சிவ லிங்கங்களும்இந்த ஆலயதினுள் ப்ரதிஷ்டைஆகி இருக்கிறது.


இந்தஆலயம் அந்தர் கேஹ யாத்ராஆலயங்களுள் ஒன்று. காசிகண்டம் நூறாவது அத்யாயத்தில்அந்தர் கேஹ யாத்ரா பற்றிகுறிப்புகள் உள்ளன.ப்ருஹ்மவைவர்த்த புராணத்திலும்உள்ளது. காசி மாநகரின்உள் வட்டத்திற்குள் உள்ள பலசிவ லிங்கங்களை தரிசனம்செய்வதே அந்தர்கேஹ யாத்ரா.தீர்த்தேந்துசேகரஹ என்ற நூலிலும் இதன்விவரம் உள்ளது.


மற்றதலங்களில் செய்த பாபம் கங்கைகரையில் கரைகிறது. காசிமாநகர் உள் வட்டத்தில் செய்தபாபம் பஞ்ச க்ரோசி ப்ரதட்சினம்விதிபடி செய்தால் போகிறது.
சங்கடமோசன ஆஞ்சனேயர், காசிராஜா அரண்மனை ; சாரநாத்,பனாரஸ் ஹிண்டுயூனிவர்சிடி,பிர்லாமந்திர்,கெளடி மாதாஆலயம், சோழி சமர்ப்பிபதுஸம்ப்ரதாயம்.காசிகேதார் காட் அருகே சுயம்புமூர்த்தி கேதாரேஸ்வரர்ஆலயத்தில் உள்ள தண்ட பாணியைதரிசிக்க வேண்டும்.