கயாயாத்திரை:--

சிராத்தபாரிஜாதம் மற்றும் கயா சிராத்தபத்ததி புத்தகங்களில்தர்ப்பணத்திற்கு பித்ருகணங்கள்இரண்டு கோத்திரங்களுக்குமாக கீழ் வருபவர்களுக்குதர்பணம் செய்யலாம் என்றுசொல்லப்பட்டிருக்கிறது.கயாவில்.: இறந்தவர்களுக்கு மட்டும் தான்தர்பணம்.


தனது அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா;அம்மா,பாட்டி,கொள்ளு பாட்டி;மாற்றாந்தாய்;
அன்னையின்அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா,அன்னையின்அம்மா, பாட்டி,கொள்ளு பாட்டி,


அப்பாவின்சகோதரர்கள், சகோதரர்களின்மனைவிகள், புத்ரன்;புத்ரி; அப்பாவின்சகோதரிகள்; சகோதரிகளின்கணவர்கள்; புத்ரன்;புத்ரி,


அம்மாவின்சகோதரர்கள் ;சகோதரர்களின்மனைவிகள். பையன்,பெண்;அம்மாவின்சகோதரிகள் ; சகோதரிகளின் கணவர்கள்,பையன்;பெண்;


தனதுசகோதரர்கள், ,சகோதரர்களின்மனைவிகள், பையன்,பெண். தனது சகோதரிகள்;சகோதரிகளின்கணவர்கள்; புத்ரன்;புத்ரி.


தனதுமனைவி, பெண்,பையன்.தனது மாமனார்,மாமியார்;
தனதுகுரு; குருபத்னி; சிஷ்யன்;யஜமானன்;சினேகிதன்;பணியாட்கள்;


தனதுவீட்டில் இறந்த செல்ல ப்ராணிகள்,இஷ்ட ஜந்துக்கள்;தனது வம்சத்தில்தெரியாமல் விட்டுப்போனபித்ருக்கள்; இவர்களுக்கும்பிண்டம் தனிதனியே வைக்கவேண்டும்.


ராமேஸ்வரம்,காசி,அலாஹா பாத்தில்17 பிண்டங்கள்வைக்க வேண்டும். இதுதனது அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா:அம்மா,பாட்டி,கொள்ளு பாட்டி,அம்மாவின்அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா;அம்மாவின்அம்மா; பாட்டி;கொள்ளுபாட்டி;காருணீகபித்ருக்கள்; க்ஷேத்ரபிண்டம்-4.


இந்தநா ன்கில் மூன்று தனக்குஉதவியவர்கள்; துர்மரணம் அடைந்துள்ளோர்;வாரிசு இல்லாமல்பிண்டம் கிடைக்காதவர்கள்,நரகத்தில்உழல்பவர்கள்; நமக்குதெரிந்த, தெரியாதஉறவினர்கள், நரகங்களில்கடைதேற வழி எதிர்பார்த்திருப்போர்.ஆகியோருக்காகஇடப்படுகிறது.


நாங்காவதுபிண்டம் தர்ம பிண்டம் --தர்மதேவதைக்கும்,பிண்டம்கிடைக்காது தவிக்கும் மற்றஅனைத்து ஆத்மாக்களுக்கும்இடப்படுகிறது.


ஆதலால்மு ன்னதாகவே அம்மாவின்சகோதரிகளின் கோத்திரம்,சர்மா ,பெயர்மற்றும் அப்பாவின் சகோதரிகளின்கோத்திரம், சர்மா,பெயர் பட்டியல்தயார் செய்து கொண்டு கயா செல்லவேண்டும்.


உத்தேசம்ஆக64 பிண்டங்கள்கயா வில் என்று சொல்லபடுகிறது.காரூணீகபித்ருக்கள் ஒவ்வொருவருக்கும்ஒரு பிண்டம் என்று வைக்கும்போது சிலருக்கு இதற்கு அதிகமும் தேவை படலாம்.அதிகம்தேவை படுபவர்கள் மட்டும்முன்னதாக தனியாக ஏற்பாடுசெய்து கொள்ள வேண்டும்.


மாத்ருஷோடசீயை தவிர புருஷ ஷோடசி 19பிண்டங்கள்.ஸ்த்ரீ ஷோடசி19 பிண்டங்கள்சிலர் இடுவர்.ஒரேநாளில் கயா ஸிராத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும் என்றால்இவ்வளவு பிண்டங்கள் செய்துகார்யம் செய்து முடிக்கமுடியாது.


கயாவிலுள்ள புண்ணிய தலங்கள்தீர்த்தங்கள் பின்வருமாறு:-- சிராத்த பாரிஜாத்என்ற புத்தகத்தில் உள்ளது.ப்ருஹ்ம குண்டம்;ப்ரேத பர்வதம்;ப்ரேத சிலா;ராம குண்டம்;ராம சிலா;உத்திர மானஸ்;ஸூர்ய குண்டம்;கனக்கல்;தக்ஷிண மானஸ்;பல்குனதி;ஜிஹ்வாலோலம்;


ஸரஸ்வதிதீர்த்தம்; மதங்கவாபி;தர்மாரண்யம்;புத்த கயா;ப்ரஹ்ம ஸரோவர்,விஷ்ணுபாதம்;ருத்திர பாதம்;ப்ருஹ்ம பாதம்;கார்த்திகேயபதம்; தக்ஷிணாக்னிபதம்; கார்ஹபத்னியாக்னிபதம்ஆவஹயாக்னிபதம்; ஸூர்யபதம்; சந்திரபதம்; ஸப்யாக்னிபத,கணேச பதம்;ஸப்யாக்னிபதம்;


ஆவஸ்த்யாக்னிபதம்; மாதங்கபதம்; க்ரெளஞ்சபதம்;இந்திர பதம்;அகஸ்த்ய பதம்;தெளதபதம்;கஸ்யபபதம்;கஜகர்ணம்;ராம பாதம்;ஸீதா குண்டம்;கயா சிரஸ்;கயா கூபம்;முண்டப்ருஷ்டம்;ஆதி கயா;பீம கயா; கோப்ரசார்;கதாலோலம்;வைதரணி;அக்ஷய வடம்;


17 நாட்கள்;8 நாள். 5நாள்; 3நாள் ;ஒரேநாள்; ஆகியபல்வகையாக பல கட்டங்களில்
சிராத்தம்செய் முறைகள் பழைய புத்தகங்களில் உள்ளது.

இதில்அஷ்ட கயா சிராத்தம் செய்பவர்கள்கூப கயா; மதுகயா; பீமகயா; வைதரணி;கோஷ்பதம்;பல்குகங்காநதி தீரம்; விஷ்ணுபாதம்;அக்ஷய வடம்ஆகிய இடங்களில் 8 நாட்கள் கயாவில் தங்கி ஒவ்வொரு நாளும்ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.


பஞ்சகயா சிராத்தம் செய்ய விரும்புவோர்பல்குகங்கா நதி; கயாசிரஸ்; ப்ரஹ்மசிரஸ்;ப்ரேத சிலா;மதங்க வாபிஆகிய இடங்களில் செய்தல்வேண்டும்.5 நாட்கள்தங்கி தினம் ஒன்றாக செய்யவேண்டும்.


ஒளபாசனஅக்னியில் தான் கயா சிராத்தம்செய்ய வேண்டும். ஆதலால்மனைவியை அவசியம் அழைத்துசெல்ல வேண்டும்.


கர்த்தாவின்தாய் உயிருடன் இருந்தால்அம்மா வர்கத்திற்கு வரணம்,பிண்டம் இல்லை.
பெற்றோர்உயிருடன் இருப்பவர்களுக்குகயா சிராத்தம் கிடையாது.பிள்ளை இல்லாவிதவை பிள்ளை இருந்தும் வரஇயலாத நிலைமையிலும் இருப்போர்ஒரு ப்ராஹ்மணர் மூலமாக கயாசிராத்தம் செய்ய வேண்டும்.


தாய்இல்லாத, தகப்பன்மட்டும் ஜீவித்திருக்கும்கர்த்தா அம்மாவிற்கு பார்வணசிராத்தம் மட்டுமே செய்யமுடியும் கயாவில். பல்குநதி தீரம்; விஷ்ணுபாதம்;அக்ஷயவடம் சிராத்த, பிண்டதானம் செய்ய முடியாது. ஆனால் மற்றநதீ தீரங்களில் அப்பாவிற்குயார் பித்ரு தேவதைகளோ அவர்களைஉத்தேசித்து கர்த்தா தீர்த்தசிராத்தம் செய்யலாம்.


கயாவிற்குபிண்ட தானம் செல்லும் வழியில்பாதியில் திரும்ப நேர்ந்தால்ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ளவேண்டும்.யாத்திரைமத்தியில் தீட்டு குறுக்கிட்டால், நிவ்ருத்திஆன பிறகு தொடர வேண்டும்.மாத விடாய்குறுக்கிட்டால் ஐந்து நாட்கள்ஆன பிறகு தொடர வேண்டும்.


கயாவில்மங்களா கெளரி கோயில்,புத்த கயா,ப்ருஹ்ம யோனி,மாத்ரு யோனிகோவில்கள்
குன்றுக்குள்மிக குறுகலான பாதைகள் உள்ளன,.ஊர்ந்து சென்றுமீள இயல்வோர்கு மீண்டும்கருவடையும் கஷ்டம் இருக்காதுஎன்று ஒரு நம்பிக்கை.


புத்தகயாவிலிருந்து மூன்று கிலோமீட்டரில் தர்ம ராஜர் யக்யம்செய்த இடம் உள்ளது.இங்கிருந்து10 கிலோமீட்டர் தூரத்தில் அக்ஷயவடம் உள்ளது. இங்கிருந்துமூன்று கிலோ மீட்டர் தூரத்தில்விஷ்ணுபாதம் உள்ளது.


மாலைவேளையில் விஷ்ணு பாதத்தின்மேல் ஒரு வெள்ளை துணி இட்டுநகல் எடுத்து கொடுப்பார்கள்.அதை உடனே எதிரில்உள்ள கடையில் கொடுத்தால் அதைஅழகு படுத்தி மறு நாள் கொடுப்பர்.அதை லேமினேட்செய்து ஊருக்கு எடுத்து வந்துப்ரேம் போட்டு,


யாத்ராஸமாராதனை அன்று ஆவாஹனம் செய்துபூஜித்து பூஜை அறையில் வைத்துகொண்டு தாய் தந்தையர்சிராத்தமன்று சந்தன கட்டைக்குபதிலாக இந்த விஷ்ணு படத்தைவிஷ்ணு ப்ரதினிதியாக பயன்படுத்தலாம்.


கயாவில்தங்க வேண்டுமென்றால் பழையவேஷ்டி, பேட்டரியுடன்கூடிய டார்ச் லைட், கொசுவத்தி , ஸ்ப்ரே,மெழுகுவர்த்தி,குடிக்க தேவையானகுடி தண்ணீர் கேன் ,காசியிலிருந்துஎடுத்து வர வேண்டும்.


கயாவில்முடி வெட்டுதல், கிடையாது. வேத அத்யயனம்செய்ய வேண்டும். வேதங்களில்உள்ள கர்மாக்களை செய்ய வேண்டும்.தீர்த்தாடனம்செய்ய வேண்டும். சரீரத்தைவருத்திக்கொண்டு கர்மாக்களைசெய்வதினால் பாப விமோசனம்கிடைக்க பெற வேண்டும்.


நம்பிக்கையுடன்செய்யப்படும் கார்யங்களால்தான் உலகம் உருவாகி இருக்கிறது.சிராத்தம்செய்வதால் தர்மம் நிலை நிறுத்தபடுகிறது. சிராத்தம்செய்வதால் யாகம் செய்த பலன்கிடைக்கிறது. மனஆசைகள் கிடைக்கிறது.
ஒருபுத்திரன் புத்திரனாக பிறந்தபலனை முழுவதுமாக பெற பெற்றோர்ஜீவித காலத்தில் அவர்கள்சொல் படி கேட்டு நடத்தல்.அவர்கள் இறந்தபின் சிராத்தம் , பித்ருபோஜனம் செய்வித்தல்;கயாவிற்குசென்று பிண்ட தானம் செய்தல்ஆகியமூன்றும் செய்தல் வேண்டும்.


கயாவில் மஹா விஷ்ணுவை ஆதி கதாதரராகத்யானம் செய்து பிண்ட ப்ரதானம்,சிராத்தம்செய்பவன் தனது பரம்பரையில்நூறு தலை முறையை கரை ஏற்றிப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்கசெய்கிறான்.


பொதுவிதியாக சாந்திரமான படி அதிகமாதம், குருசுக்கிர அஸ்தமன காலங்களில்க்ஷேத்ராடனம் செய்ய கூடாதுஎன்று உளது. வைத்னாததீக்ஷிதீயம் சிராத்த காண்டத்தின்படி காசி, கயா,கோதாவரிக்குமட்டும் விதி விலக்கு உள்ளது.


கயாவில்செய்யும் தீர்த்த சிராத்தங்களுக்குஆவாஹனம் கிடையாது.அன்னியரால்பார்க்கபடும் தோஷம் கிடையாது.கயாவில்அங்கு கடை பிடிக்கபடும்ஸம்ப்ரதாயங்களே முக்கியம்.வெளியூர்ஸம்ப்ரதாயங்கள், ப்ரயோகபத்ததிகள், மடி,ஆசாரம்,ஜாதிகளின்வித்தியாசமான ஸம்ப்ரதாயங்கள்,குலங்களின்தனித்வம் ஆகிய அனைத்தும்தள்ளுபடி.


அங்குள்ளஆசார்யன் சொல்வதை கேட்டுஅதன் படி க்ரியைகளை பரிபூர்ணமாக்கிமன நிறைவு பெற வேண்டும்.


சிராத்தஆரம்பத்திலும், நடுவில்,முடிவில்மூம்மூன்று தடவை பித்ருமந்திரம் ஜபிக்க வேண்டும்.பித்ருமந்திரம்:---தேவதாப்யஸ்சபித்ருப்யஸ்ச மஹாயோகிப்யஸ்சஏவச
நமஹ்ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவநமோ நமஹ.


கயாசிராத்தம் , கயாவில்குறைந்த பக்ஷம் மூன்றுசிராத்தங்கள் ஒரே நாளில்செய்யபடுகிறது. தான்தங்கி இருக்கும் சாவடியில்ஒன்று. பல்குநதி கரையில் மண்டபத்தில்இரண்டு. பல்குநதியில் ஊற்று தோண்ட நீர்எடுத்து குளிக்க அல்லதுப்ரோக்ஷித்துகொள்ள வேண்டும்.
பல்குநதியில் நீராடி ஈரம் ஆனாலும்ஆகாவிட்டாலும் அதே வஸ்த்ரத்தைதான் அக்ஷயவட சாயா கிரியைகளைமுடித்து திரும்பும் வரைஅணிந்திருக்க வேண்டும்.பல்குநதிகரை மண்டபத்தில் ஸங்கல்பம்,பல்கு தீர்த்தஸ்னானம் அல்லது ப்ரோக்ஷணம்,பிறகு பல்குதீர்த்த சிராத்தம்,பிறகு பிண்டப்ரதானம்.


பலகர்த்தாக்களுக்கு ஒன்று சேரக்ரியைகள் நடக்கும்.அந்தந்தகர்தாவிற்கு மண்டபத்திலேயேதனி தனி மண் பானைகள் அவரவர்மனைவிகள் அன்னம் தயாரிக்கவகை செய்ய படுகிறது.
அவற்றில்ஒரு பானை அன்னத்தில் பல்குதீர்த்த சிராத்தமும்,17 பிண்டங்கள்வைத்து பிண்ட ப்ரதானமும்செய்ய வேண்டும்.


மற்றொருபானை அன்னத்தில் விஷ்ணுபாதசிராத்தத்திற்கும் ,64 பிண்டங்கள்வைத்து பிண்ட ப்ரதானமும்செய்ய வேண்டும்.அன்னம்தயாரிக்கும் மண்டப பகுதியிலிருந்துகர்த்தாக்கள் சிராத்தம்செய்யும் பகுதிக்கு ஏறி இறங்கிவரும் படிகள் மிக செங்குத்தாகஇருப்பதால் கவனம் தேவை.


பல்குநதி 17 பிண்டப்ரதானம் முடிந்த வுடன்பிண்டங்களை பல்கு நதி நீரில்கரைக்க வேண்டும்.பசுமாட்டிற்கு வைப்பது இரண்டாம்பக்ஷம். இங்கேயேவிஷ்ணுபாத ஹிரண்ய சிராத்தம், 64 பிண்டம்வைத்து பிண்ட ப்ரதானம் செய்துஇந்த 64 பிண்டங்களைஎடுத்து சென்று விஷ்ணு பாதத்தில்கொட்டி வணங்க வேண்டும்.தர்பணங்கள்இல்லை.


அவரவர்தங்கி இருக்கும் இடங்களுக்குஇந்த 64 பிண்டங்களுடன்திரும்பி சென்று, அங்கேதாக சாந்தி செய்து கொண்டுஅக்ஷய வட கயா சிராத்தம் பார்வணமுறைப்படி ஹோமத்துடன் செய்யவேண்டும், குறைந்தது5 கயா வாலிஅந்தணர்களை வரித்து போஜனம்செய்து வைக்க படுகிறது.இதற்காகத்தான்கயா வருகிறோம். அப்பாவர்கம், அம்மாவர்கம், அம்மாவின்அப்பா அம்மா வர்க்கம்.விசுவேதேவர்,காருண்ய பித்ருஎன ஐந்து பேர்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இந்தகயா வாலீ அந்தணர்களுக்குஒவ்வொருவற்கும் குறைந்தபக்ஷமாக வேஷ்டி--அங்கவஸ்திரம்,விசிறி,ஆஸனம்,தீர்த்த பாத்திரம்,தக்ஷிணைதர வேண்டும், உங்கள்ஊரிலிருந்து இவைகளை வாங்கிகொண்டு வந்து கொடுக்க வேண்டும்.மிக சிறந்ததேன், நெய்உங்கள் ஊரிலிருந்து வாங்கிவந்து இங்கு இவர்களுக்குகொடுக்க வேண்டும்.


ஒருசாவடியில் ஒரே சமயத்தில் பலகர்த்தாக்கள் சிராத்தம்செய்தாலும் அவரவர்களுக்குதனி தனியே சிராத்த சமையல்செய்யப்பட வேண்டும்.அவரவர்மனைவியே சமையல் செய்யலாம்.சிப்பந்திதனியாக ஏற்பாடு செய்தும்செய்யலாம்.


கர்த்தாவின்மனைவியே அன்னம், பாயஸம்,பரிமார வேண்டும்.ஆபோசனம்,உத்திராபோஜனம்,கர்த்தாவின்மனைவியே போட வேண்டும்.


பித்ருபோஜனம் முடிந்த உடன் கயாவாலிகட்கு விடை கொடுத்துஅனுப்பி விட்டு , நைவேத்தியபக்ஷணங்கள், 64 பிண்டங்கள்எடுத்து க்கொண்டு அக்ஷய வடசாயாவிற்கு செல்ல வேண்டும்,.இங்குதான்பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்.


அக்ஷயவட சாயாவில் ஒரு ப்ராஹ்மணபோஜனம் செய்தால் ஒரு கோடிப்ராஹ்மண போஜனம் செய்த பலன்உண்டு. முன்னோர்களுக்குப்ரஹ்மலோக ப்ராப்தி கிடைக்கிறதுஎங்கிறது கயா மாஹாத்மியம்எனும் புத்தகம்.


பித்ருபோஜனம் சாப்பிட்ட ஒருவர்அக்ஷய வட சாயாவிற்கு வருவார்.அவரிடம் த்ருப்திகேட்டு பெற வேண்டும்.ஒரு இலை,ஒரு காய்,ஒருபழம் ஆகியவற்றை ஆயுட் காலம்முடியும் வரை பயன்படுத்தமாட்டோம் என கர்த்தாவும்,அவரது மனைவியும்ஸங்கல்பம்


செய்துகொள்ள வேண்டும். இந்தஇலை, காய்,பழத்தினைகார்த்திகை மாதத்தில் உங்கள்ஊரில் நிறைய தானமாக வழங்கவேண்டும். இந்தகாய் ,இலை,பழத்தினைஇவர்கள் இறந்த பிறகு வருடாவருடம் வரும் சிராத்தத்தில்உபயோக படுத்த கூடாது.இவர்கள்விடும் காய்,பழம்ப்ரத்யாப்தீக சிராத்தத்தில்உபயோக படுத்த கூடியதாக இருக்கவேண்டும்.


கயாவில்சிராத்தம் செய்து வைத்தவாத்யாருக்கு அக்ஷய வடசாயாவிலேயே வஸ்த்ர தானம்,ஸம்பாவனைபோன்றவற்றை கொடுக்கவேண்டும்.கர்த்தாவிடும்காய், பழம்வாங்கி கயா வாத்யாருக்குகொடுக்க வேண்டும். அல்லதுஇதற்குண்டான பணம் தர வேண்டும்.


பிறகுகர்த்தா தான் தங்குமிடம்வந்து சாப்பிட வேண்டும்.னிச்சயம் 3மணிக்குமேலாகிவிடும்.


பிறகுகிளம்பி காசி செல்ல வேண்டும்.