காசியில் செய்ய வேண்டியவைகள்.இந்த தலத்தில் பந்த பாசங்களும் இதற்கு ஆதாரமான அஞ்ஆனமும் சுட்டெறிக்கபடுகிறது. மனித பிறவி கிடைத்தல் அரிது. காசி வாசம் கிடைத்தல் அரிது. இது இரண்டும் சேர்ந்தால் முக்தி கிடைப்பது நிச்சயம்.

முதுமையில் வாடி, பிணிகளால் அவதி பட்டு வாடுவோர்க்கு வாராணசியே கதி.


சாஸ்திரங்களில் விதிக்க பட்டுள்ள ஆசார அனுஷ்டானங்களை மதியாமல் வாழ்ந்தோர்க்கு வாராணசியே கதி.


காசியில் வடக்கு நோக்கி செல்லும் கங்கையில் ஸ்நானம் செய்து பக்தியுடன் விசுவ நாதரை தரிசிக்க வேண்டும்.


காசி விசுவ நாதரின் கருவரை லிங்கத்திருமேனியை , வரிசையாக சென்று கங்கா ஜலம் கொண்டு தாங்களே அபிஷேகம் செய்து ஐயனின் திருமேனியை தொட்டு


வணங்க அனைவருக்கும் அனுமதி உண்டு.
ஸப்த ரிஷி பூஜை:- ஒவ்வொரு நாளும் மாலை 7 மணிக்கு எழுவர் வந்து விரிவான அபிஷேக, ஆராதனை அலங்காரங்களை செய்து கற்பூர ஹாரத்தி காட்டுவார்கள். இதை அவசியம் காண வேண்டும்.


மணிகர்ணிகா கட்டத்தில் ஸ் நானம் செய்து விட்டு, இங்க்கு ஞானவாபியிலும் ஸ் நானம் செய்து விட்டு ஞ்ஆன வாபியின் பின் பக்கத்தில் உள்ள தாரகேஶ்வரரை தரிசனம், வழிபாடு செய்ய வேண்டும்.


இதனால் தாரக மந்திரம் ஞ்ஆனம் ஸித்திக்கும்.பிறகு இங்குள்ள சூலடங்கேஸ்வர லிங்கத்தை தரிசிக்க வேண்டும்.


சிவ பார்திவ லிங்க பூஜை:-
ஓம் ஹராய நமஹ என்று சொல்லி மண்ணை எடுத்து ஓம் மஹேஸ்வராய நமஹ என்று சொல்லி நீர் ஊற்றி பிசைந்து இங்கமும் பீடமும் செய்ய வேண்டும்.


ஓம் ஶூல பாணயே நமஹ என்று சொல்லி ஜலம் ப்ரோக்சனம் செய்க. ஓம் பசுபதயே நமஹ என்று சொல்லி பூஜை செய்க; ஓம் மஹாதேவாய நமஹ என்று சொல்லி ஜலத்தில் கரைத்து விட வேண்டும். இதுவே மிக எளிதான பார்த்திவ லிங்க பூஜை.


கால பைரவர் ஆலயத்தில் கால பைரவாஷ்டகமும், அன்னபூரணி ஆலயத்தில் அன்ன பூரணாஷ்டகமும், விசுவ நாதர் ஆலயத்தில் விசுவ நாதாஷ்டகமும் ஒரு முறையாவது பாராயணம் செய்து மன நிறைவு பெற வேண்டும்.


பஞ்சாட்சரம் ஓதி சிவனை வில்வத்தால் சிரத்தையுடன் அர்ச்சிக்க வேண்டும்.


இலை, புஷ்பம், பழம், ஜலம், அன்னம், பானம், நெய் , மருந்து போன்ற எந்த பொருளையும் சிவார்ப்பணம் செய்தே உட்கொள்ள வேண்டும்.


சிவனின் ப்ரஸாதம் வரும் போது அதை வாங்கி கைகளை தலைக்கு மேல் தூக்கி வணங்கி சிவ நாமம் சொல்லிய வண்ணம் பய பக்தியுடன் சாப்பிட வேண்டும்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி; தில்லையை தரிசித்தால் முக்தி; அண்ணா மலையாரை நினைத்தாலே முக்தி; காசியில் மரிக்க முக்தி.


தர்ம ஸாதனங்கள்:- பொய் பேசாமை; மடி-ஆசாரமாய் இருத்தல்; அஹிம்சை; சாந்தம்,வள்ளல் தன்மை, கருணை, அடக்கம், புலனடக்கம், திருட்டு புத்தி இல்லாமை
இவையே அற நெறி பற்றி ஒழுகும் வழிகள்.
காசியில் முதல் நாள் காலை தங்கியுள்ள இடத்திலேயே ஸ்நானம் செய்து சுத்த ஆசார வஸ்த்ரம் அணிந்து விக்னேஸ்வர பூஜை செய்து விட்டு, கங்கா ஸ்நான ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். கிரஹ ப்ரீதி, க்ருச்சராசரணம், ப்ராயஸ்சித்தங்கள், தானங்கள் செய்ய வேண்டும்.


அருகிலுள்ள கங்கா கட்டத்திற்கு சென்று ஸ்நானம் செய்து விட்டு வர வேண்டும். தங்கி இருக்கும் இடத்தில் தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். பார்வணமாக செய்வது சாலச்சிறந்தது. 17 பிண்டங்கள் வைத்து பிண்ட தானம் செய்ய வேண்டும். தர்ப்பணம் .பிண்டங்களை பசுவிற்கும் தரலாம். கங்கையிலும் கரைக்கலாம்.


5 சாஸ்த்ரிகளுக்கு -9-5 வேஷ்டி, ஹோமம் உண்டு. சாப்பாடு உண்டு.


இரண்டாம் நாள் காலையில்:-- பஞ்ச கட்ட ஸ்நானம், சிராத்தம், பிண்ட ப்ரதானம், தர்பணம், போட்டில் சென்று செய்து வர வேண்டும்.


மூன்றாம் நாள் காலையில்:-- தம்பதி பூஜை:- 9-5 வேஷ்டி; 9 கஜம் புடவை, ரவிக்கை துண்டு, திருமாங்கல்யம், மெட்டி, வளையல், கண்ணாடி, மஞ்சள், குங்குமம், நலங்கு சாமான்கள், பால் கொடுக்க கிண்ணம், ஸெளபாக்கிய திரவியங்கள், உங்கள் ஊரிலிருந்தே வாங்கி வருவதே நல்லது.
ஒரு ஸ்வாசினியும், அவரது கணவரயும் வரித்து தம்பதி பூஜை செய்வது நல்லது.


ஸுவாசினி என்பவர்:-- தனக்கு மட்டும் கணவராக உள்ள , தனது ஒரே கணவரோடு சேர்ந்து மகிழ்ந்து இல் வாழ்க்கை நடத்தும் ஸுமங்கலியாகவும், தனக்கு பிறந்த குழந்தைகள் அனைத்தும் ஜீவித்து கொண்டிருக்கிற பேறு பெற்றவறாகவும்,
இனியும் கூட தன் கணவரோடு மகிழ்ந்திருந்து மழளை செல்வங்களை ஈன்றெடுக்கும் பாக்கியம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இவருக்கே ஸுவாஸினி என்று பெயர்.


தம்பதி பூஜைக்கு பிறகு ஸமாராதனை 5 ப்ராஹ்மணர்கள் வைத்து செய்ய வேண்டும்.
பஞ்ச கங்கா கட்டத்தில் ஸ்நானம் செய்து பித்ரு தர்ப்பணம் செய்து பிந்து மாதவரை அர்சிப்பவருக்கு புனர்ஜன்மம் கிடையாது. இங்கு பித்ரு தர்ப்பணத்தில் எந்த எண்ணிக்கையில் எள் தரப்படுகிறதோ அத்தனை வருடங்களுக்கு பித்ருக்களுக்கு த்ருப்தி ஏற்படுகிறது.


காலை வேளையில் ஆரம்பித்து ஐந்து கட்ட ஸ்நானம், ஐந்து தீர்த்தக்கரை ஶ்ராத்தம், பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும். 1. அஸி கட்டம்,2. த்ரிலோசன கட்டம்,3. பஞ்ச கங்கா கட்டம், 4. தஶாஸ்வமேத கட்டம், 5. மணிகர்ணிகா கட்டம்.


பஞ்ச கட்ட தீர்த்த ஶ்ராத்தத்திற்கு செல்லுமுன் தங்கி இருக்கும் இடத்தில் ஸ் நானம் செய்து விட்டு ஸுத்த வஸ்த்ரம் பாரம்பரிய முறையில் உடுத்திக்கொண்டு ,ஸங்கல்பம் செய்து கொண்டு கிளம்ப வேண்டும்.


அருகில் உள்ள ஒரு கங்கா ஸ்நான கட்டத்தில் ஸ்நானம் செய்துவிட்டு படகில் ஏறிக்கொள்ள வேண்டும். படகில் குமுட்டி அடுப்பு, பாத்திரங்கள் தயாராக இருக்கும்.


படகில் ஏறிய கட்டத்திலிருந்து , முதல் கட்டமான அஸி கட்டத்திற்கு படகு சென்று கொண்டிரிக்கையில் கர்த்தாவின் மனைவி சிறிது அரிசி போட்டு ,கங்கை தண்ணிரை வேண்டிய அளவு விட்டு அன்னத்தை தயாராக்கி 17 பிண்டங்களும், சிறிது உதிரி அன்னம் நிவேதனத்திற்கும் தயாராக்கி கொள்ள வேண்டும்.
அஸி கட்டத்தை அடைந்தவுடன் , அங்கே தம்பதியர் இருவரும் ஸ்நானம் செய்து விட்டு , ஹிரண்ய ஶ்ராத்தம் செய்து, 17 பிண்டங்களை கொண்டு பிண்ட ப்ரதானம் செய்து , பிண்டங்களை கங்கையில் கரைத்து விட வேண்டும்.


பின்னர் தர்ப்பணம், -பாத்திரங்களை நன்கு தேய்த்து அலம்பி எடுத்து கொள்ளவும். தர்பைகளை கங்கையில் போடக்கூடாது. படகில் ஏறி அமர்ந்து அடுத்த கட்டதிற்கு (த்ரிலோசன் கட்டம்)படகு செல்வதற்குள் சிறிது அரிசி போட்டு வேக வைத்து 17 பிண்டங்கள் உதிரி அன்னமும் கர்த்தாவின் மனைவி தயார் செய்திட வேண்டும்.


அடுத்த கட்டம் அடைந்த வுடன் மீண்டும் தம்பதியர் ஸ்நானம், ஸ்ராத்தம், பிண்ட ப்ரதானம், பிண்டம் கரைத்தல், தர்ப்பணம், பாத்திரங்களை நன்கு தேய்த்து அலம்பி எடுத்து கொள்ளுதல், படகில் ஏறி உட்கார்ந்து அடுத்த கட்டம் (பஞ்ச கங்கா கட்டம்) செல்வதற்குள் சிறிது அரிசி போட்டு வேக வைத்து 17 பிண்டம், உதிரி அன்னம் தயார் செய்து கொள்ளுதல்.


அடுத்த கட்டத்தில் தம்பதியர், ஸ்நானம், ஹிரண்ய சிராத்தம், பிண்ட ப்ரதானம், பிண்டங்கள் கங்கையில் கரைத்தல், பாத்திரம் தேய்த்தல், தர்ப்பணம். இங்குள்ள பிந்து மாதவரை அவசியம் செங்குத்து படிக்கட்டுகளை பொறுமையாக இறை சிந்தனையுடன் மேலே ஏறி தரிசித்து பிறகு படகில் ஏறி உட்கார்ந்து அடுத்த கட்டம் அடைதல்.(தசாஸ்வமேத கட்டம்)


படகில் வரும்போது சிறிது அரிசி போட்டு வேக வைத்தி அன்னமாக்கி 17 பிண்டங்கள், உதிரி அன்னம் தயாரிக்க வேண்டும். இந்த கட்டத்தில் ஸ்நானம், ஹிரண்ய சிராத்தம், பிண்ட ப்ரதானம், பிண்டம் கரைத்தல், தர்ப்பணம் முடித்து கொண்டு


படகில் ஏறி சிறிது அரிசி போட்டு கங்கை தண்ணிரிலேயே வேக வைத்து 17 பிண்டம், உதிரி அன்னம் தயாரிக்க வேண்டும். படகு இப்போது ஐந்தாவது கட்டமான மணிகர்ணிகா கட்டம் வந்தடையும். இனு ஒரு தடாகம் உள்ளது, முதலில் இதில் ஸ் நானம் செய்ய வேண்டும். பின்னர் கங்க்கையில் நீராட வேன்டும்.


ஹிரண்ய சிராத்தம், பிண்ட ப்ரதானம், பிண்டம் கரைத்திடல், தர்ப்பணம் முடிக்க வேண்டும். கங்கை கரையிலுள்ள ஸுமங்கலியர் களுக்கு ரவிக்கை துண்டு , ஸெளபாக்கிய சாமாங்கள் கொடுத்து ஆசி பெறலாம். கங்கை பூஜை செய்ய வேண்டும்.
16 உபசார பூஜை கங்கைக்கு செய்ய வேண்டும். பூஜை முடிந்த வுடன் கங்கைகென சாற்றியிருந்த வஸ்த்திரம், ஆபரணம், செளபாக்கிய சாமாண்கள் போன்றவற்றை படகோட்டிக்கு தானமாக தந்திடல் வேண்டும்.


கால பைரவர் காசிக்கு ஷேத்திர பாலகர். இது விசுவ நாதர் கோயிலுக்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கால பைரவரை செவ்வாய் கிழமை, ஞாயிறு கிழமை, அஷ்டமி, சதுர்தசி போன்ற நாட்களில் தரிசிப்பது மிக நல்லது.


இங்கு பண்டாவினால் மயில் பீலியினால் தரப்படும் அடியே காலபைரவரினால் நமக்கு தரப்படும் தண்டனை. இதை பெற்று கொண்ட பின் பிறகு மீண்டும் பாவ செயல்களை செய்யக்கூடாது.


கால பைரவர் ஆலயம் செல்லும் வழியில் கரு நிற ரட்சை கயிறு தேவைப்பட்ட எண்ணிக்கை வாங்கி கொண்டு பூஜாரியிடம் கொடுத்து பைரவர் பாதத்தில் வைத்து வாங்கி வர வேண்டும்.


இந்த ரட்சை கயிறை யாத்திரை முடிவு அடைந்தபின் செய்யும் ஸமாராதனை போது இந்த ரட்சை கயிற்றில் கால பைரவரை ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை செய்து பிறகு எல்லோருக்கும் இந்த கயிற்றை கொடுக்க வேண்டும்.Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇந்த மூன்று நாட்கள் காலை வேளை காசியில் முடிந்து சாப்பிட்ட பிறகு மாலை வேளையில் கோவில்கள் சுற்றி பார்த்து வர வேண்டும்.


காசியை காலை 8 மணிக்கு மேல் சென்றடைந்தால் ஆலயங்கள் பார்ப்பதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும், கங்கா ஹாரத்தி தரிசனம், ஸப்தரிஷி பூஜை பார்ப்பதற்கும் இந்த நாளை ஒதுக்க வேண்டும்.


காசிக்கு மாலை வேளையில் வந்தடைந்தால் தசாஸ்வமேத கட்டத்தில் நடக்கும் கங்கா ஆரத்தி 6-30 மணி அளவில் ஆரம்பிக்கும்.இதை கண்டு களியுங்கள். அல்லது ஸப்த ரிஷி பூஜை விசுவ நாதர் கோயிலில் 7-30 மணிக்கு ஆரம்பிக்கும். இதை பாருங்கள்.
காசி விசுவ நாதர் ஆலயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக கடுமையாக உள்ளது.


தேவையற்ற பொருட்களை கையில் எடுத்து செல்லாதீர்கள். ஒரு பொருளுக்கு உள்ளே எடுத்து செல்ல அனுமதி கிடைக்காவிட்டால் இதை இழக்க வேண்டி வரும்.
காசியில் எத்தனை நாட்கள் காலை வேளயில் இருக்கிறீர்களோ அத்தனை நாட்களும் ஸங்கல்பம் செய்து கொண்டு கங்கையில் ஸ்நானம் செய்யுங்கள்.


பல முறை கங்கா ஸ்நானம் செய்த த்ருப்தி மனதில் வர வேண்டும். கங்கையில் வெள்ள பெருக்கு ஏற்படும் நாட்களில் படகு ஓட்ட அரசு தடை விதிக்கும். கடுங்குளிர் காலமான நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி யாத்ரீகர்கள் குறைவாகவே வருவர். கடும் கோடை காலமான ஏப்ரல், மே. ஜுன் மாதங்களிலும் யாத்ரீகர்கள் குறைவாகவே வருவர். தீபாவளி, தை திரு நாள் திரு விழா காலங்கள்.


சிறு சந்துகள் அதிகம். அதில் தடை விதிக்க பட்டிருந்தாலும் இரு சக்கர வாஹனம் பயங்கரமாக செல்லும். கவனம் தேவை. மாலை வேளியில் கடை வீதிகளில் சைக்கிள் ரிக்ஸா கூட செல்ல நிரந்தர தடை உண்டு. விவரங்கள் கேட்டு அறிந்து செல்ல வேண்டும்.


காசியில் ஷாப்பிங் செய்வோர் காசியில் அனுபவம் பெற்று உள்ளோர் துணை கொண்டு தெரிவு செய்து வாங்குவதே புத்தி சாலித்தனம்.