சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*நந்தினிபசு பெற்ற சாபம்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
ஜாபாலி முனிவனிடம் காயத்ரி மந்திரத்தைக் கற்றுக் கொண்டான் அருணாகரா எனும் அரக்கன்.


பின் பிரம்மாவை வேண்டி தவமிருந்தான்.


அவனின் தவத்திற்கு மனமிரங்கிய பிரம்மன் அசுரனின் முன்னே காட்சி தந்து....என்ன வரம் வேண்டி தவமிருந்தாய்? கேள் என்றார்.


அருணாகரன் பிரம்மாவிடம்....
எனக்கு *சாகா வரம் வேண்டும்* என்றான் அசுரன்.


பிரம்மாவோ....பிறந்தவர் இறப்பை அடைவது விதி. பிறக்கும் அத்தனை பேர்க்கும் இது பொருந்தும். ஆக அழியா வரமருள இடமில்லை. என கூறிவிட்டார்.


அசுரனோ...சரி!..அப்படியானால்,
நான் காயத்ரி மந்திரம் சொல்லும் வேளையிலாவது தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், போன்றவைகளால் எனக்கு அழிவு நேரக்கூடாது!--இந்த வரத்தையாவது தந்தருள வேண்டும் என கேட்டான் அசுரன்.


அவன் கேட்டபடி வரத்தை தந்து விட்டார் பிரம்மன்.


வரத்தைப் பெற்ற அசுரன் பின், முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள், விலங்குகளை கொடுமைப்படுத்தினான். தன்னையல்லாது யாரையும் நீங்கள் வணங்கக்கூடாது என்று துன்புறுத்தினான். தன்னை வணங்க மறுத்தவர்களை சிறைபடுத்தி வசை செய்தான்.


இப்படி வணங்க மறுத்து , சிறை பிடிக்கப்பட்டவர்களில் வருணபகவானும் ஒருவர். வருணன் சிறை பட்டிருந்ததால், பூலோகத்தில் மழை பெய்விக்க முடியாது போனது. மனிதர்கள் விலங்களெல்லாம் மழை இல்லாமல் மடிந்து கொண்டிருந்தன.


உலக உயிர்களைக் காபாற்ற தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நாடினார்கள். அவர்களிடம் சிவபெருமான்....பார்வதிதேவி பூமியில் தோன்றி அந்த அசுரனை வதைத்தழிப்பார் என்று ஆறுதல் கொடுத்தனுப்பி வைத்தார்.


இந்த நிலையில், தன்னிடம் காயத்ரி மந்திரம் கற்றுக் கொண்ட அரக்கனால், அனைவரும் துன்பப்படுவதை என்னி ஜாபாலி முனிவர் வருத்தம் கொண்டார்.


ஏற்பட்டிருக்கும் பஞ்ச சீர்கேட்டைப் போக்க சிறப்பான வேள்வி செய்ய முனைந்தார். வேள்வி செய்ய நீரும், மற்றும் பொருட்கள் வேண்டினவைகள் வேண்டுமே!...ஆகையால் இந்திரனிடம் சென்று கேட்டதைத் தரும் காமதேனு பசுவை வேள்விக்கு அனுப்பும்படி வேண்டினார்.


ஆனால் காமதேனு பசுவை அனுப்பித்தர வேண்டிக் கேட்டுக் கொண்ட நேரத்தில், வேறொரு வேள்விக்காக காமதேனு பசு சென்றிருந்தது.


எனவே இந்திரன், காமதேனுவுக்கு இணையான சக்தியைக் கொண்ட காமதேனுவின் மகளான நந்தினிபசுவை அழைத்துச் செல்லுமாறு இந்திரன் சொன்னான்.


இதற்கு ஜாபாலி முனிவர் மனம் மகிழ்ந்தார். பின் நந்தினி பசுவிடம் வந்து, நாட்டின் பஞ்சத்தையும் மக்களின் துயரத்தையும் எடுத்துரைத்து தன் விளைவிக்கும் வேள்விக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.


ஆனால் பாவிகள் நிறைந்துள்ள பூமிக்கு என்னை அழைக்கிறீர்களே! என வர மறுத்தது.


நந்தினி பசுவின் பதிலைக் கேட்ட முனிவர், *இந்திரன் ஆனையிட்டும் பூலோகத் துன்பத்தைப் போக்க வர மறுத்த நீ, *பூலோகத்தில் நதியாக பிறப்பெடுத்துப் பாயக் கடவாயாக!"* என சாபம் கொடுத்தார்.


சாபம் கிடைக்கப் பெற்றதும் நந்தினி பசு, தன் தவறை உணர்ந்தது. முனிவரிடம் மன்னிப்பு கோரியது.


நந்தினி பசுவே! சாபம் கொடுத்தது தான்! அதைத் திரும்பப் பெற, சாபம் கொடுத்த என்னாலகூட அதைத் திரும்பப் பெறமுடியாது. இருப்பினும் விமோசனம் ஒன்றிருக்கிறது. கேட்டுக் கொள்!, ...நீ நதியாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சமயத்தில், பார்வதிதேவி நதிக்கு வருவாள். அப்போது உனக்கு விமோசனம் கிடைக்கும் என்று ஜாபாலி முனிவர் கூறினார்.


நந்தினி பசு பூலோகம் வந்தது. கனககிரி மலையுச்சி முகட்டிற்கு வந்தது. அங்கிருந்து நதியாக பிரவாகமெடுத்து பூமியில் பாயத் தொடங்கியது.


ஜாபாலி முனிவரோ, புதியதாகத் தோன்றிய அந்நதிக்கரையில் தான் நினைத்திருந்த வேள்வியைச் சிறப்பாகச் செய்து முடித்தார். இதன்பயனாக பூமிக்கு ஏற்பட்டிருந்த பஞ்சமும் பட்டினியும் குறைந்து மறையத் தொடங்கியது.


அப்போது சிவபெருமான் பார்வதிதேவியிடம்.......மீண்டும் அருணாகரனின் அசுரத் தொல்லை துவங்கும் முன் அவனை நீ அழித்துவிடும்படி கூறினார்.


இறைவா!, அழிவு வருமென்று அவன் நினைக்கின்ற நேரத்தில், பிரம்மாவின் வரத்தின்படி அசுரன் அந்த சமயத்தில் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கிறான். எனவே ஜபிக்கும் அவனை அழிக்க முடிவதில்லை. எனவே நான் பூமியில் தோன்றுவதற்கு முன்பாக, அந்த சமயத்தில் அவன் காயத்ரி மந்திரத்தைச் சொல்லாமல் இருக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவனை அழிக்க முடியும் என்றாள் பார்வதிதேவி சிவபெருமானிடம்.


பார்வதிதேவியின் என்னப்படி சிவபெருமான், உடனடியாக பிரகஸ்பதிக்கு அழைப்பு விடுத்தார். அவனிடம்....
அருணாகர அசுரன் காயத்ரி மந்திரத்தைச் சொல்லாமல் இருக்கும் செயல் ஏதாவது ஒன்றை செய்யுங்கள் எனக்கூறி அனுப்பி வைத்தார்.


பிரகஸ்பதியோ நேராக அருடாகர அசுரனைச் சந்தித்தார். அவனைப் புகழ்ந்து உருக வைத்தார். எல்லா உலகங்களுக்கும் இறைவனாகி விட்டிருக்கிறீர்கள் நீங்கள் எனக்கூறி மெய்மறக்கச் செய்து அறியாமை புதர்க்குள் இழுத்தார் பிரகஸ்வதி. நீங்களே முதன்மையான முன்னிலை. ஆனால் நீங்கள் காயத்ரி மந்திரம் என ஜபித்து இன்னொருவரையல்லவா புகழ்ந்து வணங்குகிறீர்கள். இதில் எப்படி நீங்கள் முன்னிலை எனக்கொள்வது? எனக் கூறினார்.


இப்படியெல்லாம் புகழ்ந்த பிரகஸ்பதியின் சொல்...................
அசுரனுக்கு ஆனவமலத்தைக் கூட்டி அறியாமை புதரை நெருங்கினான்.


பிரகஸ்பதியின் புக(சூ)ழ்ச்சியால் அசுரனுக்கு......ஆணவம் ஏற்பட்டு, "ஆமாம்!",...நான் ஏன் காயத்ரி ஜபித்து வணக்கம் செய்தல் வேண்டும்!, நானே முன்னிலை மேம்பட்டவன்! இனி நான் காயத்ரி ஜபித்தல் செய்ய மாட்டோம்! எனச் சொன்னதோடு , ஜபிப்பதை நிறுத்தியும் விட்டான்.


இந்தத் தருணத்தையே எதிர்பார்த்து காத்திருந்த பார்வதிதேவி பூமிக்கு வந்தாள். அசுரனின் அரண்மனைத் தோட்டத்தில் மங்கைவுரு கொண்டு உலவினாள். அவளைக் கண்ட அசுரன் அருகில் நெருங்கி வந்தான்.


அசுரன் அருகில் வர வர அன்னை விலகி விலகி ஓடினாள். அசுரன் அன்னையைத் தொடர்ந்து துரத்திச் சென்றான். இப்படி ஓடி பார்வதிதேவி மலையுச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டான் அசுரன்.


அங்கேயிருக்கும் பாறையிடுக்கு ஒன்றினுள் நுழைய, அங்கிருந்த தேன் கூட்டினுள் தேனீ உருமாறி கலந்து விட்டிருந்தாள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
விடாது துரத்தி வந்த அருணாகர அசுரனும் பார்வதியை காணாது பாறையிடுக்கினுள் தலையை விட்டுத் தேடினான்.


அதில் அசுரன் தலைபட்டுத் தேனீக் கூடு கலைந்து அலைந்தது. அனைத்து தேனீக் குழவிகளும் அசுரனை மாறி மாறிக் கொட்டின. தேனீ உருவத்திலிருந்த பார்வதிதேவியும் கோபக்கணலுடன் அசுரனைக் கொட்டினாள். அசுரன் சுருண்டு விழுந்து இறந்தழிந்தான்.


இவையெல்லாவற்றையும் தூரத்தே நின்று கவணித்துக் கொண்டிருந்த ஜாபாலி முனிவரும், இந்திரனும் பார்வதி தேவியருகே வந்து வணங்கினர்.


பார்வதிதேவி கோபத்தின் உச்சிக்கணம் தீராநிலையுடன் இருப்பதை அறிந்து, இளநீரை அளித்து நதியில் இறங்கி நீராடிக் கோபத்தைத் தனித்துக் கொள்ள வேண்டினார்கள்.


இளநீர் பெற்றுக் கொண்ட பின் பார்வதிதேவி சாந்தம் பெற்றாள். அதன்பின் அந்தப் பகுதியில் பாய்ந்து கொண்டிருந்த நேத்ராவதி நதியில் இறங்கி நீராடினாள். லிங்க வடிவை அடைந்தாள்.


நதியின் நடுவே லிங்க வடிவை கொண்ட பார்வதியை மீண்டும், இந்திரனும் ஜாபாலி முனிவரும் வணங்கினர்.


பார்வதிதேவி நேத்ராநதியில் இறங்கியதால், நந்தினி பசுவின் சாபமும் நீங்கப் பெற்றது. நதியாக ஓடிய தனக்கு சாப விமோசமளித்த பார்வதிதேவியின் லிங்கவுருவை வணங்கிக் கொண்டதனலால் நந்தினிபசு இந்திரலோகம் சென்றடைந்தது.


நந்தினி சாப விமோசனம் அளித்துவிட்டு, நந்தினி பசுவின் நினைவாகத்துக்கு நேத்ரா நதியை எப்போதும் ஓடிக் கொண்டிருக்கப் பணித்தாள் அண்ணை.


அடியார்களாகிய நாமும் , பொதுநலத் தொண்டு செயல்களுக்கு அழையாது சென்று உதவுதல் வேண்டும். நம்மால் இவ்வளவுதான் உதவுதல் இயலும் என்பதை அதை உதவிடுதல் வேண்டும்!


சலித்தோ, மறுத்தோ, அப்புறமொருமுறை ஆகட்டுமெனவோ நினைத்தால், பெருந் துன்பம் சூழும்!


நந்தினி பசுவுக்கு சாபமும் கிடைத்தது! சாப விமோசனமும் கிடைத்தது.


நமக்கு!....பாவகணக்குமிருக்கு!
உதவாத்தன்மையும் நிறைஞ்சிருக்கு! அதை முழுமையா ஒழிக்க கோப்பு இல்லை. ஆக அடியார்கள் நாம் தொண்டுகள் பல செய்து வர, பாவக் கணக்குகளை குறைத்துக் கொள்ள முயலுவோம்!


திருச்சிற்றம்பலம்.


அசுரன் வீழ்த்தொழிக்கப்பட்டபின் அவ்விடத்திலேயே கோவில் கொள்ள வேண்டினர் இந்திரனும் ஜாபாலி முனிவரும். அதுபோலவே அவ்விடத்தில் *துர்கா பரமேஸ்வரி* என்ற பெயரில் கோவில் கொண்டாள். நதியின் இடையே தோன்றியதால் அவ்விடத்தை *கடிலா* என பெயர். அது காலப் போக்கில் மருவி கடில் எனவாயிற்று.


கர்நாடகம் மாநிலம் மங்களூரிலிருந்து இருபத்து ஆறு கி.மீ. தொலை தூரத்தில் உள்ளது *கடில்* எனும் ஊர்.


இங்கே நேத்ரா நதி இரண்டாகப் பிரிந்து திருத்தலத்தைச் சுற்றி மாலையிட்டது போல நதி ஓடிக்கொண்டிருக்கும்.


நதியின் இடையேதான் ஆலயக்கருவறை இருக்கப் பெற்றுள்ளது.


நதி சூழ்ந்த சீதோஷன நிலை இருப்பதால் இங்கு தரப்படும் அர்ச்சனைக் குங்குமம் ஈரத்தன்மையுடன் இருக்கும்.


அன்று அருணாகர அசுரன் வீழ்த்தப்பட்ட சமயம் இறைவியின் கோபம் தனிய இந்திரனும் ஜாபாலி முனிவரும் இளநீரால் அபிஷேகித்தனர்.


அதுபோல இப்பொழுதும் அன்னைக்கு இங்கு இளநீர் நீராட்டு அபிஷேகம் நடைபெறுகிறது.


திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் துணை செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*