Announcement

Collapse
No announcement yet.

மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமிக்கென்றும் ஒர&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமிக்கென்றும் ஒர&#

    மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமிக்கென்றும் ஒரு பெயருண்டு.
    அமெரிக்கப் பழங்குடியினர் இப்பெயர்களை இட்டதாகச்
    சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் நிகழ்வுகளைக்கொ
    ண்டு இப்பெயர்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
    பெயரைக் கேட்டாலே பெயர்க்காரணமும் விளங்கி விடும்.
    -

    ஜனவரி- Wolf Moon -
    ஓநாய் நிலவு- இந்த மாதத்தில் கடும் பனி மற்றும் குளிர்
    காரணமாக காட்டுக்குள் உணவு கிடைக்காமல் ஓநாய்கள்
    கிராமங்களில் புகுந்து கோழி ஆடு போன்றவற்றைத் தூக்கிச்
    சென்று விடுவது, மற்ற மாதங்களை விட அதிகமாக
    நடக்குமாம். ஆகவே இப்பெயரிடப்பட்டது.

    பிப்ரவரி- Snow Moon - பனி நிலவு -

    இம்மாதத்தில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் இப்பெயர்.
    பனிப்பொழிவு காரணமாக வேட்டைக்குச் செல்வது கடினமாகி,
    உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கவும் நேரிடுவதால்
    இதை "பசி நிலவு" என்றும் சில பழங்குடியினர் அழைக்கிறார்கள்.

    மார்ச்- Worm Moon - புழு நிலவு -

    பனிக்கால விடுமுறை முடிந்து சூரியன் எட்டிப்பார்க்கும் காலம்.
    மிதமான சூடு காரணமாக பூமிக்குள்ளிருந்து புழுக்கள் வெளி
    வர ஆரம்பிக்கும். இவற்றைத் தின்னவென்றே ராபின்
    பறவைகளும் நிறைய கூட்டம் கூட்டமாக வந்திறங்கும்.

    ஏப்ரல்- Pink Moon - பிங்க் நிலவு -

    மாஸ் பிங்க் என்றழைக்கப்படும் ஒரு வகை வசந்தகாலப்பூக்கள்
    அதிகம் பூக்கும் காலமாதலால் இப்பெயரிடப்பட்டது.

    மே- Flower Moon - பூ நிலவு -

    தாவரங்கள் அனைத்தும் பூத்துக்குலுங்கும் காலத்தில் வரும்
    பௌர்ணமி. ஆகவே இப்பெயரிடப்பட்டது.

    ஜூன்- Strawberry Moon - ஸ்ட்ராபெர்ரி நிலவு -

    ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் அதிகம் கிடக்கும் மாதத்தில் வரும்
    பௌர்ணமியாதலால் நிலாப்பெண்ணுக்கும் இப்பெயர்.

    ஜூலை- Buck Moon - மான் நிலவு
    -
    பொதுவாக இம்மாதத்தில்தான் இளம் மான் குட்டிகளுக்குக்
    கொம்பு முளைக்க ஆரம்பிப்பதாக அப்பழங்குடியினர்
    நம்புவதால் இப்படிப் பெயரிடப்பட்டிருக்கிறது.

    ஆகஸ்ட்- Sturgeon Moon - ஸ்டர்ஜன் நிலவு -

    ஸ்ர்ஜடன் என்ற ஒரு வகை மீன்கள் அதிகம் கிடைக்கும்
    மாதத்தில் வருவதால் இப்பௌர்ணமிக்கு இப்பெயர்.

    செப்டம்பர் - Harvest Moon - அறுவடை நிலவு -

    மக்காச்சோளம் விளைந்து அறுவடைக்குத் தயாராக
    இருக்கும் இம்மாதத்தில் வரும் பௌர்ணமியின் பிரகாசம்
    பகலைப்போல் ஒளிருமாம். அந்த வெளிச்சத்திலேயே
    கூட அறுவடை நடக்குமாம்.

    அக்டோபர் - Hunter's Moon - வேடுவரின் நிலவு -

    இதற்கு ரத்த நிலவு என்றும் இன்னொரு பெயர் உண்டு.
    இம்மாதத்தில் கிட்டத்தட்ட அறுவடை முடிந்து
    வயல்களெல்லாம் கட்டாந்தரையாகக் கிடப்பதால்
    வயல்களில் நடமாடும் நரிகள், சிந்திய தானியங்களைத்
    தின்ன வரும் மான்கள் போன்றவை எளிதில் புலப்பட்டு
    விடும்.

    அவற்றை வேட்டையாடி, அந்த மாமிசத்தை அடுத்து வரும்
    குளிர்காலத்துக்கென சேமித்து வைத்துக் கொள்வர்.
    அதிகம் ரத்தம் சிந்தும் மாதமாதலால் இதற்கு ரத்த நிலவு
    என்று பெயரிடப்பட்டிருக்கிறதோ என்னவோ?

    நவம்பர்- Beaver Moon - நீர் நாய் நிலவு
    -
    இம்மாதத்தில் பீ(b)வர்ஸ் என்று அழைக்கப்படும் நீர் நாய்களை
    வேட்டையாடி அதன் உரோமங்களைக் குளிர்கால ஆடைகள்
    நெய்யப் பயன்படுத்திக் கொள்வர். ஆகவே இம்மாதத்தில்
    வரும் பௌர்ணமிக்கு இக்காரணப் பெயரிடப்பட்டது.

    டிசம்பர்- Cold Moon - குளிர் நிலவு -
    டிசம்பர் மாதக் குளிருக்குச் சொல்லவா வேண்டும்.
    இம்மாதத்தில் சூரியனே தணிந்து இருக்கும்போது நிலவு
    மட்டும் சுடுமா என்ன?.. குளிர் நிலவு மேலும் குளிர்ந்து போய்
    இருக்கும்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X