Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html


    8. கனகந்திரள்


    கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
    தனில்வந்துத கன்தகன் என்றிடு
    கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு கதியோனே
    கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
    கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
    கரியின்றுணை என்றுபி றந்திடு முருகோனே
    பனகந்துயில் கின்றதி றம்புனை
    கடல்முன்புக டைந்தப ரம்பரர்
    படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே
    பலதுன்பம்உ ழன்றுக லங்கிய
    சிறியன்புலை யன்கொலை யன்புரி
    பவமின்றுக ழிந்திட வந்தருள் புரிவாயே
    அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
    புரமுந்திரி வென்றிட இன்புடன்
    அழலுந்தந குந்திறல் கொண்டவர் புதல்வோனே
    அடல்வந்துமு ழங்கியி டும்பறை
    டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
    அரிர்கின்றிட அண்டநெ ரிந்திட வருசூரர்
    மனமுந்தழல் சென்றிட அன்றவர்
    உடலுங்குட லுங்கிழி கொண்டிட
    மயில்வென்றனில் வந்தரு ளுங்கள் பெரியோனே
    மதியுங்கதி ருந்தட வும்படி
    உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
    வளமொன்றுப ரங்கிரி வந்தருள் பெருமாளே.



    -திருப்பரங்குன்றம்





    சுருக்க உரை


    பொன் திரண்டுள்ள மேரு மலையை ஒளி வீசும்படி செண்டை எறிந்து திருவிளையாடல் புரிந்த திறலோனே. மதம் மிகுந்துப் பல வகையாகப் புணர்வதும், கவளமாக உண்டு வளருவதுமான யானை உருவம் கொண்ட விநாயகனின் துணைவனே. பாம்பின் மேல் துயில்பவரும், கடலைக் கடைந்தவரும் ஆகிய திருமாலுக்கு அன்பான மருகனே. பல துன்பங்களில் சுழற்சி உற்று கலங்கிய சிறியேனும், புலையனும், கொலைஞனுமாகிய அடியேனுடைய பாவம் இன்று நீங்க வந்து அருள் புரிவாயாக.
    தூயவனாகிய சிவனின் மகனே. பறைகள் முழங்க வரும் சூரர்களை அழித்து மயில் மேல் வந்தருளிய பெருமை வாய்ந்தவனே. சந்திரனும் சூரியனும் தடவிச் செல்லும்படி உயர்ந்த சோலைகள் மிகுந்த திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. என் பாவம் ஒழிய வந்து அருள் புரிவாயாக.


    விளக்கக் குறிப்புகள்
    அ. செண்டை எறிந்திடு கதியோனே...
    பாண்டிய நாட்டில் மழையில்லாமையால், சொக்க நாதர் கனவில் சொன்னபடி, உக்கிர பாண்டியன், மேரு மலையைச் செண்டாகிய பிரம்பால் அடித்துப் பொன் பெற்ற திருவிளையாடலைக் குறிக்கும்.


    [செண்டு என்பது ஒரு நுனியில் இரண்டு வளவுகளுடன் இருக்கும் ஒரு வித ஆயுதம். மாயூரத்திற்கு அருகில் இருக்கும் ஆறுபாதி ஊரில் இருக்கும் ராஜகோபலஸ்வாமி பெருமாளின் கையில் இருக்கும் ஆயுதம் செண்டே ஆகும். மன்னார்குடியில்செண்டலங்காரப் பெருமாள் கையில் இருப்பதும் செண்டு. சுந்தர மூர்த்தி நாயனார் கையில் வைத்திருக்குகம் ஆயுதமும் இதுவேதான். புதுவண்டி பாளையம் கடலூர் சிவ சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஸ்வாமி சிவனிடமிருந்து மேருவை அடிப்பதற்காக செண்டு வாங்க்கும் திருவிழா இன்றும் நடைபெருகிறது]
    ஆ. பனகம் துயில்கின்ற திறம்....
    பனகம் = பாம்பு (ஆதிசேடன்).
    இ. மயில் வென் தனில்.....
    வென் = முதுகு.
Working...
X