டூர் போறீங்களா? இதெல்லாம் மறக்காதீங்க...

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பயணம் செய்யும்போது எடுத்துச் செல்ல வேண்டிய
ஒரு செக் லிஸ்ட் (அவரவர்கள் தங்களுக்கு ஏற்ப இந்தப்
பட்டியல் மாறுதல் செய்து கொள்ளலாம்)

* பயணச் சீட்டு செல்வதற்கானது
* பயணச்சீட்டு திரும்பி வருவதற்கானது
* பயணத்தின்போது கேட்டால் காட்டுவதற்கான அடையாள
சான்று (ஓட்டுனர் உரிமம், பான் கார்டு என்பது போல்)

* கடன் அட்டை மற்றும் ஏ.டி.எம். அட்டை.
* செயின் லாக் (ரயில் பயணத்தின்போது சூட்கேஸ்களுக்கான
பாதுகாப்பு)
* பேனா (எழுதுவதற்கும்,ரயில் மின் விசிறி சுற்றாத போது
சுற்ற வைப்பதற்கும்)
* ஒரு டைரி
* பயணத் தகவல்கள் செல்போனில் இருந்தாலும் அவையும்
வெளியூர்களில் சந்திக்க வேண்டியவர்களின் தொலைபேசி
எண்களும் எழுதப்பட்ட ஒரு சிறு நோட்டுப் புத்தகம்.

* செல்போன், அதற்குரிய சார்ஜர்
* பயணத்தில் படிக்க சில புத்தகங்கள்
* லேப்டாப், அதற்கான சார்ஜர்.
* பவர் பேங்க் (சார்ஜர் பொருத்த வசதியில்லாதபோது செல்போனில்
சார்ஜ் செய்து கொள்ள)
* உடைகள் வெளி ஆடைகள், உள்ளாடைகள், துண்டு
* டாய்லட் கிட் சீப்பு, பற்பசை, டூத் பிரஷ், ஷேவிங் கிரீம், ரேஸர்,
பொட்டு/ஸ்டிக்கர், டியோடரன்ட்,

* கைகுட்டைகள்
* வேஷ்டி அல்லது லுங்கி
* ரொக்கப்பணம் (இரண்டாக பிரித்து இரு இடங்களில் வைத்துக்
கொள்ளுங்கள்
* ஷூக்கள்
*ஓவர் கோர்ட், ஸ்வெட்டர், கம்பளி (குளிர் பகுதிக்குச் செல்வதாக
இருந்தால்)
* போகும் இடங்களி்ல எந்தெந்த சுற்றுலாத் தலங்களில் பயணம்
செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்கள் (வார விடுமுறை,
திறந்திருக்கும் நேரம், போன்றவை அடங்கிய) கையேடுகள்.

* மூக்கு கண்ணாடி
* புகைப்பட கருவி
* தினமும் போட்டுக் கொள்ள வேண்டிய மருந்து, மாத்திரைகள்
* தலைவலி, வயிற்றுவலி, குமட்டல், வயிற்று போக்குக்கு
உண்டான சாதாரண மாத்திரைகள், ஓரிருபேண்ட் எய்ட்.
* வழியில் உரிய உணவு கிடைக்காதபோது உதவும் பழங்கள்,
பிஸ்கட்டுகள்.

நன்றி- மங்கையர் மலர்