குடும்பத்தோடு சுற்றுலா செல்கிறீர்கள். அப்படிச் செல்வதற்கு முன்நீங்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் சில உண்டு. நீங்கள் திரும்பி வருவதற்கு முன் உங்கள் வீட்டில் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டாமல் இருக்க இவை உதவும்.

வீட்டு வாசற்படியில் பிரிக்கப்படாத செய்தித் தாள்கள் இருந்தால், வீட்டில் யாரும் இல்லை என்பதற்கு அதுவே திருடர்களுக்கு ஒரு க்ளூதான். வெளியூர் செல்வதற்கு முன் திரும்பிவரும் நாள்வரை நியூஸ் பேப்பரைப் போட வேண்டாம் என்பதை கடைக்காரரிடம் மறக்காமல் சொல்லிவிடுங்கள்.

வீட்டு கேட் திறக்கும் போதெல்லாம் நாராசமான சப்தத்தை எழுப்புகிறதென்றால் அதற்கு எண்ணெய் கிரீஸ் போட்டு சமாதானப்படுத்த வேண்டாம். திருடர்கள் நுழையும்போது இந்த சப்தமே அவர்களைக் காட்டிக் கொடுக்கக்கூடும்.

சிலர் தங்கள் வீட்டுக் கதவில் இன்னும் பத்துநாள்களுக்கு இங்கு வரும் அஞ்சல்களை எதிர் வீட்டில் கொடுத்து விடுங்கள் என்பதுபோல் அறிவிப்பை ஒட்டுவார்கள். இது புத்திசாலித்தனம் அல்ல. மாறாக, அஞ்சல் அலுவலகதம் மற்றும் வழக்கமான கூரியர் அலுவலகத்துக்கு தெரியபடுத்தலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsவீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக மேல் மாடியிலோ பரணிலோ வைக்கவும் (வௌ்ளம் தந்த அனுபவத்தை நினைவிலிருந்து மறக்க கூடாது) வங்கி லாக்கரில் வைப்பது இன்னும் சிறப்பு.

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை திறந்தபடி போட்டு விட்டு கிளம்ப வேண்டாம். பர்க்ளர் அலாரம் சிசிடிவி கேமரா போன்ற கருவிகளைப் பொருத்தி வைப்பது நல்லது.

வீட்டில் உள்ள நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. பீரோக்களின் சாவிகளை சுலபமாக யூகிக்கக்கூடிய இடங்களில் வைக்க வேண்டாம். அதே சமயம் எங்கே வைத்தோம் என மறந்து விடவும் வேண்டாம். வைத்த இடங்களை ஒரு தாளில் எழுதி பர்ஸில் எடுத்துச் செல்லவும்.

தோட்டத்தில் ஏணி இருந்தால் அதை அப்புறப்படுத்தி விடுங்கள். அதே போல் தோட்ட வேலைக் கருவிகள் போன்றவற்றையும் உள்ளே பாதுகாப்பாக வைத்துவிடுங்கள். திருடர்கள் இவற்றை பயன்படுத்த வைத்து நம் விரலைக் கொண்டே நம் கண்களைக் குத்திக் கொள்வானேன்.

அக்கம் பக்கத்தில் உள்ள, உங்களுக்கு நன்கு தெரிந்த, நெருக்கமான, ஓரிரு குடும்பங்களுக்கு மட்டும் நீங்க ஊருக்குப் போகும் விஷயத்தைத் தெரிவியுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டுக்குள் ஏதாவது நடமாட்டம் என்றால் அவர்களுக்கு சந்தேகம் வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

வீட்டில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கட்டும். ஆனால் அது வராண்டாவில் உள்ள ஜீரோ வாட் பல்பாக இருக்க வேண்டாம். ஜன்னல்கள் திரையால் மூடப்பட்ட ஓர் அறை அல்லது கூடத்திற்குள் அந்த மின் விளக்கு எரியட்டும்..

ஜன்னல்கள் விஷயத்திலும் கவனம் தேவை. கதவுகளைப் பூட்டி ஒன்றுக்கு நாலு முறை அதை இழுத்துப் பார்ப்பவர்கள்கூட, ஜன்னல்களை உட்புறம் தாழிடுவதற்கு ஏனோ மறந்து விடுகிறார்கள்.

நீண்ட நாள் பயணம் என்றால், கிளம்புவதற்கு கொஞ்ச நாட்களுக்கு மன் வீடு மற்றும் அதில் உள்ள பொருட்களை இன்ஷ்யூர் செய்யலாம். பொருள்கள் தொலைந்தால் நஷ்ட ஈடாவது கிடைக்கும்.

எங்கேனும் வெளியூர் செல்லவேண்டியிருந்தால், வீடு சில நாள் பூட்டியிருக்கும். கொஞ்சம் கண்காணிப்புத் தேவை என்று உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சொல்லிவைத்தால் போதும். பிரச்னை ஏதேனும் வந்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் (நல்லபடியான அர்த்தத்தில்)

ஜி.எஸ். சுப்ரமணியன்

மங்கையர் மலர்