Announcement

Collapse
No announcement yet.

"இதய நோய் குணமளிக்கும் மந்திரம்"

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "இதய நோய் குணமளிக்கும் மந்திரம்"

    "இதய நோய் குணமளிக்கும் மந்திரம்"




    கிருஷ்ணா, கிருஷ்ணா! என்று பகவான் நாமத்தை உச்சரிப்பதன் மூலம் இதய நோய் குணமாவதோடு புண்ணியமும் கிடைக்கும். இதய நோய் உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் போது சில மாத்திரகளை நாக்கை மடித்து வைத்துக் கொல்லச் செய்வர். ஏனெனில் நாக்கு மடிவதால் இதயம் பலப்படுகிறது. நோய் குறைகிறது. கீழே உள்ள மந்திரத்தை உச்சரிக்கும் போது நாக்கு மடிந்து இதயம் பலம் பெற்று குணமடையும்.

    ’’பஜே வ்ரஜைக மண்டனம் ஸமஸ்த பாப கண்டனம்
    ஸ்வபக்த சித்ரஞ்ஜனம் ஸவைத நந்தநந்தனம்
    ஸூபிச்ச குச்ச மஸ்தகம் ஸூனாத வேணு ஹஸ்தகம்
    அணங்கரங்க ஸாகரம் நமாமி கிருஷ்ண நாகரம்’’


    இடைச்சேரிக்கு அலங்காரமானவரும், எல்லா பாவங்களையும் போக்குகிறவரும், எப்பொழுதும் தனது பக்தர்களின் மனதை சந்தோஷப்படுத்துகின்றவரும், நந்தகோப புத்திரரும், அழகிய மயில் தோகையை சிரஸ்ஸில் தரித்தவரும் இனிமையான சப்தத்துடன் கூடிய புல்லாங்குழலை கையில் கொண்டவரும் மன்மதனுடைய விளையாட்டிற்கு இருப்பிடமானவரும் மதுரா நகரத்தின் பாக்யமுமான ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்.

    இந்த மந்திரத்தை ஜெபித்தால் இதய நோயிலிருந்து விடுபடலாம்.ஆதிசங்கரர் அருளியது.ஸ்ரீகிருஷ்னாஷ்டகம் மந்திரம்.

    மனோஜகர்வமோசனம் விசாலலோல லோசனம்
    விதூதகோபலோசனம் நமாமி பத்மலோசனம் I
    கராரவிந்த பூதரம் ஸ்மிதாவலோக ஸுந்தரம்
    மஹேந்த்ரமானதாரணம் நமாமி க்ருஷ்ணவாரணம் II


    மன்மதனுடைய கர்வத்தை போக்குகிறவரும், நீண்டதும் துரு துருத்த கண்களை உடையவரும் கோபர்களுடைய துக்கத்தை போக்குகின்றவரும் செந்தாமரைக் கண்ணனுமான ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன். தாமரை போன்ற கைகளால் கோவர்தன மலையைத் தூக்கியவரும் புன்சிரிப்போடு கூடிய பார்வையால் அழகு வாய்ந்தவரும் இந்திரனுடைய கர்வத்தைப் போக்கியவருமான ஸ்ரீ கிருஷ்ணனாகிற மதகஜத்தை நமஸ்கரிக்கிறேன்.

    கதம்பஸூனகுண்டலம் ஸுசாருகண்ட மண்டலம்
    வ்ரஜாங்கனைகவல்லபம் நமாமி கிருஷ்ணதுர்லபம் I
    யசோதயா ஸமோதயா ஸகோபயா ஸநந்தயா
    யுதம் ஸுகைகதாயகம் நமாமி கோபநாயகம் II


    கதம்ப (அடம்ப) புஷ்பத்தைக் காதில் குண்டலமாக தரிசித்தவரும் மிக அழகிய கன்னப்ரதேசங்களை உடையவரும் கோப கன்னிகைகளுக்குச் சிறந்த நாயகனும், கிடைப்பதற்கரிதான ஸ்ரீ க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன். கோபர்களுடன் கூடியவரும் நந்தகோபருடன் கூடியவரும், சந்தோஷமான யசோதையுடன் கூடியவரும் சிறந்த சுகத்தை அளிப்பவரும் கோப நாயகருமான ஸ்ரீ க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்.

    "ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

    Thanks : Whatsup !
    Last edited by krishnaamma; 17-04-17, 11:05.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X