Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html


    10.தடக்கை


    தடக்கைப் பங்கயங் கொடைக்குக் கொண்டல்தண்
    டமிழ்க்குத் தஞ்சமென் றுலகோரைத்
    தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
    தளர்ச்சிப் பம்பரந் தனையூசற்
    கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
    கலத்தைப் பஞ்சஇந் த்ரியவாழ்வைக்
    கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
    கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே
    படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
    புரக்கக் கஞ்சைமன் பணியாகப்
    பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
    பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா
    குடத்தைத் தென்பரங் பொருப்பிற் றங்குமங்
    குலத்திற் கங்கைதன் சிறியோனே
    குறிப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
    குவித்துக் கும்பிடும் பெருமாளே.

    - திருப்பரங்குன்றம்



    சுருக்க உரை


    உமது கைகள் தாமரை போன்றவை. கொடையில் நீ மேகம் போன்றவன். தமிழ்ப் புலவர்களுக்கு நீ ஒரு புகலிடமாவாய், என்று உலகத்தாரிடம் சென்று, யாசித்து, உள்ளம் புண் பட்டு தளர்ச்சி உறும்,இந்த ஊசிப் போகும் பாண்டத்தை, ஐந்து பொறிகளால் இன்பம் துய்த்து வாழும் இந்த மண் பாண்டத்தை, நொடிப் பொழுதில் வந்து, என் உள்ளத்தைத் திருத்தி, உனக்குத் தொண்டு செய்யும்படி அருள் புரிவாயாக.
    படைக்கப் பிரமன், காக்க இலக்குமி நாயகன். அழிக்கச் சங்கரன் என்று பணிகளை நியமித்து, மேலாம் நிலையைப் பூண்டிருக்கும் வேலனே, திருப்பரங்குன்றத்தில் உறையும் கங்கையின் குழந்தையே, குறப்பெண்ணாகிய வள்ளியைக் கரம் கூப்பி வணங்கும் பெருமாளே, என் உள்ளத்தைத் திருத்தி அமைத்து நான் தொண்டு செய்ய அருள் புரிவாயாக.



    விளக்கக் குறிப்புகள்
    குடக்கு = மேற்கு.
    (மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
    இருஞ்சேற் றகல்வயல் விரிந்து வா
    யவிழ்ந்த)...திருமுருகாற்றுப்படை 71.
Working...
X