Announcement

Collapse
No announcement yet.

சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன&

    சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன் - 1

    ஸத்தியகாமன் ஆத்மிக நாட்டமுள்ள ஒரு மாணவன். தாய் மட்டும் அவனைப் பரிபாலித்து வந்தாள்.
    அவள் பெயர் ஜாபாலா. அவள் ஓர் உத்தமி. ஸத்திய காமனுக்குத் தாய் ஜாபாலாவைத் தவிர
    ஸத்தியகாமன் ஒருவனே பற்றுக்கோடாக இருந்தான். நல்ல குருவிடம் சென்று ஆத்ம ஞானம் பெற
    ஸத்தியகாமன் வேட்கை கொண்டிருந்தான். பண்டைய ரிஷிகள் ஒருவனுடைய கோத்திரம்
    தெரிந்த பிறகுதான் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள்.
    தங்கள் உபதேசம் விழலுக்கு நீர்பாய்ச்சுவது போன்று வீணாகப்போகாதிருக்கும் பொருட்டு
    அவர்கள் இம்முறையைக் கையாண்டனர். ஆத்ம ஞானம் பெற விரும்புவன் உயர்ந்த பண்பைப்
    பெற்றிருக்க வேண்டும். உயர்ந்த பண்பைப் பெற்றுள்ள ஒவ்வொருவனும் உயர்ந்த கோத்திரத்தைச்
    சார்ந்தவனாகிறான்.


    அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வு
    செந்தண்மை பூண்டு ஒழுகலான்


    என்பது பொய்யாமொழி. குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற கோட்பாட்டின்படி
    ஒருவனுடைய குணத்தை அறிவதற்கு அவனுடைய கோத்திரத்தை பழைய பெரியோர்கள்
    கேட்டு வந்தார்கள். குருவை அடைந்து ஆத்ம ஞானம் பெற விரும்பிய ஸத்தியகாமன் குருவினிடம்
    கோத்திரத்தைச் சொல்வதற்காகத் தன் தாயிடம் தன்னுடைய கோத்திரத்தைக் கேட்டான்.


    தாய் எளிய வாழ்வும் தூய உள்ளமும் படைத்தவள். தன் மகனோடு கிராமத்தில் ஒரு புறத்தில்
    எளிய குடிசையில் வாழ்ந்து வந்தாள். பக்ஷிகளின் இனிய கீதம், நீரோடைகளின் சலசலப்பான ஓசை,
    சூரியனின் களங்கமற்ற ஒளி, சந்திரனின் தண்மை ஆகிய இவைகள் அவர்களுக்கு இன்பமூட்டும்
    பொருள்களாக இருந்து வந்தன. இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்பவர்கள் இறைவனோடு
    இயைந்த வாழ்வு வாழ்பவர்களாகிறார்கள். தன் மகன் தன்னைக் கோத்திரத்தைக் கேட்டபொழுது
    தன்னுடைய பழைய வாழ்க்கையின் ஞாபகம் ஜாபாலாவுக்கு வந்தது.


    “நான் ஓர் இளைஞனை மணம் செய்து கொண்டேன். என்னுடைய தலைவனுக்குப் பணிவிடை
    செய்வதிலேயே என் காலத்தைக் கழித்தேன். உன்னைக் கருத்தரித்தபின் உன் தந்தை காலமாகிவிட்டார்.
    நான் பின் அனாதையாகிவிட்டேன். உன் தந்தை இறக்கும்பொழுது என் சிந்தனை எல்லாம்
    உன்னைப்பற்றியே இருந்ததால் அவரைக் கோத்திரம் கேட்க மறந்துவிட்டேன்.
    என் பெற்றோர்களும் என்னைச் சிறு வயதிலேயே விட்டுப் பிரிந்துவிட்டதால் அவர்களிடமும்
    நான் கோத்திரத்தைப் பற்றிக் கேட்க விட்டுவிட்டேன். தூய வாழ்க்கை வாழ்வதற்குக்
    கோத்திரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமாக நான் அப்பொழுது
    கருதவில்லை”- இங்ஙனம் தன் வரலாற்றை அவள் கூறி முடித்தாள்.


    அவள் தன்னிடத்திலிருந்த தூய்மையில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தாள்.
    தன் மகன் யாண்டும் உண்மையையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவ்வுண்மையே
    அவனுக்கு வாழ்க்கையில் வெற்றிதரும் என்றும் அவள் உறுதிகொண்டிருந்தாள்.
    ஆகையால் அவள், “மகனே, நீ உன் குருவிடம் உண்மையை உள்ளபடி சொல்.
    எனக்குக் கோத்திரம் தெரியாது. என் பெயர் ஸத்தியகாமன். என் தாயின் பெயர் ஜாபாலா.
    ஆகையால் நான் ஸத்தியகாமன் என்ற ஜாபாலன் ஆவேன் என்று கூறி உன்னை
    அறிமுகப்படுத்திக்கொள்!” என்று ஸத்தியகாமனிடம் கூறி அவனை குருவிடம் அனுப்பி வைத்தாள்.


    ஸத்தியகாமன் தாயினிடமிருந்து அறிந்த விபரத்தை வைத்துக்கொண்டு தாயினுடைய
    கால்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு குருவினிடம் புறப்பட்டுப் போனான். தாயும் அவனை
    ஆசீர்வதித்து அனுப்பி வைத்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் அவனை அவள்
    அருள்நோக்கோடு பார்த்தவண்ணம் இருந்தாள். கண்பார்வையினின்று அவன் மறைந்ததும்
    அவனுக்கு ஏற்படும் தடைகளெல்லாம் நிவர்த்தியாக வேண்டும் என்று இறைவனிடம்
    பிரார்த்தனை செய்துகொண்டாள்.


    கெளதமர் என்னும் புகழ்பெற்ற ரிஷியின் ஆசிரமத்தை ஸத்தியகாமன் சென்றடைந்தான்.
    அவ்வாசிரமம் தவம் புரிவதற்கு ஏற்ற இடமாக அமைந்திருந்தது. ஸத்தியகாமன்
    அவ்வாசிரமத்தை அடைவதற்கு சற்று தூரத்திலேயே அங்கு நிகழ்ந்த யாகத்தினின்று
    உண்டாகிய நெருப்பின் புகையைக் கண்டான். பிரம்மசாரிகள் ஓதிய வேதத்தின் ஓசை
    காற்றில் மிதந்து வந்து அவன் காதில் விழுந்தது. அப்பொழுது சூரியன் மேல்திசையில்
    மறைந்து கொண்டிருந்தான். சூரியனுடைய மறைவானது ஆகாயத்தில் தெய்வ சாந்நித்தியத்தை
    உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. ஸத்தியகாமன் ஆசிரமத்தை அணுகியபொழுது பசுக்கூட்டம்
    மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆசிரமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தான்.
    சில பிரம்மசாரிகள் அடுத்தநாள் ஹோமாக்கினிக்கு சமித்துத் தயார் செய்து கொண்டிருந்தனர்.
    இவனும் சில சமித்துகளைத் தயார் செய்துகொண்டு அவர்களோடு சேர்ந்து ஆசிரமத்துக்குச்
    சென்றான். வழிநடையால் ஸத்தியாகாமன் களைப்புற்றிருந்ததால் சிறிது ஓய்வெடுத்துக்கொண்டான்.
    இரவு பிரார்த்தனைக்குப் பின்பு கெளதம முனிவரிடம் அழைத்துச் செல்லப்பட்டான்.
    குருவுக்கு மரியாதையோடு கூடிய வணக்கம் செய்து அவருடைய திருவடிகளில்
    தான் கொண்டுசென்றிருந்த சமித்தை காணிக்கையாக சமர்ப்பித்தபின்,
    “இதை காணிக்கçயாக ஏற்றுக்கொண்டு பிரம்ம ஞானம் பெறுவதற்கு முதல்படியாக
    உள்ள பிரம்மசரிய தீட்சையை எனக்குத் தந்தருளுங்கள்!” என்று குருவைக் கேட்டுக்கொண்டான்.


    continue......
Working...
X