Announcement

Collapse
No announcement yet.

சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன&

    சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன், உபகோஸலர் - 5


    உபகோஸலர்


    கெளதம முனிவரிடமிருந்து ஞானோபதேசம் பெற்றபின் ஸத்தியகாம ஜாபாலன்
    குரு ஸ்தானம் பெற்றார். அவருடைய பெருமை எங்கும் பரவியது. பலர் வேதங்களைப்
    பயிலுவதற்கும், பிரம்மஞானத்தைப் பெறுவதற்கும், பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிப்பதற்கும்
    அவரிடம் வந்தனர்.


    பண்டைக்காலத்தில் குருவிடமிருந்து பிரம்மச்சரியம் அனுஷ்டித்து பிரம்மவித்தையைக் கற்றார்கள்.
    கல்விபெறும் பயிற்சி முடிந்தவுடன் சிலர் சிறந்த இல்லற வாழக்கையில் ஈடுபட்டார்கள்.
    இன்னும் சிலர் வாழ்க்கையில் மேலாம் நிலையில் இருக்கும் சந்நியாச வாழ்க்கையில்
    இறங்கினர். சந்நியாச வாழ்க்கை உயர்ந்தது எனினும் இல்லற வாழ்க்கையில் இருப்பது
    இன்னும் பலருக்கு உதவிபுரிவதற்கு அனுகூலமாக இருக்கும் என்ற எண்ணத்துடன்
    அவ்வாழ்க்கையில் சிலர் ஈடுபட்டார்கள். இல்லற வாழ்க்கையில் இறங்கியவர்களுள்
    ஸத்தியகாமனும் ஒருவர். கெளதம முனிவரிடமிருந்து பிரம்ம வித்தையைக் கற்றான.
    பிறகு அழகான ஸ்திரீயை மணந்து கொண்டார். அம்மாது சமயக் கொள்கையிடத்தும்
    கணவரிடத்தும் பக்தி நிரம்பப் பெற்றவராக இருந்தார். ஸத்தியகாமருடைய
    ஆச்ரமத்துக்கு வந்த பிரம்மசாரிகள் அம்மாதுவிடமிருந்து தாய் அன்பைப் பெற்று
    வந்தார்கள். தங்களுக்குத் துன்பமும் துக்கமும் ஏற்பட்ட காலத்து அம்மாதுவிடமிருந்து
    அவர்களுக்கு மனச்சாந்தி கிடைத்து வந்தது. அம்மாது ஆச்ரமத்தில் இருந்ததால்
    கட்டுப்பாடான ஆச்ரம வாழ்க்கையும் உள்ளத்துக்கு உவந்த வாழ்க்கையாக அமைந்திருந்தது.


    அவ்வாச்ரமத்தில் ‘உபகோஸலர்’ என்னும் வாலிப பிரம்மச்சாரி ஒருவர் இருந்தார்.
    பன்னிரண்டு ஆண்டுகளாக அவ்வாச்ரமத்தில் வசித்திருந்து தமக்கு அமைந்த கடமையை
    முறையாகக் கவனித்து வந்தார். கல்விக்குரிய காலம் முடிந்ததும் மற்ற பிரம்மசாரிகள்
    அவர்களுடைய வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உபகோஸலருக்கோ
    பிரம்மஞானமும் உபதேசிக்கப்படவில்லை; வீடு செல்லுவதற்கு அனுமதியும் தரப்படவில்லை.
    உபகோஸலரிடம் ஸத்தியகாமர் இங்ஙனம் பாராமுகமாக இருந்ததற்குத் தகுந்த காரணம் உண்டு.
    அக்காரணம் ஸத்தியகாமர் ஒருவருக்குத்தான் தெரியும். ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகக்
    கழிந்து கொண்டே போயின. ஆனால் உபகோஸலர் நிலைமட்டும் அதேமாதிரி தான் இருந்தது.
    உபகோஸலர் ஏமாற்றமும் துன்பமும் அடைந்தார். இவருடைய நிலைமையை
    ஸத்தியகாமருடைய மனைவி அறிந்து, இவர்மீது அனுதாபம் கொண்டாள்.
    ஸத்தியகாமரிடம் உபகோஸலர் என்னும் பிரம்மச்சாரி நீண்டகாலம் சிறந்த தபசு
    செய்து வந்திருக்றார். அவருக்கு நீங்கள் உபதேசம் செய்தாக வேண்டும் என்று
    விநயமாகக் கேட்டுக் கொண்டாள். மனைவியின் வேண்டுதலைக் கேட்டும்
    உபகோஸலருக்கு உபதேசம் செய்யாமலேயே ஸத்தியகாமர் நீண்டதொரு
    க்ஷேத்திர யாத்திரை புறப்பட்டு விட்டார்.


    காரியமாகிய இப்பிரபஞ்சத்திற்குக் காரணமாக இருப்பவர் கடவுளே என்பதை ஞானிகள்
    நன்கு அறிவர். ஆகையால் இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் கடவுளின் தோற்றம்
    என்பது வெளிப்படையாகிறது. இப்பிரபஞ்சத்தில் மனிதன் எதைக் கடவுள் சொரூபமாகக்
    கருதி உபாசித்து வருகின்றானோ அதன் மூலம் கடவுள் உரிய காலத்தில் அவனுக்கு
    ஞானத்தைப் புகட்டுகின்றார். அக்கினி வழிபாடு செய்து வந்த உபகோஸலருக்கு
    உரிய காலத்தில் அந்த அக்கினியே உபதேசம் செய்யும் என்று எண்ணியே ஸத்தியகாமர்
    யாத்திரை சென்றார்.


    உபகோஸலருக்கு வாழ்க்கையில் அது இருள்சூழ்ந்த காலமாகத் தென்பட்டது.
    இருளைப் பின்தொடர்ந்து வெளிச்சம் வருகிறது என்பதை விடியற்காலைநேரம்
    விளக்கிக் காட்டுவது போன்று அவருடைய வாழ்க்கையிலும் ஞானஒளி ஏற்படப் போகிறது
    என்பதற்கு அறிகுறியாக நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டது. ஹோமாக்கினிக்கு முன் ஆழ்ந்த நிஷ்டையில்
    உபகோஸலர் அமர்ந்திருந்தபொழுது அந்த அக்கினி மூன்று வடிவங்கள் மூலமாக அவருக்கு
    உபதேசம் செய்ய முன்வந்தது. இது அவருடைய முழுக்கவனத்தையும் ஈர்த்தது.
    அக்கினியிடம் இருந்து வந்த ஓசையை உபகோஸலர் கவனமாகக் கேட்டார்.
    பிராணன் பிரம்மம், ‘க’-பிரம்மம், ‘க்க’-பிரம்மம் என்று அக்கினி உபதேசிப்பதாக உணர்ந்தார்.


    continue.............
Working...
X