ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsநாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..

சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..

மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..

மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..

அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!

நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!

மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!

புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!

வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..

விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்.

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்

சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு.. வாழ்க்கையில் நிறைவு கிடைக்கும்..