அந்த காலத்தில் பிரம்மச்சாரிகள் குருகுலவாசமாக 12 ஆண்டுகள் கல்வி கற்பது வழக்கம். இப்படி படிக்கும் காலத்தில் அறிவு பெறுவதை தவிர சாப்பாடு, ஆடை, ஆபரணம் போன்ற உலகியல் விஷயங்களில் எந்த நாட்டமும் கொள்ளக் கூடாது.

குருவையும், குருபத்தினியையும் தெய்வமாகக் கருத வேண்டும். குருபத்தினியே தாய் போல இருந்து சீடர்களுக்கெல்லாம் நித்யபடியாக சோறிடுவாள். இப்படி சாப்பிட்ட சீடனைப் பற்றிய வேடிக்கை கதை ஒன்று சொல்வார்கள்.

ஒரு குருகுலத்தில் ஒரு சீடன் தினமும் குருபத்தினி இடும் உணவை சாப்பிட்டு வந்தான். அவனுக்கு ஒருநாள் அவள் சாதமும், குழம்பும் விட்டு அதில் நெய் விடுவதற்குப் பதிலாக எண்ணெய்யை ஊற்றி விட்டாள். உடனே சீடன், ""அம்மா! என்ன நெய் ஊற்றினால் அல்லவா
சாப்பிட முடியும்? நீங்கள் எண்ணெய்யை சாதத்தில் விடுகிறீர்களே'' என்றான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅவள் குருவிடம் போய் ""இந்த பிள்ளை குருகுலத்திற்கு வந்து 12 வருஷம் ஆகி விட்டது. இனி இவனை அனுப்பி விடுவது தான் சரி'' என்றாள்.

விஷயமறிந்த சீடனும்,""ஏன் என்னை அனுப்பச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான்.

அதற்கு குருபத்தினி, ""நீ வந்த நாளில் இருந்து 12 வருஷமாகவே எண்ணெய் தான் ஊற்றி வந்தேன். பாடத்தில் கவனம் இருந்ததால்,நீ சாப்பிடுவது இன்னதென்றே தெரியாமல் சாப்பிட்டு வந்தாய். இப்போதோ, உலகியல் விஷயத்தில் நாட்டம் வந்து விட்டது. உன்னை அனுப்புவது தான் சரி,'' என்றாள். இப்படி, குருவை விட குருபத்தினிகளும் சீடர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்காக இதைச் சொல்வார்கள்.

இன்றைய நாளில் இதை நாம் சாப்பிடுமுறையுடன் தொடர்பு படுத்திப் பார்க்க முடியுமா?????

நன்றி whatsup !