உங்களுக்கு சமஸ்கிருதம் படிக்க ஆசையா?, ஆமாம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால்,,,,,,, நான் வேலைக்குப் போகிறேன். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் லீவு. சமஸ்கிருத வகுப்பிற்கு நேரில் போகமுடியவில்லை.
எனக்கு வயது 50க்கு மேல் ஆகிறது. சமஸ்கிருத வகுப்பிற்கு நேரில் போனலும் வயது காரணமாக பாடத்தை உடனே மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியாது. நான்கு ஐந்து தரம் சொன்னால்தான் மனதில் பதியும். பக்கத்தில் இருக்கும் சின்னப் பையன் ஒரே தரத்தில் மனதில் பதிய வைத்துக் கொள்வான். பார்ப்பவர்கள் வயதை பார்க்கமாட்டார்கள். ஐந்து தரம் சொல்லியும் இவருக்கு புரியவில்லையே என்று நினைப்பார்கள். அதனால் வெட்கப்படனும்., ,,, என்று நீங்கள் சொல்வதும் கேட்கிறது.
இதற்கெல்லாம் முடிவு கிடைத்துவிட்டது.
நீயூ டில்லியில் உள்ள ராஷ்டிரிய சமஸ்கிருத ஸ்ம்ஸ்தான் DVD வழியாக சம்ஸ்கிருதம் கற்க
30 DVD க்களை வெளியிட்டுள்ளார்கள். ஓவ்வொரு DVD யிலும் 4 பாகங்கள் வீதம் 120 பாகங்கள் மொத்தம் உள்ளன. இதை அழகான இரண்டு பவுச்களில் போட்டு ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்புகிறார்கள். இதை கம்யூட்டரிலும், டிவியிலும் போட்டுப் பார்க்கலாம்.
நாம் சமஸ்கிருத வகுப்பில் இருப்பது போலவே இருக்கும்.
சமஸ்கிருதத்தில்தான் சொல்லிக்குடுக்கிறார்கள். மற்ற மொழிகளில் எதுவும் சொல்லுவதில்லை.
நன்றாக புரிகிறது. விளக்கமாகவும், எளிமையாகவும் உள்ளது. சார்ட் மற்றும் அந்த அந்த பொருள்களை நேரில் காட்டியும் விளக்கம் கொடுக்கிறார்கள்.
ஹிந்தியில் மட்டும் சில விளக்கங்களை முன்னுரையாகவும் முடிவுரையாகவும் சொல்கிறார்கள். கதைகள், ஸுபாஷிதம், நடனம் , ஸ்லோகம்மூலமும் சொல்கிறார்கள். ஒவ்வொரு DVD ஐயும் நாம் பல முறை பார்க்கும் போது மனதில் பதிந்து விடுகிறது.
ஒரே ஆசிரியரில்லாமல் பல ஆசிரிய, ஆசிரியைகள் பாடம் எடுக்கிறார்கள். எனவே போரடிக்காது. அங்கு உள்ள மாணவர்களூடன் நாமும் இருப்பதுபோல் இருக்கும்.
DVDக்களை வீட்டில் உள்ள ஹாலில் உள்ள டிவியில் போட்டுப் பார்க்கும்போது நம் குழந்தைகளும் பார்க்கும், படிக்க ஆர்வம் உண்டாகும்.
உபயோகமில்லாத அழுகை சீரியல்களையும், அடி, தடி, வன்முறைப் படங்களையும் பார்த்து நம் இனிய நேரத்தை நாமே கொலை செய்கிறோம். அந்த நேரத்தில் இந்த DVDக்களை பார்க்கும்போது ஒரு மொழி கற்ற திருப்தி ஏற்படும். யாரும் கற்கலாம். ஜாதி, மதம், வயது இல்லை.
பிராமணர்கள் கண்டிப்பாக கற்க வேண்டும்.
30 DVDக்களையும் பலமுறை பார்த்த பிறகு நீங்களாகவே சம்ஸ்கிருதத்தில் பேச ஆரம்பித்துவிடுவீர்கள்.
சம்ஸ்கிருதத்தை சில விஷமிகள் செத்த மொழி(ம்ருத்யூ பாஷா) என்று சொல்கிறார்கள்.
இது எவ்வளவு தவறு என்று DVDக்களை
பார்ப்பவர்களுக்குத் தெரியும்., சொன்னவர்கள் சர்வ முட்டாள்கள் என்பதும் புரியும்.
இதனால் நுரையீரல் பலம் பெறுகிறது. உடலின் அத்தனை பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்பட்டு திசுக்கள் (Cells) பலம் பெற்று கெட்ட கார்பன்-டை-ஆக்ஸைடு (Co2)வெளியேற்றப்பட்டு இரத்தம் சுத்தமாகிறது.
இதயம் பலம் பெறுகிறது,நமக்கு ஆரோக்கியம் அமைகிறது. அதனால் ஆயுள் கூடுகிறது.
சம்ஸ்கிருதம் கற்பதால் கெட்ட சிந்தனைகள், காமம் , கோபம் , பொய், குடிப்பழக்கம், அடுத்தவரை கெடுக்கும் குணம் இவை எல்லாம் நம்மை விட்டு ஒழிகிறது.
தெய்வபக்தி, நல்ல சிந்தனைகள், பரோபகாரம். விட்டுக் கொடுத்தல், பொறுமை, போன்ற நல்ல குணங்கள் வளருகிறது,இவை சமுகத்தில் நம்மை நல்ல மனிதனாக அடையாளம் காண உதவுகிறது,.
Bookmarks