*பெண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக ஆணை படைக்க ஆரம்பித்தார்*.
🌼*ஒரு நாள், இரு நாள் அல்ல*.
🌼*தொடர்ந்து 6 நாட்களாக ஆணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்*.
🌼*இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்? என்றது*.
🌼*அதற்கு கடவுள், இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்*.
🌼*இந்த ஆண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்*.
🌼*அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்*.
🌼*சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவன் மருந்தாக இருக்க வேண்டும்*.
🌼 குடும்பத்தில் உள்ள அனைவருக்குக்காக அவனே உழைக்க வேண்டும்.

🌼*இது அத்தனையும் செய்ய அவனுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும், என்று விளக்கமாகச் சொன்னார்*.
🌼*இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும? என்று ஆச்சரியப்பட்டதுதேவதை*.
🌼*ஆர்வத்துடன் லேசாக ஆணை தொட்டுப் பார்த்து விட்டு, ஆனால் இவனை ரொம்ப கடினமாக படைத்திருக்கிறீர்களே? என்றது தேவதை*.
🌼*அதற்கு கடவுள், இவன் உடலளவில் கடினமானவன் *.
🌼*ஆனால் மனதளவில் ரொம்ப ரொம்ப மென்மையானவன் *.
🌼*அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவான் *.
🌼*அது மட்டுமல்ல, அவனால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்*.
🌼*கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவனுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்*.
🌼*சிரிப்பு வந்தாலும் அதை கோபம் மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு*.
🌼*தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வான் *.
🌼*மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவான் , என்றார்*.
🌼*ஓஇந்தளவுக்கு ஆணால் யோசிக்க முடியுமா? தேவதை கேட்டது*.
🌼*எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல*.
🌼*அவற்றுக்கு தீர்வையும் அவனால் சொல்ல முடியும், என்று விவரித்தார் கடவுள்*.
🌼*அந்த தேவதை ஆணின் கண்களை தொட்டுப் பார்த்து விட்டு, இவன் கண் ஏன் வரச்சியாக இருக்கு இவன் கண்களில் கண்ணீர் வராதா? என்றது *.
🌼*ஒரு ஆணின் கண்ணீர்.மிகவும் மென்மையானது அது எப்பவும்மே வராது அது வந்தால் அவனை மட்டும் அல்ல அவனை சுற்றி உள்ள அனைவரையும் பாதிக்கும் என்பதால், அவனுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே சிரித்தே கடந்து செல்வான் , என்று பதிலளித்தார் கடவுள்*.
🌼*ஆச்சரியமான தேவதை, உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்*.
🌼*இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா? என்றது தேவதை*.
🌼*தன்னுடைய மதிப்பு என்னவென்று அவனுக்கு எப்போதுமே தெரியாது, கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்*.
🌼நன்றி 🌼
🌼படித்தால் மட்டுமல்ல
பகிரும்போதும் சந்தோசமே.🌼

அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends