Announcement

Collapse
No announcement yet.

Maha Syamalaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Maha Syamalaa

    Courtesy: https://groups.google.com/forum/#!to...ni/XdO37TmgKS8


    மஹா சியாமளா (கரும்பு வில்)
    அததவ தனு: புண்ட்ரேக்ஷú
    த்வாத் ப்ரஸித்த மதித்யுதி
    திரிபுவன தூ முத்யஜ் ஜயோத்ஸ்னா
    கலாநித மண்டலம்
    ஸகல ஜனனீ ஸ்மாரம் ஸ்மாரம்
    கத: ஸ்மரதாம் நரஸ்
    திரிபுவன வதூ மோஹாபம்
    போதே: ப்ரபூர்ண விதுர் பவேத்
    -சக்தி மகிம்ன ஸ்துதி
    உதிக்கும் சந்திர ஒளிக்கு இருப்பிடமாய் விளங்கும் உன் கரும்பு வில்லை தியானம் செய்பவன் மன்மதனுக்கு ஒப்பாவான் சியாமளா கரும்பு வில்லின் அதிதேவதை புத்தி தத்வத்தின் அதிகாரி மனம் என்ற வில்லைக்கொண்டு புத்தி தத்துவம் கட்டுப்படுகிறது புத்தி, மனம் இவை எல்லாம் இவ்வுடலின் சூக்ஷ்மப் பிரிவைச் சேர்ந்தது. இவள் தயவு இருந்தால் அம்பிகையினிடம் மனதையும் புத்தியையும் எளிதில் லயிக்கச் செய்ய முடியும்
    சியாமளா அம்பிகையின் பிரதம மந்திரி எல்லா அதிகாரமும் இவளிடம் கொடுக்கப்பட்டிருப்பதை உணர்த்த இவள் அம்பிகையின் முத்திரை மோதிரத்தை தரித்துக் கொண்டிருக்கிறாள் அம்பிகைக்கு வலது பக்கம் இவளுக்குரிய இடம்
    விசேஷஸ்து பரம் தஸ்யா: ஸசிவேச்யா: பரம்கரே
    மஹாராக்ஞீ விதீர்ணம் ததாக்ஞா முததிராங்குளீயகம்
    லலிதா பரமேசாந்யா ராஜ்ய சர்சாதுயாவதீ
    சக்தி நாமபியா சர்ச்சா ஸர்வா தஸ்யாம் வசம் வதா
    அம்பிகையின் மந்திரியானதால் மந்திரிணி என்றும் அழைக்கப்படுகிறாள். சங்கீதத்திற்கு இவளே அதிஷ்டான தேவதை. ஆகவே சங்கித சியாமளை என்றும் பெயர் மதங்கருடைய பெண்ணாக அவதரித்ததால் மாதங்கி என்ற பெயரும் உண்டு. இவளுக்கு 16 பெயர்கள் உள்ளன
    சங்கீத யோகினி, சியாமளா மந்திர நாயிகா
    மந்திரிணி சசிவேசானி ப்ரதானேசீ சுகப்பிரியா
    வீணாவதி வைணிகீச மந்திரிணி ப்ரியகப்பிரியா
    நீபப்பிரியா கதம்பேசி கதம்பவன வாஸினி
    ஸதா மதா ச நாமானி ÷ஷாடசதானி கும்பஜ
    1 சங்கீதயோகினி
    2 சியாமா
    3 சியாமளா
    4 மந்திரநாயிகா
    5 மந்திரிணி
    6 சசிவேசானி
    7 ப்ரதானேசீ
    8 சுகப்பிரியா
    9 வீணாவதி
    10 வைணிகீ
    11 முத்ரிணி
    12 பிரியகப்பிரியா
    13 நீபப்பிரியா
    14 கதம்பேசீ
    15 கதம்பவனவாஸினி
    16 ஸதாமதா
    ராஜ்யத்தை திறம்பட நிர்வகிக்க புத்திசாலித்தனம், சாதுர்யம் இவை அவசியம் ராஜ்யாதிகாரத்திற்குத் தேவையான மனனக் கிரியை புத்திசாமர்த்தியத்திற்கு மந்திரம் எனப் பெயர் (இதில் இருந்த வந்ததே மந்திராலோசனை) சியாமளாவின் அங்க உபாங்க தேவதைகள்.
    லகுச்யாமா:-
    மாணிக்க வீணா முபலாலயந்தீம்
    மதாலஸாம் மஞ்ஜுல வாக்விலாஸாம்
    மாகேந்திர நீலத்யுதி கோமலாங்கீம்
    மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி
    மாணிக்க மயமான வீணையை வாசிப்பவள் அழகான வாக்கு உடையவள் மஹேந்திர நீலம் போன்ற தேக காந்தி மதங்களின் பெண் இவளுக்கு நமஸ்காரம்
    இவள் அருள் இருந்தால் எல்லா கலைகளும் லகுவாக வரும் ஆகவே லகுசியாமளா.
    குருவினிடம் சந்தேகங்களை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வதே வாக்வாதினி என்ற வார்த்தையின் அர்த்தம் வத வத என்பது அடிக்கடி குருவை சந்திக்கும் அவசியத்தைக் குறிக்கும் குருநாதர்கள் சில அரிய விஷயங்களைப் பல தடவை கேட்டாலன்றி உபதேசிக்க மாட்டார்கள் சில விஷயங்கள் பல தடவை கேட்டால் தான் மனதில் புரியும்.
    உச்சிஷ்ட சாண்டாலி, மாதங்கி இவை தள்ளப்பட்டவை தாழ்ந்தவை, அருவருப்புள்ளவை என்பதைக் குறிக்கும். இறைவன் அத்தகையப் பொருள்களிலும் இருக்கிறான் என்ற ஞானம் வர வேண்டும் (உச்சிஷ்டம் என்றால் எச்சில் என்று பொருள் கொள்வதே அல்லாமல்) உத்கிருஷ்ட சிஷ்ட ஸத்வஸ்து பர ஸம்வித்தி ரூப: என்றும் பொருள் படும் ஜகத், ஜீவன் ஈஸ்வரன் ஸ்வரூபுத்தை ஆராய்ந்து மிஞ்சும் சிரேஷ்டமான சம்வித்ஞான ஸ்வரூபம் எதுவோ அது எனப் பொருள் சாண்டாலி மாதங்கி என்றால் துர்க்கை என்றும் பொருள்படும்
    வாக்வாதினி:-
    அமல கமல ஸம்ஸ்தா லேகிநீ புஸ்த கோத்யத்
    கரகயுகல ஸரோஜா குந்த மந்திர கௌரா
    த்ருதச சதர கண்டோல்லாஸி கோடீர பீடா
    பவது பவ பயாநாம் பங்கிநீ பாரதி ந:
    அகண்ட ஞானத்தைப் பொருளாகக் கொண்டது அதைப் பற்றி அறிந்து அனுபவத்திற்கு கொண்டு வர வேண்டும்.
    நகுலீ:-
    ஞானம் பெற்றாலும் தவறு செய்ய வாய்ப்புகள் உண்டு அத்தவறுகள் விஷம் போன்றவை நகுலம் என்றால் கீரிப்பிள்ளை விஷத்தில் பாதிக்கப்படாமல் இருக்க இவள் தயவு அவசியம் வித்யை லக்ஷ்யத்தையடைய விரோதமானதைத் தவிர்க்க வேண்டும்.
    புத்தி தத்துவம் ஞானம் பெற உதவுவது அதற்கு தடையாக உள்ள தடங்கல்கள் தவறுகள் இவைகளைப் போக்கிப் கொள்வதே இந்த சியாமளா அங்க தேவதைகளின் உபாசனை.
    "இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவளின்றி யார் சுமக்க முடியும்?" .


    குமார் ராமநாதன்.
Working...
X