Announcement

Collapse
No announcement yet.

மஹா பெரியவாள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மஹா பெரியவாள்

    Click image for larger version

Name:	maha.jpg
Views:	1
Size:	15.8 KB
ID:	35764



    கலியுக மகிமையால் தற்போது காவி உடை அணிந்திருப்போர் பற்பலர் உள்ளனர்!!
    அவர்களில் யார் துறவி? யார் உண்மையில் துறவி இல்லை?
    இந்த சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கும்!!
    நன்றாக மினுமினுக்கும் காவி வண்ணத் துணி அணிந்து கூடவே
    ஒரு பெரும் படையுடன் சுற்றி வரும் ஒருவர் தான் துறவியா?
    மொழு மொழுவென்று காவித் துணியையும் மீறி உடல் சதைகள்
    பிதுங்கி வரும் பலரும் துறவியா? (இன்னும் யாரேனும் துறவறம்
    ஏற்ற நிலையில் இப்படி இருந்திருக்கலாம்)!! ஆனால் உண்மையில்
    யார் துறவி? மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, உணவில்
    ஆசை, அலங்கார ஆசை, புகழில் ஆசை, புகழ்ச்சியில் மயங்கும்
    ஆசை இப்படிப் பற்பல ஆசைகளை வைத்துள்ளவர் துறவியா??
    இது பலருக்கும் ஏற்படும் சந்தேகம் தான்! இதைத் தீர்க்க
    ஒரு உண்மை சம்பவம் இதோ!!
    அவர் பலராலும் மதிக்கப்பட்ட
    ஒரு துறவி! சிறு வயதிலேயே துறவறம் ஏற்க வேண்டி
    ஒரு மடாதிபதியின் கோரிக்கையின் பேரில் ஒரே மகனாக
    இருந்த போதிலும் தம்முடைய பெற்றோரால் ஒப்புக்
    கொடுக்கப்பட்டவர்! துறவேற்ற பின்னர் சிறு வயதிலேயே
    அனைத்து ஆன்மீக விஷயங்களையும் கற்றுத் தேர்ந்தவர்!
    தம்முடைய பெற்றோர் ஒரு முறை தம்மை மடத்துக்கு
    தரிசிக்க வருகையில் அவர்கள் வருகையால் எந்தப் பரபரப்பும்
    கொள்ளாமல் இதர பக்தர்களைப் போலவே அவர்களையும்
    எதிர்கொண்டவர் அந்தத் துறவி!
    இன்னும் மாபெரும் துறவியான ஆதிசங்கரர் பகவத் பாதரே துறவியின் தாய்க்கு விலக்கை அளித்துள்ளார் என்பது நாம் அறியாத விஷயம்! ஆம் பலரின் எதிர்ப்பை மீறி
    தம்முடைய தாய்க்கு அவர் விருப்பப்படியே தம் கரங்களால்
    இறுதி சடங்குகளை மேற்கொண்டவர் ஆதி சங்கரர்!! அந்நேரத்தில்
    அவரால் பாடப்பட்ட மாத்ரு பஞ்சகம் என்பது எக்காலத்தும்
    தாயின் சிறப்பை எடுத்துரைப்பது!
    ஆனால் நம் துறவியோ பெரிய மடத்தின் தலைமைப் பொறுப்பில்
    இருந்தார்! ஒரு நாள் மாலை அவர் அம்மன் கோவிலில் இருந்த நேரம்
    அவர் தாயார் மறைந்த செய்தி அவரிடம் சொல்லப்பட்டது!!
    அதைக் கேட்டுக் கொண்டவர் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை!
    தம்முடைய தண்டத்தை அப்பால் வைத்தவர் உடன் சென்று
    குளத்தில் ஸ்நானம் செய்து விட்டு வந்தார்! அதன் பின்னர் மடத்துக்கு
    சென்று நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்! அவரிடம் வேறெதுவும்
    கேட்கும் தைரியம் மடத்தின் பணியாளர்களுக்கு உண்டா என்ன??


    இன்னும் அவர் மடாதிபதியாகி சில ஆண்டுகளுக்கு துறவிகளுக்கு
    உள்ள இரண்டு வேளைகள் உணவை உட்கொண்டு வந்து கொண்டிருந்தார்!
    ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலையைத் தாண்டியவுடன் அதை
    நிறுத்தி விட்டார்! அதன் பின் ஒரே வேளை மட்டும் மதிய வேளையில்
    உண்டு வந்தார்! அது என்ன உணவு தெரியுமா??
    கீரையைக் கடைந்து சோற்றில் பிசைந்து செய்த உணவு
    மூன்று கவளங்கள் மட்டும் ஒரு நாளில் ஒரே வேளை மட்டும்
    உண்டு வந்தார்! இது பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தது!
    இதனால் அவர் உடல் தளர்ந்து வந்து ஒட்டிய உடல் ஒன்று
    மட்டுமே அவருடையதாக இருந்து வந்தது!!
    அதற்கும் ஒரு சோதனை வந்தது! ஆம் ஒரு நாள் உணவை உண்ட
    அவர் அடுத்த நாள் உணவை எடுக்கவில்லை! மடத்தின் பணியாளர்
    ஏதேனும் குறையோ என்று குமைந்து போய் அவரிடம் எதைக் கேட்பது
    என்று எண்ணி கண்கலங்கி நின்றார்கள்! அன்று முழுதும் பட்டினியாக
    இருந்த அவரிடம் அடுத்த நாள் காலை ஸ்நானம் செய்தவுடன்
    மடத்துப் பணியாளர் உணவின்றி இருப்பதன் காரணம் கேட்டு
    தம்மிடம் ஏதேனும் தவறு உள்ளதா, திருத்திக் கொள்கிறேன்
    என்று பவ்வியமாக கேட்டு நின்றார்!!
    அதற்கு துறவி சொன்னார், உன்னிடம் தவறேதுமில்லை
    தவறு என்னிடம்தான்!! இனி எனக்கு உணவாக மதியம்
    ஒரு கிண்ணம் அரிசிப் பொறியில் பாலைக் கலந்து கொடு
    அதுதான் இனி என்னுடைய உணவு என்றார்! அதிர்ந்த மடத்தின்
    பணியாளர் சுவாமி ஏன் இந்த முடிவு நான் என்ன தவறு செய்தேன்
    என்று கண்ணீர் மல்கக் கேட்டார்! அதற்கு ஒட்டித் தளர்ந்திருந்த
    அந்தத் துறவி சொன்னார் " உன் பேரில் தவறேதும் இல்லை!
    நேற்று உணவுண்ணும் போது திடீரென்று எனக்குள் ஒரு எண்ணம்
    தோன்றியது!! இன்றைக்கு கீரை மிகவும் சுவையாக உள்ளதே
    என்று தோன்றியது!! இது என் துறவு வாழ்வுக்கு ஒவ்வாத விஷயம்!
    அதனால் இன்று முதல் சுவையை என் வாழ்வில் களைந்து விட்டேன்!
    இனி ஒரு கிண்ணம் அரிசிப் பொறியும் பாலும் மட்டுமே எனக்கு உணவு"
    என்று பிடிவாதமாக கூறி விட்டார்!! அந்த உணவு அதைத் தாண்டி
    ஒரு முப்பதாண்டுகள் பக்கம் அவர் நூறாவது ஆண்டைத் தொட்டு
    முக்தி அடையும் வரைக்கும் அதுவே அவர் உணவாக இருந்தது!!
Working...
X