படித்ததில்_ரசித்தது....

1.ஒரிஜினல் எலுமிச்சையை காரில் நசுக்கிவிட்டு, கெமிக்கல் எலுமிச்சையை குடித்து களிக்கிறோம்..!!

2.காது குத்தியதற்கான அடையாளமும், மூக்கு குத்தியதற்கான அடையாளமும், தெரிந்து விடுகின்றன.. ஆனால் முதுகில் குத்தியதற்கான அடையாளம் தெரிவதில்லை..!!

3.இங்கிலிஷ்ல பேசி வெள்ளைக்காரன் கம்பனில வேலை வாங்குறது பெருசில்ல.. தமிழ்ல ஒரு வார்த்தை கூட தெரியாம நம்மகிட்ட வேலை வாங்குற அவன் தான் பெரியாளு..

4.இருட்டுல திடுக்குனு ஒரு உருவத்த பாத்தா அது கடவுள்ன்னு யாரும் நினைக்கிரதில்ல.. கடவுள் மேல அம்முட்டு நம்பிக்கை..!!

5.நாக்கு ஒரு தீ! ஆக்கவும் அழிக்கவும் வல்லது.. கவனமாக பயன்படுத்துங்கள்..

6.படிச்சவன் பாடம் நடத்தறான்.. படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்தறான்..!!

7.பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?.. செலவு செய்யுங்க..!உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க..!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends8.பத்து ரூபாய் கேட்பவனை பிச்சைக்காரன் என்று கேவலப்படுத்தும் சமூகம், பல இலட்சம் கேட்பவனை மட்டும் மாப்பிள்ளை என்று கௌரவப்படுத்துகிறது..

9.ஒவ்வொருவருக்கும் ஒரு முட்டாளின் உதவி தேவைப்படுகிறது.. தன்னை அறிவாளியாய் காட்டிக்கொள்ள..!!

10.எந்த சூழ்நிலையிலும் நமது வாழ்க்கையில் இவர்கள் மூவரை மறக்க கூடாது..

i. கஷ்டத்தில் உதவியவன்..

ii. கஷ்டத்தில் உதவாதவன்..

iii. கஷ்டத்தை உருவாக்கியவன்.