திதியும் தேவதைகளும்


பிரதமை - அக்னி
துதியை - பிரம்மா
திருதியை - குபேரன்
சதுர்த்தி - கணபதி
பஞ்சமி - நாகதேவதைகள்
ஷஷ்டி - முருகன்
ஸப்தமி - சூரியன்
அஷ்டமி - ருத்திரன்
நவமி - துர்கா
தசமி - யமன்
ஏகாதசி - விஸ்வதேவர்
துவாதசி - விஷ்ணு
திரயோதசி - காமதேவன்
சதுர்தசி - சிவன்
பௌர்ணமி - சந்திரன்
அமாவாசை அன்று எல்லா தேவதைகளும்
நிலவில் இருப்பதால், மறுபடியும் 16 வது நாள்
முதல் மீண்டும் அடுத்த சுற்று ஆரம்பிக்கும்.


இவ்விதம் சூரியக்கடவுள் இந்த திதிகளை நிர்வகிப்பதால்,
எல்லா திதிகளும் சூரியனே சார்ந்தே உள்ளது.


இந்த திதி தேவதைகளை அந்தந்த திதியன்று வணங்கினால்
என்னென்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.


ஒவ்வொரு தேவதைகளையும் அந்தந்த தேவதைகளுக்குரிய
மந்திரங்களை சொல்லியும், பிரியமான விரதங்களை அனுஷ்டித்தும்,
பூஜைகள் நடத்தியும், கும்பிடுதல் - ஸாஷ்டாங்க நமஸ்காரம் -
பிரதிக்ஷணம் போன்ற முறைகளில் ஆராதனை செய்கிறபோது
தேவதைகள் மகிழ்ந்து என்னென்ன விதமான அனுகிரங்களை
செய்யும் என்பதைக் காண்போம்.
பிரதமை திதியன்று அக்னியை ஆராதித்தால்,
குறைவில்லாத செல்வமும், தானியங்களையும் வழங்கும்.


துதியை திதியன்று பிரம்மாவை ஆராதித்தால்,
கல்வியில் நிபுணத்துவமும் அதன் மூலம் சிறப்பும் தருவார்.


திருதியை திதியன்று குபேரனை ஆராதித்தால்,
செல்வங்களை வழங்குவார். எல்லா பண பரிமாற்றத்திலும்
வெற்றியும் ஆதாயமும் தருவார்.


சதுர்த்தி திதியன்று கணபதியை ஆராதித்தால்,
காரியத்தடைகளை நீக்கி, காரிய வெற்றியை தருவார்.


பஞ்சமி திதியன்று நாகதேவதைகளை ஆராதித்தால்,
விஷபயம் நீங்கும். வாழ்க்கைத் துணை அமையும்.
சர்ப்பதோஷம் விலகும். செல்வத்திற்கு அதிபதியான
லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.


ஷஷ்டி திதியன்று முருகனை ஆராதித்தால்,
தேக அழகு கூடும். நீண்ட ஆயுள் சித்திக்கும்.
நிபுணராக திகிழலாம். பேர் - புகழ் உண்டாகும்.


ஸப்தமி திதியன்று சூர்யநாராயனை ஆராதித்தால்,
எல்லா திதிகளுக்கும் உயர் அதிபதி என்பதால்
எல்லா திதிகளுக்குரிய பலன்களையும் தருவார்.


அஷ்டமி திதியன்று ரிஷப வாகனத்தில் அமர்ந்து இருக்கும்
சிவனை ஆராதித்தால்,
புத்திகூர்மை - வனப்பு - ஏமாற்றங்களில் இருந்து விடுதலை,
நீண்ட ஆயுள் இவைகளை தருவார்.


நவமி திதியன்று துர்காவை ஆராதித்தால்,
மனதில் நம்பிக்கை - மன உறுதி - மனோதைரியம் -
அவரவர் வாழ்க்கையில் இருக்கும். எதிரிகளை இலகுவாக
வென்று விடலாம். எல்லா செயலிலும் வெற்றி, என்று அவர்கள்
வாழ்க்கை சிறப்பாக அமையும்.


தசமி திதியன்று யமனை ஆராதித்தால்,
உதவிகள் கிடைக்கும். நோய் தாக்குதல் இருக்காது.
நோய்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்கும்.
வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்படாது.


ஏகாதசி திதியன்று விஸ்வதேவனை ஆராதித்தால்,
வாரிசு கிடைக்கச் செய்வார். செல்வச்செழிப்பு சிறக்க
செய்வார். சொந்தமாக பூமி கிடைக்க செய்வார்.


துவாதசி திதியன்று விஷ்ணுவை ஆராதித்தால்,
வாய்ப்புகளை வெற்றியாக்குவார். சமூக அந்தஸ்து
உயரும். நிர்வாகம் சிறக்கும்.


திரயோதசி திதியன்று காமதேவனை ஆராதித்தால்,
சௌந்தரியம் - விரும்பிய மனையாள் அல்லது கணவர்
அமையும். மன விருப்பங்களை நிறைவேற்றித் தருவார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சதுர்தசி திதியன்று சதாசிவனை ஆராதித்தால்,
ஒருவருக்கு ஆடம்பர வாழ்வு கிடைக்கும். புத்திர
பாக்கியம் - ஏராளமான சொத்து - அபரிமிதமான விளைச்சல்
உண்டாகும்.


பௌர்ணமி திதியன்று சந்திரனை ஆராதித்தால்,
அரசில் பதவி - வேலையில் பதவி உயர்வு -
அரசாங்க ஆதரவு - இவைகள் கிடைக்கும்.
அவற்றை எந்தவகையிலும் முறியடிக்கவும் இயலாது.


மேலும் பல விஷயங்களை இனி காண்போம்....