Announcement

Collapse
No announcement yet.

நவராத்திரி நைவேத்யங்கள் :)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நவராத்திரி நைவேத்யங்கள் :)

    நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.

    சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வரவேர்க்கப் படுகின்றன
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: நவராத்திரி நைவேத்யங்கள்

    முதலில் என்ன என்ன சுண்டல் கள் செயலாம் என பார்க்கலாம்.

    கொத்துக்கடலை,
    பச்சை பயிறு,
    வேர்கடலை,
    பட்டாணி,
    காராமணி,
    மொச்சை,
    ராஜ்மா,
    கொள்ளு,
    பயத்தம் பருப்பு,
    கடலை பருப்பு
    என சுண்டல்கள் செயலாம்


    கார சுண்டல்கள் 3 வகையாக சுண்டல்கள் செயலாம்.

    1. தேங்காய் பருப்பு போட்டு,
    2. மிளகாய் பொடி போட்டு , அல்லது
    3. மசாலா அரைத்து போட்டு
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      தேங்காய் பருப்பு போட்டு சுண்டல்

      இந்த வகை யான சுண்டல் செய்வதற்க்கு பட்டாணி, கடலை பருப்பு, வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை போன்றவை ஏற்றவை.

      தேவையானவை:

      மேலே சொன்ன பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, கொத்துக்கடலை ஏதாவது ஒன்று 1 கப்
      மிளகாய் வற்றல் 4 -5
      பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
      தேங்காய் துருவல் 1/2 கப்
      கறிவேப்பிலை கொஞ்சம்
      கடுகு 1 ஸ்பூன்
      உளுந்து 1 ஸ்பூன்
      தாளிக்க எண்ணை
      உப்பு

      செய்முறை:

      மேலே சொன்ன தனியங்களில், வேர்கடலை என்றால் 2 மணி நேரம் ஊரினால் போறும்.
      மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
      குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
      மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
      சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
      ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
      கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
      வெந்த பட்டாணி, போடவும்.
      நன்கு கிளறவும்.
      உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
      தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் .
      அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        தேங்காய் பருப்பு போட்டு சுண்டல் 2

        இந்த வகை யான சுண்டல் செய்வதற்க்கு கடலை பருப்பு,பயத்தம் பருப்பு போன்றவை ஏற்றவை.

        தேவையானவை:

        மேலே சொன்ன கடலை பருப்பு அல்லது பயத்தம் பருப்பு ஏதாவது ஒன்று 1 கப்
        மிளகாய் வற்றல் 2 -3
        பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
        தேங்காய் துருவல் 1/2 கப்
        கறிவேப்பிலை கொஞ்சம்
        கடுகு 1 ஸ்பூன்
        உளுந்து 1 ஸ்பூன்
        தாளிக்க எண்ணை
        உப்பு

        செய்முறை:

        இந்த இரண்டில் எந்த பருப்பை சுண்டல் செய்வதானாலும், ஊரவைக்க வேண்டியதில்லை.
        தேவையானபோது, நன்கு களைந்து, தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விடவும்.
        சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
        பருப்பு ரொம்ப குழயக்கூடாது.
        ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
        கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
        வெந்த பருப்பை கோட்டவும்.
        நன்கு கிளறவும்.
        உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
        தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் .
        அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி

        குறிப்பு: இதற்க்கு குக்கர் கூட வேண்டாம், வாணலி லையே செயலாம். தாளித்ததும் , களைந்த பருப்பை போட்டு, தண்ணீர் விட்டு மூடி அடுப்பை சின்னதாவ வைக்கணும். அப்ப, அப்ப கிளறனும். 'நருக்குனு' வெந்ததும், உப்பு, தேங்காய் துருவல் தூவி இறக்கணும். அவ்வளவுதான்
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          மிளகாய் பொடி போட்டு செய்யும் சுண்டல்

          பட்டாணி, கடலை பருப்பு, வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை, காராமணி என்று எல்லாவற்றிலும் சுண்டல் செயலாம்.

          தேவையானவை:

          மேலே சொன்ன பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, கொத்துக்கடலை ஏதாவது ஒன்று 1 கப்
          மிளகாய் பொடி 1 ஸ்பூன்
          பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
          கறிவேப்பிலை கொஞ்சம்
          கடுகு 1 ஸ்பூன்
          உளுந்து 1 ஸ்பூன்
          தாளிக்க எண்ணை
          உப்பு

          செய்முறை:

          மேலே சொன்ன தானியங்களில், வேர்கடலை என்றால் 2 மணி நேரம் ஊறினால் போறும்.
          மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
          குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
          மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
          சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
          ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , தாளிக்கவும்.
          கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
          வெந்த தானியத்தை , போடவும்.
          நன்கு கிளறவும்.
          உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
          மிளகாய் பொடி தூவி கிளறவும்.
          வாசனை போனதும் இறக்கவும்.
          அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி

          குறிப்பு: கடலை பருப்பு மற்றும் பயத்தம் பருப்பில் செய்வதானால், களைந்து அப்படியே குக்கரில் வைக்கலாம்
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #6
            மசாலா சுண்டல்

            மசாலா என்றதும் பயப்பட வேண்டாம் வெறுமன தனியா + மிளகாய் வற்றல் தான் அரைக்கணும் .

            பட்டாணி, கடலை பருப்பு, வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை, காராமணி என்று எல்லாவற்றிலும் சுண்டல் செயலாம்.

            தேவையானவை:

            மேலே சொன்ன பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, கொத்துக்கடலை ஏதாவது ஒன்று 1 கப்

            மசாலா அரைக்க :
            கடலை பருப்பு 6 ஸ்பூன்
            உளுந்து 4 ஸ்பூன்
            மிளகாய் வற்றல் 6 -8
            தனியா 4 ஸ்பூன்
            எண்ணை 1 ஸ்பூன்

            தாளிக்க:
            கறிவேப்பிலை கொஞ்சம்
            கடுகு 1 ஸ்பூன்
            உளுந்து 1 ஸ்பூன்
            தாளிக்க எண்ணை
            உப்பு

            செய்முறை:

            மேலே சொன்ன தானியங்களில், வேர்கடலை என்றால் 2 மணி நேரம் ஊரினால் போறும்.
            மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
            குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.
            மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
            சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
            ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, அரைக்க கொடுத்தவைகளை போட்டு வறுக்கவும்.
            அறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
            மீண்டும் வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு, உளுந்து , தாளிக்கவும்.
            கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
            வெந்த தானியத்தை , போடவும்.
            நன்கு கிளறவும்.
            உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
            மசாலா பொடி தூவி கிளறவும்.
            ஒரு 2 நிமிடம் கிளறவும்.
            வாசனை போனதும் இறக்கவும்.
            அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி புன்னகை

            குறிப்பு: கடலை பருப்பு மற்றும் பயத்தம் பருப்பில் செய்வதானால், களைந்து அப்படியே குக்கரில் வைக்கலாம்
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment


            • #7
              காராமணி இனிப்பு சுண்டல்

              தேவையானவை:

              காராமணி 1 கப்
              வெல்லம் 1 கப்
              ஏலப்பொடி 1 ஸ்பூன்
              தேங்காய் துருவல் 1/2 கப்
              நெய் 1 ஸ்பூன்

              செய்முறை:

              காராமணியை நன்கு அலசி, இரவே ஊரவைக்கவும்.
              மறுநாள் குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
              குழைந்தால் கூட பரவாயில்லை .
              வாணலி இல் தண்ணீர் கொஞ்சமாய் விட்டு வெல்லத்தை போடவும்
              கரைந்ததும் வடிகாட்டவும்.
              மீண்டும் அடுப்பில் வெல்லத்தண்ணீரை வைக்கவும்.
              ஏலப்பொடி, தேங்காய் துருவல் போடவும்.
              ஒரு கொதி வந்தததும் , வெந்த காரமணியை போடவும்.
              நன்கு கிளறவும்.
              வெல்ல தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான இனிப்பு காராமணி சுண்டல் நைவேத்யத்துக்கு தயார்
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #8
                கடலை பருப்பு இனிப்பு சுண்டல்

                வழக்கமாக இனிப்பு சுண்டல் என்றால் வெல்லம் தான் போடுவோம். சிலர் கடலை பருப்பு சுண்டலில் மட்டும் சக்கரை போடுவது உண்டு

                தேவையானவை:

                கடலை பருப்பு 1 கப்
                சக்கரை 1 கப்
                ஏலப்பொடி 1 ஸ்பூன்
                தேங்காய் துருவல் 1/2 கப்
                நெய் 1 ஸ்பூன்

                செய்முறை:

                கடலை பருப்பை களைந்து குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
                குழைந்தால் கூட பரவாயில்லை .
                வாணலி இல் வெந்த கடலை பருப்பை போடவும்.
                ஏலப்பொடி, தேங்காய் துருவல்,சக்கரை போடவும்.
                நன்கு கிளறவும்.
                சக்கரை போட்டதும் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கும்.
                தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும்.
                சுவையான இனிப்பு கடலை பருப்பு சுண்டல் நைவேத்யத்துக்கு தயார்
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment


                • #9
                  பொட்டுக்கடலைபொடி

                  சில நாட்கள் சுண்டல் போராமல் போய்விடும், அந்த மாதிரி சமயத்துக்கு கை கொடுக்கும் வகை இல் நாம் instant ஆக சிலது வைத்துக்கொள்ளனும். அதில் ஒன்று,
                  பொட்டுக்கடலை பொடி.

                  தேவையானவை:

                  பொட்டுக்கடலை 1 கப்
                  சக்கரை 1 கப்
                  ஏலக்கை 2 -3

                  செய்முறை:

                  பொட்டுக்கடலை யை வாணலி இல் சிறிது சூடு படுத்தவும்.
                  மிக்சி இல் சக்கரை, ஏலக்காயுடன் பொடிக்கவும்.
                  பாட்டில் இல் போட்டு வைக்கவும்.
                  தேவையான போது கொஞ்சம் எடுத்து பேப்பரில் பொட்டலம் கட்டி தரவும்.

                  குறிப்பு: இதயே நெய் விட்டு லட்டாகவும் பிடித்து தரலாம்
                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment


                  • #10
                    புட்டு

                    நவராத்திரி வெள்ளி புட்டு செய்வோம்
                    அதன் செய்முறை இதோ :

                    தேவையானவை :

                    புழுங்கலரிசி 1 கப்
                    வெல்லம் 1 கப்
                    ஏலக்காய் 2 -3
                    உப்பு 1 சிட்டிகை
                    மஞ்சள் பொடி 1 சிட்டிகை
                    முந்திரி 10 - 12
                    நெய் 1 ஸ்பூன்
                    தேங்காய் துருவல் 1/2 கப்

                    செய்முறை:

                    வாணலி இல் புழுங்கல் அரிசி யை போட்டு, அடுப்பை சிம் இல் வைத்து நல்லா பொரித்து எடுக்கவும்.
                    கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுக்கணும், அப்ப அது நல்லா பொரிந்து வரும்.
                    தட்டில் கொட்டி வைக்கவும்.
                    ஆரினதும் மிக்சி இல் போட்டு, 'கார கார' ப்பாக மெல்லிசு ரவை போல பொடிக்கவும்.
                    மாவில் உப்பு மற்றும் மஞ்சள் பொடி போட்டு , கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசிரவும்.
                    பாத்திரத்தை குக்கரில் தண்ணீர் விட்டு வைக்கவும்.
                    இட்லி போல் ஆவி இல் வேகவிடவும்.
                    ஒரு 10 நிமிஷம் போதும்.
                    மாவை கை விரல்களில் எடுத்து திரி போல் திரிக்கணும்.
                    அப்படி செய்ய முடிந்தால் வெந்துவிட்டதாக அர்த்தம்
                    வெல்லத்தை தூளாக்கி கொஞ்சம் தண்ணீர் விட்டு, உருளி இல் வைக்கவும்.
                    நன்கு கரைந்ததும், வடிகட்டவும்.
                    மீண்டும் அடுப்பில் வைத்து, பாகு காய்ச்சவும் .
                    ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்து கொண்டு, கெட்டியான பாகை அதில் கொஞ்சம் ஊற்றவும்.
                    கையால் எடுத்து உருட்ட வரணும், வந்தால் அது சரியான பதம்.
                    ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
                    ஒரு பேசினில், வெந்த புட்டு மாவை போட்டு, உதிர்க்கவும் .
                    பாகை கரண்டி யால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக புட்டின் மேல் ஊற்றவும்.நன்குகிளறவும்.
                    மீண்டும் அடுத்த கரண்டி ஊற்றவும், கிளறவும்.
                    பாகு முடியவேண்டும் என்பது இல்லை, புட்டு கொள்ளும் அளவு ஊற்றவேண்டும்.
                    துளி பாகு மிஞ்சினால் தோஷம் இல்லை, மறுநாள் பாயசத்துக்கு விட்டுக்கலாம்
                    நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேக்கவும்.
                    நெய் இல் முந்திரி வறுத்து போடவும்.
                    அவ்வளவு தான், 'புட்டு ' தயார்
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment


                    • #11
                      எள்ளு பொடி

                      நவராத்திரி சனிக்கிழமை எள்ளு பொடி செய்வது வழக்கம்
                      தேவையானவை:

                      எள் 1/2 கப்
                      வெல்லம் 1/2 கப்
                      ஏலக்காய் 2 - 3

                      செய்முறை:

                      எள்ளை பொறுக்கவும்.
                      விரட்டு வாணலி இல் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்.
                      ஆறவிடவும்.
                      மிக்சி இல் வெல்லம், ஏலக்காயுடன் போட்டு பொடிக்கவும்
                      அப்படியே கொலுக்கு நைவேத்யம் செய்யவும்.
                      சுவையாக இருக்கும்
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment


                      • #12
                        அப்பம்

                        அப்பம் -எங்க ஆத்தில் இதை செவ்வாய்கிழமைகளில் செய்வோம் இது ரொம்ப நல்ல நைவேத்யம் . நான் எப்பவும் இதை நெய் இல் தான் செய்வது வழக்கம் . இதை கரைத்தும் அரைத்தும் செயலாம் முதலில் கரைத்து செய்வது.

                        தேவையானவை:

                        கோதுமை மாவு 1 கப்
                        அரிசி மாவு 3/4 கப்
                        வெல்லம் 1 கப்
                        தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
                        சோடா உப்பு 1 சிட்டிகை
                        ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
                        பொறிக்க நெய்
                        பூவன் வாழை பழம் 2

                        செய்முறை:

                        மேலே சொன்ன எல்லா மாவுகளையும் ஒரு பேசினில் போடவும்.
                        வாழை பழத்தை துருவவும்.
                        அதில் போடவும்.
                        ஏலப்பொடி போடவும்
                        சோடா உப்பு போடவும்
                        வெல்லத்தை துருவி போடவும்.
                        தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்
                        எல்லா வற்றையும் நன்கு அழுத்தி பிசையவும்.
                        கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலக்கவும்.
                        பால் வேண்டுமானாலும் விடலாம்.
                        திக் ஆன தோசை மாவு படத்தில் இருக்கணும்.
                        அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெவிடவும்.
                        உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
                        மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூங்களால் எடுக்கவும்.
                        பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.

                        குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.
                        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                        http://eegarai.org/apps/Kitchen4All.apk

                        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                        Dont work hard, work smart

                        Comment


                        • #13
                          மல்டி கிரைன் சுண்டல்

                          தேவையானவை:

                          பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை (நான்கும் முளைகட்டியது) - தலா ஒரு கப்
                          கேரட், தேங்காய் துருவல் - தலா ஒரு கப்
                          நறுக்கிய வெள்ளரி - ஒரு கப்
                          தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
                          வத்த மிளகாய் - இரண்டு அல்லது முன்று
                          நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
                          உப்பு

                          செய்முறை:

                          முளைகட்டிய நான்கு பயறுகளையும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
                          வாணலில் துளி எண்ணெய் விட்டு, துருவிய தேங்காய் கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் , தனியாவைப் போட்டு வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
                          வேகவைத்தவற்றை தண்ணீர் வடித்து வைத்துக்கொலல்வும்.
                          வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
                          வெந்த , வடித்த பயறுகளை போடவும்.
                          மிக்ஸியில் பொடித்ததைப் போட்டு, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். '
                          மல்டி கிரைன் சுண்டல் ரெடி
                          இது புரோட்டீன் சத்து நிறைந்தது; உடம்புக்கு ரொம்ப நல்லது

                          குறிப்பு : இதில் சொன்ன பயறுகள் தான் உபயோகிக்கனும் என்று இல்லை; உங்களுக்கு விருப்பமானவற்றையும் போட்டு இதே முறை இல் செய்யலாம்.
                          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                          http://eegarai.org/apps/Kitchen4All.apk

                          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                          Dont work hard, work smart

                          Comment


                          • #14
                            கல்கண்டு சாதம்

                            தேவையானவை:

                            அரிசி - கால் கிலோ
                            கல்கண்டு - அரை கிலோ
                            பால் - ஒரு லிட்டர்
                            ஏலக்காய் பொடி , குங்குமப்பூ - கொஞ்சம்
                            முந்திரிப்பருப்பு - 10 -15
                            கிஸ்மிஸ் - திராட்சை - 10 -15
                            நெய் - 4 டேபிள் spoon.

                            செய்முறை:

                            அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும்.
                            அடுப்பில் உருளி வைத்து கல்கண்டு போடவும்.
                            கொஞ்சம் தண்ணீர் விடவும்.
                            அது கரைந்ததும், மசித்த சாதத்தை அதில் போட்டு மசிக்கவும்.
                            சூட்டில் அவை நன்கு கலந்து விடும்.
                            முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும் .
                            ஏலப்பொடி போடவும்.
                            குங்குமப்பூ வை ஒரு சிறிய கரண்டி பாலில் கரைத்துக்கொண்டு , கொதித்துக்கொண்டிருக்கும் கல்கண்டு சாதத்தில் போட்டுக் கலக்கவும்.
                            நன்றாக கெட்டியானதும் இறக்கவும்.
                            ரொம்ப தித்திப்பான சாதம் இது.
                            லலிதா சஹஸ்ரநாமம் பூஜை செய்யும் போது எங்க அம்மா செய்வா இது

                            குறிப்பு: பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.
                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment


                            • #15
                              Re: நவராத்திரி நைவேத்யங்கள்

                              மாமி தற்செயலாக நான் இந்த விடுகையை பார்த்தேன்
                              மிகவும் நன்றி
                              என்னுடைய பதிலை [மாஹலயபஷம்] பகுதியில் இருப்பதை
                              தவிர்த்து விடவும்
                              மறுபடியும் நன்றி

                              Comment

                              Working...
                              X