Announcement

Collapse
No announcement yet.

புதுசா கத்துக்க விருப்பமா?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புதுசா கத்துக்க விருப்பமா?

    குட்டீஸ் சேனலான போகோவில் 'மேட்' ( MAD) நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிருக்கிறீர்களா? அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ராப் குழந்தைகளுக்காக ஒரு சேனலைத் தொடங்கியிருக்கிறார். 'மேட்ஸ்டஃப்வித்ராப்' ( MadstuffwithRob ) என்பதுதான் சேனலின் பெயர். இதிலும் மேட் நிகழ்ச்சிகள் உண்டு. ஆனால், இதற்காக நீங்கள் டி.வி. முன்னால் காத்திருக்க வேண்டியதில்லை. இதை யுடியூபில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
    புதிய மேட் நிகழ்ச்சியில் குட்டீஸ்களுக்கான படைப்பாற்றலை அதிகரிக்க பல புதிய பகுதிகளைச் சேர்த்திருக்கிறார்கள்.
    'கூல் டூல்ஸ்' ( Cool Tools ) என்ற பகுதியில் எப்படி ஓவியம் வரைவது என்பதற்கான குறிப்புகள், நுணுக்கங்கள், நுட்பங்களைத் தெரிந்து கொள்ளலாம். 'ராப்சைக்ளிங்' ( Rob Cycling ) என்ற பகுதியில் பொருட்களை மறுசுழற்சி செய்யவும், கழிவுப் பொருட்களைக் கலைப் பொருட்களாக மாற்றுவது எப்படி என்பதையும் கற்றுத்தர போகிறார்கள்.
    'பிராங்க் டிராங்க்' ( Prank Trank ) பகுதி குறும்புத்தனங்களை ஜாலியாகக் கிண்டலடிப்பது பற்றியும், 'டிராசம் ஆவ்சம்'
    ( DrawsomAwesome ) பகுதி கடினமானவற்றை எப்படி எளிதாக வரையலாம் என்பது பற்றியும் கற்றுத் தரப்போகிறது. இந்தப் பகுதிகள் ஒவ்வொன்றும் 3 - 4 நிமிடங்கள் வரை ஒளிபரப்பாக உள்ளன.
    நிறைய மேஜிக் பகுதிகளும் 'மேட் ஸ்டஃப்வித்ராப்'பில் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. http:// www. youtube.com /
    MadStuffWithRob/ என்று இணைய தளத்தை அம்மா, அப்பா உதவியுடன் பாருங்களேன்.
    -- என்.கௌரி. ( மாயாபஜார் ).
    --'தி இந்து' நாளிதழ். புதன், நவம்பர் 19, 2014.
Working...
X