Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
    19.உததியறல்


    உததியறல் மொண்டு சூல்கொள்கரு
    முகிலெனஇ ருண்ட நீலமிக
    வொளிதிகழு மன்றல் ஓதிநரை பஞ்சுபோலாய்
    உதிரமெழு துங்க வேலவிழி
    மிடைகடையொ துங்கு பீளைகளு
    முடைதயிர்பி திர்ந்த தோஇதென வெம்புலாலாய்
    மதகரட தந்தி வாயினிடை
    சொருகுபிறை தந்த சூதுகளின்
    வடிவுதரு கும்ப மோதிவளர் கொங்கைதோலாய்
    வனமழியு மங்கை மாதர்களின்
    நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
    வழியடிமை யன்பு கூருமது சிந்தியேனோ
    இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
    மணவறைபு குந்த நான்முகனும்
    எறிதிரைய லம்பு பாலுததி நஞ்சராமேல்
    இருவிழிது யின்ற நாரணனும்
    உமைமருவு சந்த்ர சேகரனும்
    இமையவர்வ ணங்கு வாசவனும் நின்றுதாழும்
    முதல்வசுக மைந்த பீடிகையில்
    அகிலசக அண்ட நாயகிதன்
    முகிழ்முலைசு ரந்த பாலமுத முண்டவேளே
    முளைமுருகு சங்கு வீசியலை
    முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
    முதலிவரு செந்தில் வாழ்வுதரு தம்பிரானே.

    -திருச்செந்தூர்



    சுருக்க உரை
    கடலின் கருமணல் போன்று கரு நிறங் கொண்ட கூந்தல் நரைத்து,ஒளி வீசும் கண்களில் துர் நாற்றம் கொண்ட பீளை மிகுந்து, பெரிய கொங்கைகள் வெறும் தோலாய் அழகு குலைந்து போகும் விலைமாதர்களின் நிலையாமையை உணர்ந்து, உன் திருவடியையே சிந்தை செய்யும் வழியை விரும்பி அதையே நினைக்க மாட்டேனோ.
    தாமரையில் வாழும் பிரமனும், பாற்கடலில் துயிலும் நாரணனும்,உமா தேவியைப் பாகமாகக் கொண்ட சிவபெருமானும், இந்திரனும் வணங்கும் முதல்வனே, உமா தேவியின் முலையில் சுரந்த பாலை உண்டவனே, சங்குகள் வீசி அலைகள் விரைந்து நெருங்கும் திருச்செந்தூரில் வாழ்பவனே, வழி அடிமையாகிய நான், அன்பு மிக்கு வளரும் உமது திருவடியைச் சிந்தியேனோ?




    விளக்கக் குறிப்புகள்


    அ. உதிரமெழு துங்க...
    ( தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலேன்று
    கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
    உண்ணிர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
    கண்ணீர் கண்டொழுகு வேன்)-- -----------------நாலடியார்.
    ஆ. தாளிலுறு வழியடிமை....
    ( தஞ்சமாகியெ வழிவழி யருள்பெறும்
    அன்பினாலுன தடிபுக ழடிமையெ னெதிரேநீ) –திருப்புகழ் ( பஞ்சபாதக)


    தம்பிரான் என்பதற்கு கடவுள், ஞாநி, தனக்குதானே தலைவன், நம்பவர்களுக்குகெல்லாம் தலைவன், கட்டளைப்படி நடப்பவன் என்ற பொருள்கள் உண்டு
Working...
X