Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
    20.ஏவினை


    ஏவினை நேர்விழி மாதரை மேவிய
    ஏதனை மூடனை நெறிபேணா
    ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
    ஏழையை மோழையை அகலாநீள்
    மாவினை மூடிய நோய்பிணி யாளனை
    வாய்மையி லாதனை யிகழாதே
    மாமணி நூபுர சீதள தாள்தனி
    வாழ்வுற ஈவது மொருநாளே
    நாவலர் பாடிய நூலிசை யால்வரு
    நாரத னார்புகல் குறமாதை
    நாடியெ கானிடை கூடிய சேவக
    நாயக மாமயி லுடையோனே
    தேவிம நோமணி ஆயிப ராபரை
    தேன்மொழி யாள்தரு சிறியோனே
    சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
    சீரலை வாய்வரு பெருமாளே.

    -திருச்செந்தூர்







    சுருக்க உரை


    அம்பு போன்ற கண்களை உடைய விலை மாதரை விரும்பும் கேடனை, மூடனை, கல்வி இல்லாதவனை, பிணியால் பீடிக்கப்பட்டவனை, இகழாமல் சிலம்பணிந்த உன் திருவடிகளில் உற்ற பெரு வாழ்வைத் தந்து அருளும் ஒரு நாளும் உண்டோ?


    நாரதர் எடுத்துரைத்த வள்ளி நாயகியை நாடிச் சென்று அவளைக் கூடிய வீரனே, மயில் வாகனனே, பராபரியான பார்வதி பெற்ற சிறியவனே, உயர்ந்த சோலைகளிண் நிழலில் விளங்கும் சீரலைவாயில் உறைகின்ற பெருமாளே, நான் வாழ்வுற உன் திருவடிகளை ஈவதும் ஒரு நாளே.




    விளக்கக் குறிப்புகள்


    அ. வாய்மையிலாதனை இகழாதே...
    (மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம் வாயாத பாவி
    இவனென நினையாமல்)---திருப்புகழ் (ஆசாரவீனன்)
    ஆ. வீணனை...
    (உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே)---திருப்புகழ் (கொம்பனையார்)
Working...
X