Announcement

Collapse
No announcement yet.

Read daily once-அற்புதமான வாழ்க்கை போதனை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Read daily once-அற்புதமான வாழ்க்கை போதனை

    ஸ்ரீ

    ”அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை" என்று போதித்த வடலூர் இராமலிங்க சுவாமிகளான, வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை இதோ, வாழ்வென்பது உயிர் உள்ளவரை.





    ......தேவைக்கு செலவிடு........
    அனுபவிக்க தகுந்தன அனுபவி......
    இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....
    இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......
    போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......
    ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .
    மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...
    உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....
    சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.
    உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......
    உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....
    உன் குழந்தைகளை பேணு......
    அவர்களிடம் அன்பாய் இரு.......
    அவ்வப்போது பரிசுகள் அளி......
    அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........
    அடிமையாகவும் ஆகாதே.........
    பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
    பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
    இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்......
    அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள்
    உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......
    உன் சொத்தை தான் அனுபவிக்க,
    நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
    வேண்டிக் கொள்ளலாம்-
    பொறுத்து கொள்.
    அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,
    கடமை ,அன்பை அறியார்
    அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.
    இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,
    ஆனால்......
    நிலைமையை அறிந்து
    அளவோடு கொடு
    எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின்
    கை ஏந்தாதே,
    எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
    வைத்திராதே
    நீ எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து
    காத்திருப்பர்.
    எனவே கொடுப்பதை கொடுத்து விடு,
    தரவேண்டியதை பிறகு கொடு.
    மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,
    மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!
    அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......
    பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..
    நண்பர்களிடம் அளவளாவு.
    நல்ல உணவு உண்டு.....
    நடை பயிற்சி செய்து.....
    உடல் நலம் பேணி......
    இறை பக்தி கொண்டு......
    குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......
    இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...
    வாழ்வை கண்டு களி..
    ரசனையோடு வாழ்....
    வாழ்க்கை வாழ்வதற்கே,....

    இது சென்னை ஆன்லைன்.காம் என்ற இணைய தளத்திலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது.
    விஷயம் மிக நன்றாக இருப்பதால் இதை இங்கு பகிர்ந்துள்ளேன், ஆயினும் அனுமதியின்றி
    பகிர்ந்ததற்காக மன்னிக்கவேண்டுகிறேன்.
    தாஸன்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X