Announcement

Collapse
No announcement yet.

Kakabhujandar sidhar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kakabhujandar sidhar

    .திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(45)*
    *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.*
    ___________________________________________
    *காக புஜண்டர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    காக புஜண்டர் சித்தரான இவர் காக்கை உருவில் பல இடங்களில் சுற்றியலைந்து பல உண்மைகளைக் கண்டறிந்ததாகக் கூறுவர்.


    இவரின் பிறப்பு குறித்து போகர் சித்தர் சத்த காண்டத்தில் ஒரு பாடலில் கூறியுள்ளார்.


    வாரிஷியின் சாபத்தினால் உலகில் சந்திர குலம் விளங்க வெள்ளாட்டியின் (விதவை) வயிற்றில்.பிறந்தவர்.


    அறிவில் சிறந்தவர். தவத்தில் உயர்ந்து மேன்நிலை அடைந்தவர். உரோம ரிஷிக்கு குரு. இவர் தன் பிராய காலங்களில் அவிட்ட நட்சத்திரப் பதவியில் வாழ்வார் என்ற காரணத்தினால் இவரை காக புஜண்டர் என அழைத்திருக்கின்றார்கள்.


    சுகப்பிரம்ம ரிஷி தமது ஞான சூத்திரத்தில் இவரது வரலாறு பற்றிக் கூறும் விளக்கம்.............


    முன்பொரு காலத்தில் சக்தி கணங்கள் மதுவுண்டு நடனமாடிக் களித்திருந்தார்கள்.


    அவ்விடத்தில் சிந்திய மது கலந்த நீரைப் பருகிய அன்னங்களும் போதைக் களிப்பில் நடனமாடின.


    அதனை சிவனும் பார்வதிதேவியும் கண்டனர். அதனால் உண்டான சிவ கலை காகத்தின் உருவில் அன்னத்தைச் சேர அன்னம் அப்போதே கர்ப்பமுற்று இருபத்தோரு முட்டைகள் இட்டன.


    இருபது அன்னக் குஞ்சுகளையும், ஒரு காக்கைக் குஞ்சையும் பொறித்தன. அந்தக்ஸகாகமே காக புஜண்டர் என்கிற சித்தராக உருப்பெற்றார்.


    இருபது அன்னங்களும் அனேக நாள் வாழ்ந்திருந்து முக்தியடைந்தன.


    ஆனால் காகம் மட்டும் சிவகலையால் பிறந்ததால் தன் யோக சக்தியால் அழியாது வாழும் பேறு பெற்றது.


    *காணாத காட்சி எலாம் கண்ணில் கண்டு*


    *காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன்*


    *காகம் என்ற ரூபமாய் இருந்து கொண்டு*


    *காரணங்கள் அத்தனையுமே தருவாய்ப் பார்த்து*


    *வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க*


    *வெகுதூரம் சுற்றி இன்னும் விபரம் காணேன்.*
    --காக பசுண்டர் ஞானம்.


    மகா பிரளய காலத்தில் கூட காக புஜண்ட முனிவருக்கு அழிவு கிடையாது என சிவபெருமான் கருடனித்தில் கூறியிருக்கிறார்.


    நாகர்கள், மனிதர்கள், தேவர்கள் அனைவரும் காலத்தால் விழுங்கப்படக்கூடியவர்கள்தான்.


    எண்ணற்ற பிரமாண்டங்களை எல்லாம் அழிக்க வல்ல காலமானது காக புஜண்டரை மட்டும் நெருங்குவதில்லை.


    ஏன்?...எதற்கு?....எதனால் இப்படி?.....இதற்குக் காரணம் அம்முனிவரின் யோகமா?....ஞானமா?.....என்பதற்குக் காரணமான அவருடைய வாழ்வியல் ரகசியம் கீழே உள்ளதை வாசியுங்கள்.


    பூலோகத்தில் உஜ்ஜயினி நாட்டில் சிவபூஜை செய்து வந்த ஒரு அந்தணரை காகபுஜண்டரை நாடிவந்து தஞ்சமடைய, அவரும் இவரைத் தன் மைந்தனைப் போல் நடத்தி இவருக்கு சிவமந்திரம் உபதேசித்து வந்தார்.


    ஆனால் காகபுஜண்டரோ திருமால் அடியவர்களையும், அந்நெறியைப் பின்பற்றும் அந்தணர்களையும் வெறுத்து வந்தார்.


    இவற்றையெல்லாம் கண்ட அவருடைய குருநாதர் எவ்வளவோ எடுத்து விவரித்தும் இவர் கேட்டக் கொள்வாராய் இல்லை.


    மாறாக தனது கொள்கை காரணமாக குருநாதருக்கு எண்ணற்ற துரோகங்களைச் செய்து வந்தார். ஆனால் இதற்கெல்லாம் அவரின் குருநாதர் இதைப்பற்றி எவ்விதக் கோபமோ வெறுப்போ காட்டவில்லை.


    ஒரு சமயம் மகா காலர் ஆலயத்தில் சிவநாம ஜெபம் செய்து கொண்டிருந்த காக புஜண்டர் குருநாதர் வருவதை அறிந்தவர், வருவதை அறியதவர் போல் அமர்ந்திருந்ததைக் கண்ட மகா காலருக்கே கோபம் கிளிரி எழுந்தது.


    *"மூடனே!...நான் உன்னை சபிக்கிறேன்.* எவனொருவன் குருவுக்கு அவமான அருவவெறுப்பைக் காட்டுகிறானோ'... *அவன் கோடி யுகக்காலம் ரெளத்ர நகரத்தில் ஆழ்ந்து கிடந்து புழு பூச்சிகளாய் பதினாயிரம் பிறவிகளெடுத்து அல்லல் உறுவான். குருநாதர் முன்பு மலைப்பாம்பு போல் உட்கார்ந்து கிடக்கும் நீ பாம்பாக மாறி பெரிய மரப்பொந்தில் போய் விழுந்து !"கிடப்பானாக*


    மகா காலரின் இந்த அசரீரி சாபம் கேட்டு நடு நடுங்கிப் போனார் காகபுஜண்டர். இந்த சாபம் அளிக்கப்பட்ட காலம் கலியுகக் காலத்தில்தான்.


    இந்தக் கடினமான சாபத்தைக் கேட்ட காகபுஜண்டரைக் காட்டிலும் அவரின் குருநாதர்தான் மிகவும் துடித்துப் போனார்.


    காகபுஜண்டரின் குருநாதர் சிவபெருமானை வேண்டித் துதித்து, தம் முன் காட்சி அளித்த அந்த மகா காலரின் முன்பு வந்து தொழுதார். தன் சீடனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு வேண்டினார்.


    *அப்படியே ஆகட்டும்* என அசரீரி ஒலித்தது.


    அந்தணரே உமது மாணவன் செய்த கொடிய பாவம் உமது மனிநப் பண்பினால் கருணைக்கு ஆளானது. இருப்பினும் கொடுத்த சாபம் விலகாது!..இவனுக்கு ஆயிரம் பிறவிகள் கட்டாயம் உண்டு. ஆனால் பிறப்பாலும், இறப்பாலும் வரும் பொறுக்க முடியாத துன்பங்கள் இவனைத் தீண்டாது!. எல்லா பிறவியிலும் இவன் தத்துவ ஞானம் உயர்ந்தே இருக்கும் குறையாது.


    அந்தணரின் சிறந்த மாணவனே!...இனியேனும் நீ ஞானிகளை யாரையேனும் அவமதிக்காதே!...


    துறவிகள் ஆதிசேடனுக்கு ஒப்பானவர்கள். இந்திரனுடைய வஜ்ஜிராயுநமோ, என்னுடைய நீள் திரிசூலமோ, காலதேவனின் தண்டமோ, திருமாலின் சக்கராயுதமோ யாரையெல்லாம் கொல்லாதோ, அவனைக்கூட பிரம்ம ஞானிகளுக்கு இழைக்கும் துரோகமான தீ அழித்துரச் செய்யும். இதனை ஒருபோதும் மறவாதே! இனி உன் உள்ளத்தில் பக்தி மேலோங்கும்.


    காகபுஜண்டர் அதன்பின் விந்திய மலையில் மலைப்பாம்பாக கிடந்து உயிர் நீத்தார்.


    உடைகளை மாற்றி அணிவது போல் சிவனருளால் துன்பமின்றி வலியின்றி, தொடர்ந்து அடுத்த பிறவிகளை எடுத்தார் இப்படியாகத்தான்.


    இவரது கடைசிப் பிறவியில் நிகழ்ந்துதான் அத்தனைப் பிறவியிலும் அற்புதமான ஒரு அந்தணப் பிறவி.■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    (46)
    சிவமய அருளான சித்தர்கள்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    காக புஜண்டர்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    ஒரு பிராமண உத்தமரின் புதல்வனாக வளர்ந்து லோமச முனிவரின் முன்பு நின்று கொண்டிருந்த அவன் இராமன் திருவடிகளைக் காணும் தன் ஆசையால் மேருமலையில் அந்த ஞானியை நாடி வந்திருப்பதாகக் கூறினான்.


    "இறைவனும் உயிரும் வேறு வேறு அல்ல. எல்லாப் பொருளும் இறைவனே" என்ற முனிவரின் உபதேசம் அந்த பியாமணச் சிறுவனுக்கு ஏற்புடையதாக இல்லை.


    "இல்லை முனிவரே அருள் கூர்ந்து எனக்கு இராமனைக் கண்ணால் காண வழி இருந்தால் கூறுங்கள் என்று அடம் பிடிக்க, முனிவருக்கு வந்து விட்டது கோபம்.


    "ஓ பிராமண மூடனை....என் உபதேச மொழிகளை ஏற்க மறுத்து காலத்தைப் போல் எல்லாவற்றுக்கும் அஞ்சுகிறாய். தனக்குக் கூவி உணவு தருபவரைக் கூட நம்ப மறுத்து அஞ்சி ஒதுங்கும் காகத்துக்கும் உனக்கும் வேறுபாடு இல்லை. எனவே நீ சண்டாளப் பறவையாகிய காகமாகக் கடவாய்.....போ....."


    முனிவர் சாபத்தினால் காகமாக மாறிய காகபுஜண்டர் சிறிதும் கலக்கமின்றி முனிவரின் திருவடிகளை வணங்கி இராமபிரானை தியானித்தபடி பெருமகிழ்ச்சியுடன் விண்ணில் பறந்தார்.


    இராம பக்தியில் உச்சமே அந்த அந்தணச் சிறுவனின் நாவில் அப்படி யொரு கேள்வியை எழச் செய்தது என்பதை உணர்த்த லோமச முனிவர் காகபுஜண்டரை அழைத்து அவரது தலை மீது கையை வைத்து ஆசீர்வதித்து இராம மந்திரத்தையும், பலராம தியானத்தையும் உபதேடனசித்தார்.


    சிவபெருமானிடம் தான் அறிந்த தேவ ரகஸ்மாகிய இராம சரிதத்தை விரிவாக அவரிடம் கூறிய முனிவர் *"விரும்பிய உருவெடுக்கும் சக்தி உன்னை வந்து சேரும். கர்மம் இவைகளின் மூலம் வரும் எந்தத் துன்பமும் உன்னை அனுகாது என்று கூறினார்.


    இவை அனைத்துமே காகபுஜண்டரின் பிறவி அனுபவங்கள். கல்ப காலங்கள் முடியும்போது நீர், நெருப்பு, காற்று யாவும் பெருக்கெடுக்கும். அந்தப் பிரளய காலங்களில் எல்லாம்.காகபுஜண்டர் அழியாமல்.தப்பித்தது எப்படி? இதை அவரே கருடனிடம் கூறியதாக உள்ள நிகழ்வு அது.


    கதிரவன் சுட்டெரிக்க முற்பட்டால் விண்ணிலிருந்து வருணனை தியானிப்பதும், பிரளய காலத்தின் காற்றின் விசையால் மலைகள் எல்லாம் சிதறும் போது மலை போல் தன்னை மாற்றிக் கொண்டு தாரணை யோக நிலை பெற்று அசைவற்று இருப்பதும், பிரம்ம அண்டங்களுக்கும் அப்பால் சென்று நிர்மலமான நிலையில் அசைவற்ற தூக்க நிலை கொள்வதும், பிரம்மன் மீண்டும் உலகைப் படைக்கும் போது அண்டத்தில் புகுந்து வழக்கமான இவ்விடம் வந்து சித்தர் கூட்டத்துடன் சேருவதும் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.


    சித்தர்கள் பலருக்கும் முன்னே பிறந்த ஆதிசித்தர் என்று பெயர் பெற்றவர்தான் இந்த காகபுஜண்டர்.


    எத்தனையோ யுக பிரம்மாக்கள் தோன்றி அழிந்ததையும், எத்தனையோ பிரம்மாக்கள், எத்தனையோ விஷ்ணுக்கள், எத்தனையோ சிவன்கள் தோன்றி அழிந்து போனதைப் பார்த்ததாகவும், ஒவ்வொரு பிரளயத்திற்குப் பிறகும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டதைப் பார்த்ததாகவும் கூறியிருக்கிறார் இவர்.


    தாம் காக உருவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கல்லால மரத்தின் மேல் வீற்றிருந்து இந்த அதிசயங்களைக் கண்டதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சி காக புஜண்டர் துணைக் காவியத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.


    பிராணாயாம சாதனத்தால் தவயோகங்கள், ஞானங்கள் கை கூடுகின்ற காரணத்தினால் ஊழி தோறும் இறவாமல் காக ரூபத்தில் இருந்து அப்பால் இந்த சதுரகிரி மலைக்கு வந்து வசித்து வருகிறார் காகபுஜண்டர்.


    காகபுஜண்டரின் ஆஸ்ரமம் இருந்த சதுரகிரி மலைக்கு போகரின் சீடர்களாகிய தன்மார்த்தன் முதலான ஐந்து சீடர்கள் வந்து அந்த ஆதி முனிவரின் ஆசி வேண்டி அவரது மாணாக்கர்களாகினர்.


    அச்சீடர்களுள் தம்பியரானசூரசேனன் என்பவர் காய், கனி பறிக்கக் காட்டிற்குச் சென்றபோது நாக சர்ப்பம் கக்கிய விஷம் பாய்ந்த கனியை உண்டு இறந்த போது அவனை நாகதாலி மூலிகையின் மூலம் உயிர்ப்பிக்கச் செய்தார் இவர். இதன் மூலம் மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் ரகசியத்தையும் தன் சீடர்களுக்கும் உரைத்திருக்கிறார் இவர்.


    இவ்விதம் பலகோடி காலம் பலர் இறந்து பிறக்கவும் தாம் மட்டும் இறவாது வாழ்ந்திருந்து எதிர்ப்படும் எல்லோரையும் பார்த்து அது அவர்களுக்கு எத்தனையாவது பிறப்பு என்று பிறப்பு ரகசியம் கூற வல்லவர் இந்த ஆதி சித்தரான காகபுஜண்டர்.


    வசிஷ்ட மாமுனிவருக்கு இந்த அண்டத்தில் அது எட்டாவது பிறப்பு என்பதை உணர்த்தியவர் இந்த மகாசித்தர்.


    "கயிலையின் மேல் இருக்கச் சொன்னார். காகம் என்ற ரூபமாய் இருந்தேன். விமலரிடம் சென்ற போது வெற்றியுடன் என்னை எடுத்து முத்தமிட்டார்" என்று சிவபெருமானை காக வடிவில் சந்தித்தபோது நடந்த நிகழ்ச்சியைத் தம் சீடர்களுக்குக் கூறி இருக்கிறார்.


    மழை வருவதும், புயல் வருவதும் விஞ்ஞானிக்கு மட்டுமே தெரியும். கர்ப்பத்திலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்னும்.பிரபஞ்ச ரகசியம் இந்த ஞானிக்கு மட்டுமே தெரியும்.


    ஆண் என்றால்?...


    ஆண் என்றால் தாய் மார்பு பள்ளம் நெஞ்சு அடிவயிற்றின் மேல் தொப்புள் மேல் தானும் ஆண் என்றால் தாய் விலாவில் யிருகையுந்தான் அமைந்திருக்கும் பாதம் ரெண்டும் தொப்புள் மத்தி"


    பெண் என்றால்?....
    "சாந்தமே முன் சொன்ன கெற்பப் பூச்சி சாய்ந்து தலை விலா வொட்டி விலாக்கால் நீட்டி சாய்ந்துமே முன்புறத்தே நோக்கித் தானே தலை காலும் விலா வயிற்றில் சாய்ந்த கூறு"


    கர்ப்பினிப் பெண்களின் மேற்கண்ட உடற்கூறுகளை வைத்து என்ன குழந்தை என கண்டறியலாம் என்பது இவருடைய கருத்து.


    காகபுஜண்டர் என்றால் எப்போதும் காக வடிவம் கொண்டவர் என்று பொருள் தரும். பெரும்பாலான நேரத்தில் இவர் மகரிஷியாகவே காட்சி தருவதன் ரகசியம்?......காக வடிவத்தை எப்போது காண்பது?...


    பிரளயம் தோறும் அவிட்ட நாள் அன்று காக வடிவம் எடுத்து நட்சத்திரப் பதவியடையும் இவர் பிரளய அழிவுக்குப் பின் மீண்டும் உலகம் தோன்றும் போது சித்தர் கூட்டத்துடன் திரும்பவும் மகரிஷியாய் ஆசிரமம் வரும் இவர் ஒரு திரிகால ஞானச் சித்தர்.


    இவருடைய பெயரில் வைத்திய நூல்கள் பல:
    புசுண்டர் நாடி எனும் ஜோதிட நூல்,
    காகபுசுண்டர் ஞானம் 80,
    காக புசுண்டர் உபநிடதம் 31,
    காக புசுண்டர் காவியம் 33,
    காக புசுண்டர் குறள் 16 என்ற வேதாந்த நூல்.


    காணாத காட்சியெல்லாம் கண்ணிற் கண்ட காகபுஜண்டர் யோகஞானம், சமாதி முறை, காய சித்தி பெறும் வழி, இரசவாதம், நோய் நீக்கும் மருந்து வகை, மயக்கும் மருந்து முறை, பிறர் கண்ணில் படாமல் இருக்க மருந்து, பகைவரை அழிக்க வழி எல்லாமே இவர் நூலில் கூறப்பட்டுள்ளன.


    உரோமரிஷி தம் காப்புப் பாடலில் இவரைப் பாடியுள்ளார். சித்தர் ஞானக் கோவையில் உள்ள காகபுஜண்டர் ஞானம், உபநிடதம், காவியம் இம்மூன்றும் அந்தாதி முறையில் பாடப்பட்டுள்ளவை.


    காகபுஜண்டர் திருச்சி உறையில் வாழ்ந்ததாகவும், அங்கேயே சமாதி கொண்டதாகவும் சித்தர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


    திருச்சிற்ம்பலம்.


    இத்துடன் காகபுஜண்டர் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.
    *அடியார்களுக்குத் தோண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X