23.கண்டுமொழி


கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு
கண்கள்குழல் கொண்டல் என்று பலகாலும்
கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பகல் என்று நின்று விதியாலே
பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்து புகழோதும்
பண்புடைய சிந்தை யன்பர் தங்களிலு டன்க லந்து
பண்புபெற அஞ்ச லஞ்ச லெனவாராய்
வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
வம்பினைய டைந்து சந்தின் மிகமூழ்கி
வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகு டன்க லந்த மணிமார்பா
திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
செஞ்சமர்பு னைந்து துங்க மயில்மீதே
சென்றசுரர் அஞ்சு வென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
செந்தில்நகர் வந்த மர்ந்த பெருமாளே.- திருச்செந்தூர்சுருக்க உரை


இனிக்கும் சொற்கள், யானைத் தந்தம் பேன்ற கொங்கைகள், மேகம் போன்ற கூந்தல் என்று உவமை கண்டு, மிக வருந்தி, விலை மாதர்கள் வசப்பட்டு, எந்நாளும் விதியின் பயனாய் நின்று, பண்டை விதியின் தாக்கம் இது என்று அறிந்து, நான் வெந்து விழுவதைக் கண்டு, தாமரை போன்ற உன் திருவடிகளின் புகழ் ஓதும் அடியார்களுடன் கலந்து, நானும் குணம் அடைவதற்குப் பயப்படாதே என்று வரவேண்டும்.


கச்சு அணந்த வள்ளியை அடைய, அவள் இருந்த மலைக்கு வந்து அவளுடன் கலந்த மணி மார்பனே. வலிமை உள்ள தேவர்கள் தம்மிடம் அபயம் புகுவதைக் கண்டு, போர்க்கோலம் பூண்டு, மயில் மீது வந்து, அசுர்களை அழித்து, வள்ளியைத் திருப்பரங்குன்றத்தில் மணம் புரிந்த பெருமாளே, அஞ்சேல் என்று வந்து அடியார்களுடன் சேர அருள் புரிய வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
விளக்கக் குறிப்புகள்


சந்து = சந்தனம். வஞ்சியை முனிந்த = கொடி போலும் இடையை வருத்துகின்ற.