27.கொம்பனையார்


கொம்பனை யார்காது மோதிரு
கண்களி லாமோத சீதள
குங்கும பாடீரபூ ஷண நகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார ருளாதே
உம்பர்கள் ஸ்வாமீந மோநம
எம்பெரு மானேந மோநம
ஒண்டொடி மோகாந மோநம எனநாளும்
உன்புக ழேபாடி நானினி
அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள் புரிவாயே
பம்பர மேபோல ஆடிய
சங்கர வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி கரசூலி
பங்கமி லாநீலி மோடிப
யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ
னும்படி வீறான வேல்தர
என்று முளானேம நோகர வயலூரா
இன்சொல்வி சாகாக்ரு பாகர
செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யீடேற வாழ்வருள் பெருமாளே.- திருச்செந்தூர்

சுருக்க உரை


விலை மாதர்களுடைய காதுவரை நீண்ட கண்களிலும், செஞ்சாந்து அணிந்த மலை போன்ற கொங்கைகளிலும், மலர் மாலையைச் சூடிய கூந்தலிலும், உடல் அழகிலும், நான் மருட்சி கொள்ளாமல், தேவர்கள் தலைவனே, எம் பெருமானே, வள்ளியின் மேல் மோகம் கொண்டவனே, உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன். இனி நாள்தோறும்,உன் புகழையே பாடி, ஆசாரத்துடன் பூசை செய்து நான் பிழைத்திட, என் வாழ் நாள் வீணாகாதபடி அருள் புரிவாயாக.


பம்பரம் போல் சுழன்று ஆடிய சங்கரி, வேதாளங்களுக்குத் தலைவி,பாதங்களில்
சிலம்பு அணிந்தவள், கரிய நிறத்தவள், அடியார்கள்பயத்தைப் போக்குபவளாகிய பார்வதி, நீ சூரனுடன் போர் செய்ய வேண்டியதைக் குறித்து, உனக்கு ஆசி கூறி, உனக்கு வேலாயுதத்தைத் தர, அதை நீ பெற்ற என்றும் இளமை வாய்ந்தவனே, விசாகனே,கருணை மிக்கவனே, வயலூர்ப் பெருமாளே, திருச் செந்தூரில் வீற்றிருந்து நல் வாழ்வை அருளும் பெருமாளே. நான் உன் புகழைப் பாடி வீணாள் படாதுஅருள் புரிவாயாக.ஒப்புக

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அ. எம் புதல்வா வாழி வாழியே....
சூரனை வதைக்கத் தேவி வேல் கொடுத்ததைப் பின் வரும் கல்லாடத்தில் காணலாம்
(அழியாப் பேரளி உமைக்க ணின்று
தற்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி அரத்த நெடுவேலோய்)...கல்லாடம் 13.