அறிவியல் என்பது ஆழ்ந்த நுட்பமான பார்வையில், நுண்ணறிவிலோ ( observation ) அல்லது சோதனையிலோ (experimental ) விளைவது. இரண்டில் எந்த வடிவில் அறிவியல் பெறப்பட்டாலும், எப்போது கணக்கிட்டாலும், சோதித்தாலும் ஒரே முடிவைத் தரக்கூடியதாக ( REPRODUCIBILITY ) இருக்க வேண்டும்.
நம்மவரின் நுண்ணறிவுக்கு இன்னோர் உதாரணம் ராமானுஜனின் எண்கணித நுட்பம். உலகப் புகழ்பெற்ற கணித மேதை ஹார்டி, நோய்வாய்ப்பட்டிருந்த ராமானுஜனை மருத்துவமனையில் சந்தித்தபோது, 'தான் வந்த கார் எண் 1729 அவ்வளவாக ராசி இல்லாத எண்' எனச் சொல்ல; அடுத்த கணத்தில், 'No. It is the smallest number expressible as the sum of two cubers in two different ways!' என ராமானுஜன் சொன்னதை, மாபெரும் விஞ்ஞானி ஹார்டி புரிந்துகொள்ளவே சில மணி நேரங்கள் ஆனது. இதற்குக் காரணம், கணித மேதை ராமானுஜனின் அசாத்தியமான நுண்ணறிவுதான்.
-- மருத்துவர் கு.சிவராமன். ( ஆறாம் திணை ) தொடரில்.
-- ஆனந்த விகடன். 14-5-2014.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends