30.தண்டையணி

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே.


- திருச்செந்தூர்சுருக்க உரை

தண்டையும், வெண்டையமும், கிண்கிணியும், சிலம்பும் ஒன்று பட்டு கொஞ்சி ஒலிக்க, உன் தந்தையாகிய சிவபெருமான் முன் வலம் வந்து அணைந்து நின்ற அன்பு போலவே இப்போது நான் உன்னைக் கண்டு மனம் ஒருமைப்பட, மணி முடிகளுடன், கொடியும் வேலும் பன்னிரு, கண்களும், ஆறு திருமுகங்களும் என் கண் முன் வந்து தோன்றாவோ?

எல்லா உலகங்களும், அண்டங்களும் மகிழ்ச்சியால் பொங்கி எழ, நீ போர்க்களத்தில் எழுந்தருளிய போது, திருமாலும், சிவனும் மகிழ்ச்சி கொள்ள, நீ கொண்ட நடன பாதங்களை என் முன்னே திருச் செந்தூரில் காண்பித்தவனே, கந்தனே, குற மங்கையின் அழகியமணத்தை நுகர்பவனே, அகத்தியர் வணங்கும் தலைவரே,என் முன்னே வரவேணும்.விளக்கக் குறிப்புகள்

1. சிந்து வேலும் ... (தீ மதலை சிந்தா..)...கந்தர் அந்தாதி . ( அக்கினியில் பிறந்த கோழியைக் கொடியை உடையவனே).

2. பொங்கியெழ வெங்களங் கொண்டபோது....
(புவனம் அண்டம் வானவருயிர்கள் யாவும் ஆறுமா முகத்து வள்ளல் மேனியில்
அமைந்ததன்றி வேறிலை யென்ன ஆங்கோர் வியன் பெரு வடிவங் கொண்டான்)...
கந்த புராணம் (சூரபன்பன் வதை) .

3. தண்டையும், வெண்டையமும், கிண்கிணியும், சிலம்பும் ஒன்று பட்டு கொஞ்சி ஒலிக்க,

தில்லை, திருச்செந்தூர், திருத்தணிகை, கொடுங் குன்றம் ஆகிய தலங்களில் முருகவேளின் நிருத்த தரிசனத்தை அருணகிரி நாதர் கண்டு களித்துள்ளார்.

ஈ சந்திர நிறங்களும்- சந்திரன் ஒன்றானாலும் நிறங்கள் பல. அதனால் நிறங்கள்
சந்திரனின் நிறங்கள்
1. பெளர்ணமி அன்று - மஞ்சள் (Yellow)
2. அமாவாசைக்கு ஒரிரு நாள் முன்பு = வெளிர் நீலம் (Blue moon)
3. மாலையில் - வெள்ளை (White)
4. காலையில் - சாம்பல் (Grey)
5. குளிர் காலத்தில் - காவி (Orange)
6. அபூர்வமாக, கிரகண காலங்களில் - சிவப்பு (Red)
நிலவு = பூமியின் சுழலுக்கேத்தாப் போல தன் நிறத்தை மாற்றி மாற்றி இன்பம் குடுக்கும் - குளிர்ச்சி!அதே போல் முருகனின் அறு முகங்கள் - அறு வண்ணங்கள், நம்ம சுழலுக்கு ஏத்தாப் போல் மாறி மாறிக் குளிரப் பண்ணும். இதுவே சந்திர நிறங்கள்!
சந்திர நிறங்களும் கண்குளிர எந்தன்முன் சந்தியாவோ?

தாமரையில் தவம் செய்யும் பிரம்மனின் உலகம் ஆட, மற்ற உலகங்களும் சேர்ந்து ஆட,

நீ போருக்குப் புறப்பட்ட போது பொங்கிய மகிழ்ச்சி போல், இன்று ஆட்டமும் மகிழ்ச்சி பொங்க, பொன் மலை என்னும் செந்தூர் பதியில் வளரும் வேலா,

உன் ஆட்டத்தை, அதோ அந்த ஆட்ட நாயகன் - குடமாடு கூத்தன் - திருமாலும் (பிரமன் தந்தை) பார்த்து மகிழ, ஆடல் வல்லான் உன் அப்பனும் பார்த்து மகிழ, நீ ஆடும் இந்த நடனப் பதங்கள்....செந்தூரில் மட்டுமா? என் மனத்திலுமல்லவா கொஞ்சி நடனம் செய்கின்றது கந்தவேளே!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅப்படி நீ ஆடுகையில் உன் தண்டை அணி வெண்டை அங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சுகிறது. .... மணி மகுடம் தெரிகிறது. கையில் வேல் தெரிகிறது. பன்னிரு கண்களும் ஆறிரு தோள்களும் தெரிகின்றனவே, முருகா! என்னுள் நீ ஆட ஆடுக ஆடுகவே!