32.தரிக்குங்கலை


தரிக் குங்கலை நெகிழ்க் கும்பர
தவிக் குங்கொடி மதனேவிற்
றகைக் குந்தனி திகைக் குஞ்சிறு
தமிழ்த் தென்றலி னுடனேநின்
றெரிக் கும்பிறை யெனப் புண்படு
மெனப் புன்கவி சிலபாடி
இருக் குஞ்சிலர் திருச் செந்திலை
யுரைத் துய்ந்திட அறியாரே
அரிக் குஞ்சதுர் மறைக் கும்பிர
மனுக் குந்தெரி வரிதான
அடிச் செஞ்சடை முடிக் கொண்டிடு
மரற் கும்புரி தவபாரக்
கிரிக் கும்பநன் முநிக் குங்க்ருபை
வரிக் குங்குரு பரவாழ்வே
கிளைக் குந்திற லரக் கன்கிளை
கெடக் கன்றிய பெருமாளே.- திருச்செந்தூர்பதம் பிரித்து பதவுரை


தரிக்கும் கலை நெகிழ்க்கும் பர
தவிக்கும் கொடி மதன் ஏ வில்


தரிக்கும் கலை = அணிந்துள்ள ஆடை நெகிழ்க்கும் =நெகிழ்ந்து போகும் பரதவிக்கும் = வேதனைப்படும் கொடி =கொடி போன்ற (இந்தப் பெண்) மதன் ஏ வில் = மன்மதனுயை பாணத்தினால்.


திகைக்கும் தனி திகைக்கும் சிறு
தமிழ் தென்றலினுடனே நின்று


தகைக்கும் = தடையுண்ணும் தனி = தனியாக நின்றுதிகைக்கும் = திகைப்புண்ணும் சிறு = மெல்லிய தமிழ்த் தென்றலினுடனே = தென் திசைத் தென்றலினுடன் நின்று =வந்து நின்று.


எரிக்கும் பிறை என புண்படும்
என புன் கவி சில பாடி


எரிக்கும் = தகைக்கும் பிறை = பிறைச் சந்திரன் என = என்று கூறி புண்படும் = மனம் வேதனை உறும் என =என்றெல்லாம் கூறி புன் கவி = குற்றம் உடைய சில பாடி =சில பாக்களை (பொய்ம்மையான மக்கள் மீது) பாடிக் கொண்டு


இருக்கும் சிலர் திருச்செந்திலை
உரைத்து உய்ந்திட அறியாரே


இருக்கும் சிலர் = இருக்கின்ற சிலர் திருச்செந்திலை = திருச் செந்தூரை உரைத்து = புகழ்ந்து பாடி உய்ந்திட = பிழைக்க
அறியாரே = அறியாது இருக்கின்றார்களே. (ஐயோ, இதென்ன பாவம்).
அரிக்கும் சதுர் மறைக்கும் பிரமனுக்கும்
தெரி அரிதான


அரிக்கும் = திருமாலுக்கும் சதுர் மறைக்கும் = நான்குவேதங்களுக்கும் பிரமனுக்கும் = நான்முகனுக்கும்தெரிவரிதான = தெரிவதற்கு அரிதான.


அடி செம் சடை முடி கொண்டிடும்
அரற்கும் புரி தவ பார(ம்)

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அடி = திருவடியையும் செம் சடை முடி கொண்டு = செஞ்சடை முடியையும் கொண்டுள்ள அரற்கும் = சிவபெருமானுக்கும்
புரி தவ பாரம் = செய்துள்ள தவ வலிமை (நிறைந்த).


கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை
வரிக்கும் குருபர வாழ்வே


கிரி = (பொதிய) மலையில் (வாழும்) கும்ப நல் முநிக்கும் =கும்பத்தில் தோன்றிய நல்ல அகத்திய முனிவருக்கும் க்ருபை வரிக்கும் = அருள் பாலித்த குருபர வாழ்வே = குருபர மூர்த்தியே


கிளைக்கும் திறல் அரக்கன் கிளை
கெட கன்றிய பெருமாளே.


கிளைக்கும் = பெருகிவரும் திறல் அரக்கன் = வலிமை பொருந்திய சூரனும் கிளை கெட = அவனுடைய சுற்றத் தாரும் அழிய கன்றிய பெருமாளே = கோபித்த பெருமாளே.