உப்பு தமிழர் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு உணவுப் பொருளாக இருந்துள்ளது. பொழுது சாய்ந்த பின்னர் உப்பைக் கடனாகக் கேட்கின்ற, கொடுக்கின்ற வழக்கமில்லை என்பதை இன்றைக்கும் கிராமத்தில் காணமுடியும். பெண் பிள்ளைகளுக்கு வரதட்சணையாகக் கொடுக்கும் பொருளிலும் உப்பு சேர்க்கப்படுவதில்லை. மனித வாழ்க்கையின் மையப் பொருளாகக் கருதியதன் காரணத்தால்தான் உப்பைச் சங்கப் புலவர்கள் 'அமிழ்தம்' என்று அழைத்து மகிழ்ந்துள்ளனர். நல்லத்துவனார் 'கடல்விளை அமுதம்' என்றும், சேந்தன் பூதனார் 'வெண்கல் அமிழ்தம்' என்றும் உப்பைப் புகழ்ந்து பாடியுள்ளனர். உப்பை அமிழ்தமாகத் தமிழர்கள் கருதியுள்ளனர்.
-- முனைவர் இரா. வெங்கடேசன். ( கருத்துப் பேழை)
-- 'தி இந்து' நாளிதழ். ஞாயிறு, டிசம்பர் 14, 2014.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks