பாடசாலைக்கு இப்படியும் உதவலாம்:
மீள் பதிவு
1. முதலில் தாங்கள் வசிக்கும் இருக்கும் இடத்திலோ அருகாமையிலோ
பாடசாலை இருக்கிறதா என்று விசாரிக்கவும்.

2. எத்தனை வித்யார்த்திகள் படிக்கிறார்கள். ட்ரஸ்ட் உள்ளதா?
அவர்களுக்கு நிதிவசதிகள் இருக்கிறதா? ட்ரஸ்ட் இல்லாமல்
தனியார் யாராவது நடத்துகிறார்களா? என்று விசாரிக்கவும்.

3. அவர்களுடைய மாதாந்திர தேவைகள் என்ன? வாடகை, கரண்ட் பில்,
மளிகை சாமான்கள், பால், காய்கறிகள் இதர பொருட்கள்.

4.அவர்களுக்கு தேவைப்படும் கிரந்த புத்தகங்கள் வாங்கித் தரலாம்.
சில புத்தகங்கள் சென்னையில் மட்டுமே கிடைக்கிறது.

5. Rightmantra Sundar சில பாடசாலைகளுக்கு பசங்க விளையாட கேரம்போர்டு
வாங்கித் தந்துள்ளார். அதுபோல மாணவர்களுக்கு தர்ப்பாசனம், புத்தகங்கள் வைத்து
படிக்க சிறிய டெஸ்க் வாங்கித் தரலாம்.

6. முடிந்தால் படுப்பதற்கு பாய், போர்வை, ஜமுக்காளம் கூட வாங்கித் தரலாம்.
அனைத்திற்கும் மனம் தான் முக்கிய காரணம்.

7. சென்னையில் பாடசாலைகள் அதிகம் உள்ளன. 10 பேர் சேர்ந்தவர்கள்
ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு மாதா மாதம் தங்களால் முயன்ற அளவு தொகையினை
அளித்து பாடசாலையின் எதாவது ஒரு செலவை ஏற்றுக் கொள்ளலாம்.
(கரண்ட் சார்ஜ், பால் இப்படி எதாவது ஒன்னு)

8. சென்னையை தவிர்த்து பிற இடங்களில் இருப்பவர்கள் அருகில் உள்ளவர்களுடன்
சேர்ந்து ஆங்காங்கே இருக்கும் பாடசாலைகளுக்கு உதவலாம்.

9. தமிழ்நாட்டின் தென் பகுதியில் (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமாரி
போன்ற இடங்களில்) பாடசாலைகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் தவிர.

10. சில வசதி படைத்தவர்கள் இது போன்று பாடசாலைக்கு உதவ தயாராக
இருக்கிறார்கள். அவர்களிடமும் பாடசாலை விவரம் குறித்து எதாவது ஒரு
பாடசாலைக்கு உதவ சொல்லலாம். அனைத்துமே நாம் சொல்கிற முறையில் இருக்கிறது.

11. சமையலறைக்கு தேவையான பாத்திரங்கள் வாங்கித் தரலாம்.
12. மாதம் ஒரு நாளாவது வேத வித்யார்த்திகளை வீட்டிற்கு வரவழைத்து
அவர்களை வேதபாராயணம் பண்ணச் சொல்லி அவர்களுக்கு ஒருவேளை
உணவு வழங்கலாம். பிரம்மச்சாரிகளுக்கு உணவு வழங்கினால் பெரும் புண்ணியம்.

13. தெரிந்த மருத்துவர்களிடம் பேசி வேதபாடசாலை வித்யார்த்திகளுக்கு
இலவச மருத்துவ வசதிக்கும், இலவச சிகிச்சைக்கும் ஏற்பாடு பண்ணலாம்.

14. அருகில் இருக்கும் பாடசாலைகளுக்கு வீட்டிலே பருப்பு பொடி, சாம்பார் பொடி,
வடாம் போட்டு பாடசாலைக்கு வழங்கலாம். (ராமருக்கு அணில் உதவியது போல)

15. அனைத்திற்கும் மேலாக உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் பிறந்த நாள்,
திருமண நாள் போன்றவைகளை பாடசாலை குழந்தைகளுடன் செலவழிக்கலாம்.
அன்றைய தினம் பாடசாலை குழந்தைகளுக்கு உணவிற்கு நீங்கள் ஏற்பாடு பண்ணலாம்.
(ஹோட்டல் உணவு வேண்டாம்.)

உங்கள் பணியை விட்டுவிட்டு வேதத்திற்காகவும், பாடசாலைக்காகவும் உழைக்க
சொல்லவில்லை. விடுமுறை தினங்களை இந்த மாதிரி நல்ல விஷயத்திற்காக
செலவிடலாமே. மேலும் வேதம் படிக்க முடியவில்லை என்ற குறை பலரிடமும்
(எனக்கும் தான்) இருக்கிறது. நேரம் கிடைக்கும் பட்சத்தில் ருத்ரம், சமகம், மற்றும்
29 சூக்தங்களை படிக்கலாமே. இதையே பெரியவாளும் கூறியிருக்கிறார்.

மேலும் எப்படியெல்லாம் உதவலாம் என்ற உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
ஒரு கை தட்டினால் ஓசை இல்லை. பல கைகள் தட்டினால் தான் ஓசை.

கரங்கள் இணையட்டும். வேதம் வளரட்டும்.

Thanks to Sri.Halasya Sundaram IyerDear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends