Announcement

Collapse
No announcement yet.

சப்பாத்திக்கு தொட்டுக்க வெங்காயம் இல்ல&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சப்பாத்திக்கு தொட்டுக்க வெங்காயம் இல்ல&#

    வெங்காயம் வெள்ளைப் பூண்டு இல்லாமல் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள என்னென்ன பண்ணலாம்னு முடிந்தபோதெல்லாம் ஒவ்வொரு குறிப்பாகத் தருகிறேன் என்று சொல்லியிருந்தேன். இனி, ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.


    சப்பாத்திக்கு தால் (Dal) என்பது மிக மிகச் சுலபமான ஒன்று. இதிலும் வெங்காயம் வகையறாக்களை சேர்த்தே செய்வது பலருக்கும் இன்றைய வழக்கமாகிவிட்டது. அட்லீஸ்ட் நாள் கிழமைகளிலாவது நிஷேத வஸ்துக்களை விட்டு சப்பாத்திக்கு தொட்டுக்க பண்ணலாம்.



    Dal Fry :

    இது ரொம்பவும் சிம்பிளாக செய்துவிடலாம். அவசரத்துக்கு செய்யத்தகுந்தது.
    துவரம் பருப்பு அரை கப் எடுத்து அரை மணிநேரம் ஊற விடவும். பிறகு குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொண்டு கரண்டியால் மசிக்கவும். தேவையான தக்காளிகளை பொடியாக நறுக்கி வைக்கவும். (நறுக்கும் முன் விதைகளை நீக்க மறக்க வேண்டாம்). இஞ்சி ஒரு துண்டு எடுத்து தோல் சீவி பொடியாக நறுக்கவோ காரட் துருவியில் துறுவியோ வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய்/நெய் வைத்து கடுகு, சீரகம் ஒரு ஸ்பூன், கால் ஸ்பூன் பெருங்காயம், கால் ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள்தூள், இஞ்சி துருவல் சேர்த்து நறுக்கி வைத்த தக்காளித் துண்டுகளையும் சேர்த்து சற்றே வதக்கி பருப்பில் கொட்டிவிடவும். மேலே கொத்தமல்லித் தழைகளை நறுக்கி தூவவும். எந்த வித மசாலாவும் இல்லாமலேயே நன்றாக இருக்கும் இது.


    துவரம் பருப்புக்கு பதில் பாசிப்பருப்பிலும் செய்யலாம்.

    Variation:

    மேலே சொன்ன தாலை இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமானதாக்க வெறும் பருப்புக்கு பதில் பாசிப்பயறு ஊறவைத்து வேக விட்டு செய்யலாம். மற்றவை மேலே சொன்ன முறையில்தான் என்றாலும் வாசனைக்காக கொஞ்சம் கரம் மசாலா தூளும், புளிப்புச் சுவைக்கு அரை ஸ்பூன் ஆம்சூர் பொடி( Dry mango Powder) யும் சேர்த்துக் கொள்ளலாம்.


    எந்த விதத்தில் செய்தாலும் தக்காளி போட்டு, அல்லது தக்காளியும் சேர்க்காத வைதிகாள் என்றால் தக்காளிக்கு பதில் எலுமிச்சை சாறு சேர்த்து செய்யலாம். அதே போல மிளகாய் தூளுக்கு பதில் காய்ந்த மிளகாயை தாளிப்பதும், பச்சை மிளகாயை தாளிப்பதும் கூட நன்றாக இருக்கும்.


    குறிப்பு:

    அல்லது மாதுளம்பழ முத்துக்களை வெயிலில் உலர்த்தி வைத்துக்கொண்டால் சிறிது சேர்க்கலாம். மாதுளை தோலைக் கூட தூர எரியாமல் நிழல் உலர்த்தாக உலர்த்தி மிக்சியில் அரைத்து வைத்துக்கொண்டு அதையும் போடலாம். வயிற்றுக்கோளாறுகளுக்கும் நல்லது.



    Dal Tadka:


    மேலே சொன்ன அதே முறைதான் என்றாலும் துவரம்பருப்பை சற்று ஊற வைத்து இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளித் துண்டுகளுடன் சேர்த்து குக்கரில் வேக வைத்து மசித்து மேலே நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயம், சிவப்பு மிளகாய் எல்லாம் தாளித்துக் கொட்டி சுவைக்குத் தகுந்த உப்பையும் சேர்த்து மசித்து வைப்பது தால் தட்கா (Dal Tadka) எனப்படும். தட்கா என்றால் தாளிப்பு என்று அர்த்தம். தாளிப்பு கிறிஸ்ப்பாக இருந்தால் அது தால் தட்கா.


    Dal Fry and Dal Tadka - ரெண்டுக்கும் என்ன வேறுபாடு என்றால் எனக்குப் புரிந்தவிதத்தை சொல்கிறேன்....


    முதலில் தாளிப்பு செய்து பிறகு தக்காளி etc வை வதக்கி வெந்த பருப்பு சேர்ப்பது முதல் வகை. அதில் தாளிப்பு கிரிஸ்பா இருக்க சான்ஸ் இல்லை, அடுத்த வகையில் எல்லாத்தையும் சேர்த்து குக்கரில் ஒரேயடியா போட்டு வேலையை சட்டுபுட்டுன்னு முடிச்சுட்டு அப்புறம் தாளிப்பது. எப்படி செய்தாலும் நன்றாகவே இருக்கும்.



    Tomato Dal / தக்காளி பருப்பு:



    ஒரு கப் துவரம்பருப்பை குக்கரில் வேக வைக்கவும்.

    அரை மூடி தேங்காயை துருவி மிக்சியில் நைசாக அரைக்கவும். அல்லது தேங்காய் பால் கெட்டியானது அல்லது Coconut Milk Cream கூட உபயோகிக்கலாம். பொதுவாக பருப்பில் தேங்காய் சேர்ப்பது வழக்கமில்லை, இது குழம்பும் இல்லாமல் பருப்பும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாய் இருக்கும்.

    கால் கிலோ அல்லது மீடியம் சைஸ் தக்காளி மூன்று அல்லது நான்கு எடுத்து பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    வெந்த பருப்பை மசித்து கொஞ்சம் நீரும் சேர்த்து காரத்துக்கு வேண்டிய பச்சை மிளகாய்களை நடுவில் slit செய்து போட்டு நறுக்கின தக்காளிகளையும் சேர்த்து கொதிக்க விடவும். தக்காளி சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் உப்பையும் சேர்த்துவிடலாம்.

    தக்காளி வெந்து மசிந்ததும் அரைத்த தேங்காய் விழுதைக் கொட்டிக் கிளறி இறக்கவும். கொஞ்சம் நீர்க்க வேண்டும் என்றால் வேண்டும் அளவுக்கு நீர் சேர்க்கலாம்.

    மேலே நெய்யில் கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். கொத்தமல்லி தழைகளால் அலங்கரித்து பரிமாறலாம். இது சப்பாத்திக்கும் சரியாக வரும், தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.

    மசாலா வாசனை பிடிக்காதவர்களுக்கானது இது.



    Panchmel Dal/ பஞ்ச்மேல் டால்:


    என்னது? பஞ்சு மேல பொம்மையா?ன்னு கேக்கக்கூடாது...

    ‘பஞ்ச்’ என்றால் ‘ஐந்து’,
    ‘மேல்’ என்றால் ‘Mixed’,
    ‘டால்’ என்றால் ‘பருப்பு’.

    சரி, ஹிந்தி கிளாஸ் முடிஞ்சாச்சு...


    ஐந்து வகை பருப்புகளை கலந்து சமைத்த பருப்பு என்று அர்த்தம். இது ராஜஸ்தானிய பாரம்பரிய உணவு. ப்ரோடீன் ரிச் சப்ஜி இது. இதையும் வெங்காயம் பூண்டு இல்லாமல் செய்துவிடலாம். இதில் attraction என்னவென்றால் அதை smoky flavorல் செய்வதுதான். Smoky flavor என்றால் விறகடுப்பு புகை வாசனை வரணும் அவ்வளவுதான்...(Old is always Goldஆக்கும்..
    )


    கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உடைத்த உளுத்தம்பருப்பு, சிவப்பு மசூர் பருப்பு (இதற்கு பதில் சாதா துவரம்பருப்பு கூட சேர்க்கலாம்) மற்றும் உடைத்த பாசிப்பயறு (இதுவும் கிடைக்கவில்லை என்றால் முழு பயறு சேர்க்கலாம்) இந்த ஐந்து வகை பருப்பும் ஒரே அளவில் எடுக்கவும். உங்கள் தேவைக்கு ஏற்றபடி எல்லாம் கால் கால் கப் அல்லது ரெண்டு ரெண்டு ஸ்பூன் என்று வேண்டிய அளவில் எடுங்கள்.


    பருப்புக்களை நன்றாக அலம்பிவிட்டு ஒரு பத்து முதல் பதினைந்து நிமிடம் வரை ஊற வைத்துக் குக்கரில் மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக விடவும். வெந்ததும் மத்து அல்லது Masherஆல் மசித்து தேவையான உப்பை சேர்க்கவும்.

    இந்த பருப்பில்
    ரெண்டு வித தாளிப்பு உண்டு.


    முதல் தாளிப்பு:


    ஒரு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு மீடியம் சைஸ் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வெறும் வாணலியில் தனியாவை வறுத்து கொரகொரப்பாக பொடித்து ஒன்றரை ஸ்பூன் எடுக்கவும். காரத்துக்கு அரை ஸ்பூன் மிளகாய் தூள் போதும்.


    ரெண்டு ஸ்பூன் நெய்யில் முதலில் இஞ்சி, அடுத்து தக்காளி, அடுத்து தனியா மற்றும் காரப்பொடி சேர்த்து தக்காளி வதங்கியதும் கொஞ்சம் நீர் விட்டு மூடி வைக்கவும். தக்காளி நன்றாக பேஸ்ட் போல ஆனதும் வெந்த மசித்த பருப்புக்களை சேர்த்து உங்கள் தேவைக்கு ஏற்ற consistancy வரும்வரை நீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வையுங்கள். ரெண்டாவது தாளிப்பு செய்யும் முன் இதில் புகை வாசனை போடவேண்டும். இதுதான் ராஜஸ்தானிய சமையலின் signature.



    எப்படிப் புகை போடலாம்?


    ரெண்டு நிலக்கரித்துண்டை எடுத்து காஸ் பர்னர் மேல் வைத்தால் தீ பிடிக்கும். Tongs அல்லது இடுக்கியை வைத்து கரித்துண்டை எடுத்து Fan அடியில் வைத்தால் அல்லது விசிறி விட்டால் கரி முழுக்க சிவப்பாக தணல் போல் ஆகும். கரி முழுக்க சாம்பல் பூசிக்கொள்ளும் வரை பொறுத்திருந்து இடுக்கியால் ஒரு அடி கனத்த பாத்திரத்தில் தணலை வைத்து அந்தப் பாத்திரத்தை வெந்த பருப்புக் கலவைக்கு நடுவே வைத்து தணல் மேலே கால் ஸ்பூன் நெய் விட்டால் புகை கிளம்பும். உடனே மூடி போட்டு அந்த பருப்பு உள்ள பாத்திரத்தை சரியாக ரெண்டு நிமிடம் வரை மூடி வையுங்கள். புகையானது பருப்பு உள்ள பாத்திரத்தின் உள்ளே இருக்கும்போது விறகடுப்பில் சமைத்தது போல் இருக்குமாம். அதிக நேரம் விட்டு வைத்தால் பதார்த்தம் கெட்டுவிடும் என்பதால் ரெண்டு நிமிடம் பொறுத்து கரி வைத்த பாத்திரத்தை வெளியில் எடுத்து விடலாம்.


    இனி ரெண்டாவது தாளிப்பு:


    ரெண்டு ஸ்பூன் நெய்யில் முதலில் ஒரு ஸ்பூன் சீரகம், அடுத்து ஒரு ஸ்பூன் கடுகு, ரெண்டு அல்லது மூன்று முழு சிவப்பு மிளகாய் போட்டு வெடித்ததும் அரை ஸ்பூன் பெருங்காயம், ரெண்டு ஸ்பூன் கசூரி மேத்தி (இதை கடைசியாக தாளிப்பதே சிறந்தது) சேர்த்து பருப்பின் மேலே கொட்டி கிளறவும்.


    கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தயக்கீரைதான்.
    (நமக்கு ஓசூர் தெரியும், பாகிஸ்தானில் உள்ள கசூர் என்ற ஊரில் கிடைக்கும் மேத்தி இலைகள் தனிச்சுவை கொண்டதாம். அதான் இந்தப் பேர் – இது பொது அறிவுக்கு...)

    அவ்வளவுதான், பஞ்ச்மேல் தால் தயார்.



    இதை சப்பாத்தி ரொட்டியுடன் மட்டுமில்லாது ஜீரா ரைஸ் உடன் கூட சாப்பிடலாம்.



    மீதியை அடுத்து இன்னொரு சமயம் சொல்கிறேன்.
    Last edited by Chitrasrikanth; 25-05-17, 19:27.

  • #2
    Re: சப்பாத்திக்கு தொட்டுக்க வெங்காயம் இல்&#299

    Super ! All are very nice !
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: சப்பாத்திக்கு தொட்டுக்க வெங்காயம் இல்&

      Originally posted by krishnaamma View Post
      Super ! All are very nice !


      Thanks Friend!

      Comment

      Working...
      X