Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    37.நிதிக்குப் பிங்கலன்


    நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
    நிறத்திற் கந்தனென் றினைவோரை
    நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
    றரற்றித் துன்பநெஞ் சினில்நாளும்
    புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
    புகட்டிக் கொண்டுடம் பழிமாயும்
    புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
    புணர்க்கைக் கன்புதந் தருள்வாயே
    மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
    மறத்திற் றந்தைமன் றினிலாடி
    மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
    டமிழ்ச்சொற் சந்தமொன் றருள்வோனே
    குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
    கொழித்துக் கொண்டசெந் திலின்வாழ்வே
    குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
    குவித்துக் கும்பிடும் பெருமாளே.



    - திருச்செந்தூர்


    [div6]பதம் பிரித்து பதவுரை


    நிதிக்கு பிங்கலன் பதத்துக்கு இந்திரன்
    நிறத்தில் கந்தன் என்று இனைவோரை


    நிதிக்கு = செல்வத்துக்கு பிங்கலன் = குபேரன் என்றும்பதத்துக்கு இந்திரன் = பதவிக்கு இந்திரன் என்றும் நிறத்தில் கந்தன் = புகழொளிக்குக் கந்தன் என்று = என்றெல்லாம் (நான்) கூறி இனைவோரை = (கொடுப்பதற்கு)வருந்துவோரிடம் (போய்).


    நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று
    அரற்றி துன்ப நெஞ்சினில் நாளும்


    நிலத்தில் = (நீங்களே) இப்பூமியில் தன் = என் பெரும் பசிக்குத் தஞ்சம் = கடும் பசிக்குப் புகல் அளிப்பவர் என்று அரற்றி = என்று முறையிட்டு துன்ப நெஞ்சினில் = துன்பமே(குடி கொண்ட) நெஞ்சில் நாளும் = நாள் தோறும்.


    புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம்
    புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும்


    புதுச் சொல் சங்கம் = புதிய சொற்களின் சேர்க்கையால் ஒன்று இசைத்து = (பாடல்) ஒன்றை அமைத்துச் சொல்லும்சங்கடம் = சங்கடத்தில் புகட்டிக் கொண்டு = நானே மாட்டிக் கொண்டு உடம்பு
    அழி மாயும் = உடம்பை அழித்து மடிகின்ற.


    புலத்தில் சஞ்சலம் குலைந்திட்டு உன் பதம்
    புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே


    புலத்தில் = புலன்களால் வரும் சஞ்சலம் குலைத்திட்டு =இன்னல்களை ஒழித்து உன் பரம் புணர்க்கைக்கு = உன் திருவடியைச் சேர்வதற்கு அன்பு தந்து அருள்வாயே =அன்பைத் தந்து அருள் புரிவாயாக.


    மதித்து திண் புரம் சிரித்து கொன்றிடும்
    மறத்தில் தந்தை மன்றினில் ஆடி


    மதித்து = மனதில் கருதி திண் புரம் சிரித்து = வலிமை நிறந்ததிரி புரங்களைச் சிரித்து கொன்றிடும் = அழித்த மறத்தில் =வீரமுள்ள தந்தை = தந்தையும் மன்றினில் ஆடி = அம்பலத்தில் ஆடுகின்றவரும்.


    மழு கை கொண்ட சங்கரர்க்கு சென்று வண்
    தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே


    மழுக்கைக் கொண்ட = மழு ஏந்திய கையை உடையவரும் ஆகிய.
    சங்கரர்க்கு = சங்கரனுக்கு சென்று = (தலம் தேறும்) சென்றுவண் தமிழ் சொல் சந்தம் ஒன்று = வளப்பம் பொருந்திய தமிழ்ச் சொல்லால் வேதப் பொருளை அருள்வோனே =(சம்பந்தராக வந்து) அருளியவனே.


    குதித்து குன்று இடம் தலைத்து செம் பொ(ன்)னும்
    கொழித்து கொண்ட செந்திலின் வாழ்வே


    குதித்து = (அலைகள்) குதித்தெழுந்து குன்று இடம் தலைத்து =(எதிரில் உள்ள) குன்றுகளைத் தோண்டி அலைத்து செம் பொன்னும் கொழித்துக் கொண்ட =செம்பொன்னையும் கொழித்துத் தள்ளும் செந்திலின் வாழ்வே= திருச்செந்தூரில் வாழ்பவனே.


    குற பொன் கொம்பை முன் புலத்தில் செம் கரம்
    குவித்து கும்பிடும் பெருமாளே.


    குறப் பெண் கொம்பை = குறக் குலத்துக் கொம்பு போன்ற வள்ளியை முன் = முன்பு புனத்தில் = தினைப்புனத்தில் செம்கரம் குவித்து = உன் செவ்விய கைகளைக் கூப்பிகும்பிடும் பெருமாளே = கும்பிட்ட பெருமாளே.[div6]





    சிவகுருவே! செந்தில் நாயகரே! வல்ளி மணவாளனே! மனிதரைப் பாடாது உமது பாதத்தில் அன்பினை வைக்கும்படி அருளுவீர் என்பது இப்பாடலின் கருத்து



    விளக்கக் குறிப்புகள்


    வண் தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே...
    கொன்றைச் சடையற்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழைப் கர்வோனே...திருப்புகழ் அம்பொத்தவிழி.
Working...
X