Announcement

Collapse
No announcement yet.

அருந்ததி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அருந்ததி

    அருந்ததி
    மணமக்கள் அருந்ததி பார்ப்பதின் நோக்கம் என்ன?
    வசிஷ்டரின் தர்ம பத்தினி அருந்ததி. மனைவி என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். வசிஷ்டர் மனதில் நினைப்பதை அருந்ததி செயலில் காட்டுவர். நீண்ட வம்ச விருத்தி உடையவர். பராசர முனிவருக்குப் பாட்டி. வியாச முனிவருக்குக் கொள்ளூப்பாட்டி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவரது ஒழுக்கத்தின் மாண்பினைக் கண்டு என்றும் தீர்க்க சுமங்களியாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்று நட்சத்திரமாக இவர் ஒளி வீசுபவர். அருந்ததி போல் வாழ வேண்டும். பிள்ளைப் பேறு பெற வேண்டும். தீர்க்கசுமங்கலி பாக்கியம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் மணமக்கள் இம்மாதரசியை கண்டு வணங்கி ஆசி பெறுதல் அவசியமான ஒரு நிகழ்ச்சியாகும்.
    -- ( அறிவோம் ! தெளிவோம் ! ) மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
    -- தினமலர் பக்திமலர். டிசம்பர் 11, 2014.
Working...
X