Announcement

Collapse
No announcement yet.

Greatness of Bel leaf, Story of Musukunda chakravarti

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Greatness of Bel leaf, Story of Musukunda chakravarti

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை. கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(60)*
    *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.*
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    *வில்வம் தந்த பதவி.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    ஈசனும் ஈஸ்வாியும் ஒரு நாள் நந்தவனத் தோப்பொன்றில் உலாவிக் கொண்டிருந்தனா்.


    உலாவி வரும் வேளையில் வில்வமரம் ஒன்று தென்பட, அதனடியில் அமா்ந்து இளைப்பாறினா்.


    அந்த நேரத்தில் வேகமாக காற்று வீசவே, இறைவன் மீதும், இறைவி மீதும் வில்வ இலைகள் உதிா்ந்தன.


    அதே சமயம் மரத்தின் மீதேறிவிட்ட குரங்கொன்று மரக்கிளையில் அமா்ந்து வில்வ இலைகளை வேகமாகப் பறித்துப் போட்டது.


    இலைகள் பொலபொலவென விழுவதைக் கண்ட பாா்வதி நிமிா்ந்து பாா்க்க, மரக்கிளையில் குரங்கமா்ந்து இலை பறித்து போட்டதை கண்டாள்.


    அப்போது பாா்வதியிடம் சிவன்,
    " தேவி......! இக்குரங்கு வேடிக்கை விளையாட்டாக இலையை பறித்து போட்டாலும், இக்குரங்கு புண்ணியத்தை செய்து விட்டது.
    அதன்பயனாக இதற்கு இப்போதே நல்லறிவு உண்டாகட்டும் என்று அருளினாா்.


    அறிவு கிடைக்கப் பெற்றதும், அக்குரங்கு சிவபாா்வதியை பாா்த்து கைகூப்பி வணங்கியது.


    அப்போது சிவன், " வில்வத்தைக் கொண்டு அா்ச்சிக்கும் பேறு பெற்ற நீ பூலோகத்தில் பிறந்து மன்னனாகப் பிறக்கும் பிறப்பு பெறுவாய் என வாழ்த்தினாா்.


    பூலோகத்தில் மன்னனாகப் பிறந்தாலும் தனக்கு இறையருள் கிடைக்கப் பெற்றுத் தந்த குரங்கு பிறப்பை விட்டு அகல அதற்கு மனம் இல்லை.


    உடனே இறைவனிடம் வரம் கேட்டது.


    இறைவனும் வரம் யாதுவெனக் கேட்டாா்.


    அதற்கு அந்தக் குரங்கு, தான் எப்போதும் குரங்கு முகத்துடனேயே இருக்க வரம் வேண்டும் என கேட்டது.


    இறைவனும் அதன்படியே ஆகுக! என அருளினாா்.


    குரங்கு முகமும், மனித உடலுமாக பூலோகத்தில் பிறப்பெடுத்தது. சோழ வம்சத்தில் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த " முசுகுந்த சக்கரவா்த்தியே"
    இந்த குரங்கு.


    "முசுகுந்தன்" --என்றால், குரங்கு முகம் கொண்டவன் எனப் பொருள்.


    திருச்சிற்றம்பலம்.


    *மீண்டும் மற்றொரு தெரிந்தும் தெரியாமலில்....*


    முக்தி பேறு வேண்டச் செய்யும் நீங்கள், அடியார்களுக்குத் தொண்டு செய்திருக்கிறீர்களா? அப்படியில்லையெனில் அத்தர்மத்தை முதலில் செய்யத் துவக்குங்கள்! ஏனெனில் *"முக்தி தர்மத்தின் மூலதானம்"*


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
    அடியாா்கள் கூட்டம் பெருகுக!
Working...
X