ஜோதிடம் என்பது வானிலுள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள் இவற்றின் அவ்வப்போதைய நிலையை வைத்துக் கணக்கிட்டுக் கூறப்படுகிறது.
சூரியனைச் சுற்றித்தான் கிரகங்கள் வலம் வருகின்றன. குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன், சனி ஆகிய கிரகங்கள் சூரியனை வலப்புறமாகச் சுற்றிவருகின்றன. ஆனால், ராகு, கேதுக்கள் சூரியனை இடப்புறமாக சுற்றிவருகின்றன. சந்திரன் சூரியனைச் சுற்றுவதோடு பூமியையும் சுற்றிவருகிறது.
வான் மண்டலத்தில் முட்டை வடிவப் பாதையில் கிரகங்கள் சுற்றிவருகின்றன. இவை சுற்றிவரும் பாதையில்தான் 27 நட்சத்திரங்களும் உள்ளன. வான் மண்டலத்தில் எண்ணற்ற கோடி நட்சத்திரங்கள் இருப்பினும் அஸ்வினி முதல் ரேவதி வரையிலும் உள்ள 27 நட்சத்திரங்கள்தான் ஜோதிட ரீதியாகக் கணக்கிடப்படுகின்றன.
இந்த 27 நட்சத்திரங்கள் உள்ள ஓட்டப் பாதையை 12 ராசிகளாகப் பிரிந்துள்ளன. சந்திரன் இரண்டேகால் நாட்கள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். இந்தச் சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டே ஒருவரது ஜாதகம் கணிக்கப்படுகிறது. சூரியனை வைத்து லக்னத்தையும் சந்திரனை வைத்து ராசியும் கணிக்கப்படுகிறது.
ஜோதிட விதிப்படி நாழிகை கணக்கு முக்கியமானது. ஒரு நாள் என்பது 24 மணி நேரம். 24 மணி நேரம் என்பது 60 நாழிகை. ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகை எனக் கணிக்கப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் லக்னம் எங்கு குறிக்கப்பட்டுள்ளதோ அதனை ஒன்றாம் வீடாக கொண்டு எண்ணுதல் வேண்டும்.
உதாரணமாக மேஷம் 1-வது வீடு எனக் கொண்டால் மிதுனம் 3-ம் இடம். சிம்மம் 5-ம் இடம். ராசி வேறு லக்னம் வேறு என்று ஜோதிடவியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் வீடு எதுவோ அதுவே அவரது ராசி வீடு.
லக்னத்துக்கு 1,5, 9-ம் வீடுகளுக்கு திரிகோண ஸ்தானங்கள் என்று பெயர்.
சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து அப்போதைய நேரத்துக்குக் கிரகங்கள் எங்குள்ளன என்று கண்டறிந்து பலன் சொல்லும் முறைக்கு கோட்சாரப்பலன் என்று பெயர்.
-- ( ஜோதிடம் தெளிவோம் ) பகுதியில்...
-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்.
-- 'தி இந்து' நாளிதழ். பெண் இன்று . ஞாயிறு , டிசம்பர் 7 , 2014.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends