படித்ததில் ரசித்து ருசித்தது
நான் மிகவும் பாக்கியவான் . . .


நான் மிகவும் சந்தோஷமாக
இருக்கிறேன்
நான் நல்ல செல்வத்தோடு
இருக்கிறேன் இப்படி இருக்க என்னிடம்
என்ன உள்ளது ?


இதன் ரகசியம் சொல்லவா . . . . .


என்னுடைய பணத்தேவைகளைக்
கவனித்துக்கொள்ள
திருக்கோளூர்
வைத்தமாநிதி பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


என்னுடைய உடல் ஆரோக்கியத்தை
அற்புதமாக கவனிக்க
திருஎவ்வுள்ளூர்
வைத்தியர் வீரராகவன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


என் மனதில் கவலைகள்
உண்டாகும்போது, 'கவலைப்படாதே'
என்று சொல்ல
திருக்கச்சி
பேரருளாளன் வரதராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


எனக்கு குறைவில்லாமல்
அழகழகான, அற்புதமான
வஸ்திரங்கள் எப்பொழுதும் தர
த்வாரகாநாதன்
ரண் சோட் ஜீ
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


எனக்கு வேண்டிய
ருசியான,ஆகாரத்தை,
என் ஆயுள் முழுவதும் தர
பூரி நாயகன்
ஜகந்நாதன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


என் குடும்பத்தை என்றும்
சந்தோஷமாகக் காப்பாற்ற,
திருமலைமேல்
திருப்பதி ஸ்ரீநிவாஸன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


என்னை விரோதிகளிடமிருந்து
எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
அஹோபிலம்
மாலோல நரசிம்மன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


என் வாழ்க்கையை
சரியான பாதையில் நடத்த
திருவல்லிக்கேணி
பார்த்தசாரதி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


என்னை இரவில்
சுகமாக தூங்க வைக்க
திருப்புளியங்குடி
பூமிபாலர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


என்னை காலையில்
அன்போடு அழகாக எழுப்ப
திருக்குறுங்குடி
சுந்தர பரிபூரண நம்பி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


என்னோடு ஆனந்தமாக
குள்ளக்குளிர குடைந்து நீராட
யமுனைத்துறைவன்
பாங்கே பிகாரி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


இன்னும் யாரெல்லாம்
என்னோடு எனக்காக இருக்கிறார்கள்
தெரியுமா ?


சொல்கிறேன் . . .
நீயும் தெரிந்து கொள் !
கொஞ்சம் பொறுத்திரு . . .


நீ இவர்களை எல்லாம்
உன்னோடு வைத்துக்கொண்டாயா ?


இன்னும் பலர் இருக்கிறார்கள் . . .
அவர்களையும் சொல்கிறேன் கேள் !


நான் சொன்னபடி செய்யவும்,
என்னோடு எல்லா இடத்திற்கு வரவும்,
திருவெஃகா
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


என்னை உரிமையோடு தொட்டுப்
பேசவும்,என்னோடு விளையாடவும்
பண்டரீபுரம்
விட்டலன்,பாண்டுரங்கன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .


எனக்கு பொழுது போகாத
சமயங்களில் என்னோடு உட்கார்ந்து பேச
தென்திருப்பேரை
மகர நெடுங்குழைக்காதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


எனக்கு வேண்டிய உபதேசங்களைச்
சொல்லித்தரவும்,என்னைக் குளுமையாக
வைக்கவும் எப்பொழுதும்
பத்ரிகாஸ்ரமம்
நாராயணன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


எனக்கு எல்லா ஆழ்வார்களையும்
தரிசிக்கவைப்பதற்கும்,
பூமியில் வாழ எல்லா வளங்களையும்
தருவதற்கும்,
ஸ்ரீரங்கம்
ரங்கராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


நான் கொஞ்சிமகிழவும்,
எனக்கு அன்புத்தொல்லை தரவும்,
குருவாயூர்
உன்னி க்ருஷ்ணன் குருவாயூரப்பன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .


என்னோடு கடற்கரையில்
காலார நடந்துகொண்டு,
வயிறு குலுங்க சிரிக்க வைக்க,
திருக்கடல்மல்லை
ஸ்தல சயனப் பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


என்னிடம் தைரியமாகப் பொய்
சொல்ல,என்னை உரிமையோடு
மத்தால் அடித்துத் திருத்த,
உடுப்பி
ஸ்ரீ க்ருஷ்ணன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .


எனக்காக தூது செல்ல,
எனக்காக வாதாட,
திருப்பாடகம்
பாண்டவர் தூத பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


இப்படியாக இன்னும் பலபேர்
என்னோடு எனக்காக இருக்கிறார்கள் !


அதனால் என் தேவைகளைப் பற்றி,
என் வாழ்க்கையைப் பற்றி,
என் எதிர்காலத்தைப் பற்றி,
என் மரணத்தைப் பற்றி,
என் குடும்பத்தைப் பற்றி,
என் கௌரவத்தைப் பற்றி
நான் யோசிப்பதேயில்லை . . .

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஆஹா....சொல்லாமல் விடமுடியுமா . . .


எனக்கு மோக்ஷத்தைத் தர,
என் மனதிற்கு சாந்தி தர,
எனக்கு புகழைத் தர,
திருவனந்தபுரம்
ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


இத்தனை பேர்
என்னோடு இருக்க,
நான் எதைப்பற்றி
கவலைப்படவேண்டும் ?


நான் ஆனந்தத்தில்
நீந்திக் களித்துக்கொண்டிருக்கிறேன் . . .


எப்பொழுதும் ஆனந்தமாகவே இருப்பேன் . . .


எல்லா ஜன்மங்களிலும் நிச்சயம்
ஆனந்தமாகவே இருப்பேன் . . .


நீங்களும் இவர்களை உங்களோடு
வைத்துக்கொள்ளுங்கள் !


உங்கள் வாழ்க்கையும் நிச்சயம்
ஆனந்தமாகவே
இருக்கும் . . .