Announcement

Collapse
No announcement yet.

விதியும் மதியும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விதியும் மதியும்

    இஸ்லாமியக் கலிபாக்களில் ஒருவரான ஹஜ்ரத் அலியைச் சந்தித்த யூத இளஞன் விதிக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்ல முடியுமா? என்று கேட்டான். ஹஜ்ரத் அலி அவனிடம், "உன் வலதுகாலைத் தூக்கு" என்றார். அவனும் தனது வலதுகாலைத் தூக்கியபடி நின்றான்.
    "சரி... இப்போது உன் வலது காலை கீழிறக்காமலேயே இடது காலையும் தூக்கு" என்றார்.
    "அது எப்படி முடியும்?" என்றான் இளஞன்.
    "ஒற்றைக் காலை மட்டும் தூக்கு என்றதும் உன்னால் முடியும் என நினைத்துச் செய்தாய் அல்லவா? அதுதான் பகுத்தறிவு. இன்னொரு காலையும் தூக்கச் சொன்னபோது அது முடியாது என உணர்ந்தாய் அல்லவா? அதுதான் விதி" என்றார். அந்த வித்தியாசத்தை உணர்ந்தாலேபோது.
    விதியை மதியால் வெல்லுங்கள். வாழ்வு வசப்படும். மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும்.
    -- மு.கோபி சரபோஜி, ராமநாதபுரம். ( வெற்றிக்கொடி இணைப்பு ).
    -- 'தி இந்து' நாளிதழ் . செவ்வாய், டிசம்பர் 9, 2014.
Working...
X