Announcement

Collapse
No announcement yet.

டயர் பஞ்சர்ஸ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • டயர் பஞ்சர்ஸ்

    டயர் பஞ்சர்ஸ்
    டயர் பஞ்சர் ஆனாலும் கவலையில்லை.
    திருச்சி நெ.1 டோல்கேட்டில் பஞ்சர் கடை நடத்திவரும் கே.அக்தர் அலி ( 54 ), தான் தயாரித்த பவுடரைப் பயன்படுத்தி டிராக்டர், ஜே.சி.பி., கார், லாரி, டூ வீலர் உட்பட ஆயிரத்து 500 வாகனங்களை பஞ்சர் ஆனாலும் பாதிக்காத நிலையில் ஓடவிட்டிருக்கிறார்.
    இந்த பவுடரை பயன்படுத்துவது எளிது. டயரில் இருக்கும் டியூப்பை கழற்றி எடுத்துவிட்டு, பவுடரை சாதாரண தண்ணீருடன் கலந்து டயரின் உட்புறம் செலுத்தினால் போதும். டிஸ்க்குடன் சேர்ந்து டயரில் அப்ளை ஆகிவிடும். அப்புறம் வழக்கம்போல காற்று நிரப்பி ஓட்ட வேண்டியதுதான். இதை அப்ளை செய்வதால் மைலேஜ் குறையாது. காற்றின் அளவு சரியாக இருந்தால் போதும். டயரில் முள், ஆணி முதலியவை குத்தியிருந்தால், அப்படியே ஓடுகிறது.
    முள்ளை வெளியே எடுத்தால் அந்த இடத்தில் உள்ளே இருக்கும் பவுடர் கரைசல் அந்த இடத்தை அடைத்துக்கொள்கிறது. இதனால் பஞ்சரைப் பற்றி கவலையில்லை.
    -- ஜி.ஞானவேல்முருகன். ( ஊர் வலம் ).
    -- 'தி இந்து' நாளிதழ் . செவ்வாய், டிசம்பர் 9, 2014.
Working...
X