courtesy:http://www.srikainkaryasri.com/2017/...lya-vaibhavam/
மஹா வாத்ஸல்ய வைபவம்———————————————————–
தாயாரின் மெட்டி வைபவம்
————————— ——————ஞானா நந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் |ஆதாரம் ஸர்வ வித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே ||
———————
ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய : கவிதார்ர்க்கிககேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||
————————————-
1. "மெட்டி " என்பது ஒரு அணிகலன். ஸுமங்கலிகளுக்கு இருக்கவேண்டிய ஆறு மங்கலப் பொருள்களில் ஒன்று. அவற்றில் முதலாவது, மெட்டி.2வது , கைவளை . 3 வது, மூக்குத் திருகு . 4 வது திருமங்கல்யம் .5 வது நெற்றியில் திலகம். 6 வது, கூந்தலில் புஷ்பம் (அல்லது கண்களில்மை என்றும் சொல்வர் .
2. திருமங்கை ஆழ்வாரின் திவ்ய சரிதத்தைப் பார்த்தோமானால், அவருக்கு
அனுக்ரஹம் செய்ய சங்கல்பித்த பகவான், திருமணக்கோலத்தில்
ஸேவை சாதித்து, நீலன் (திருமங்கை மன்னன் ), ஸ்ரீவைணவர்களின்
ததீயாராதனச் செலவுக்காக, பகவானின் திருவாபரணங்களைக்கொள்ளையடிக்க
(திருட) பகவானின் திருவடியில் இருந்த கால்விரல் மோதிரம் என்றும்,
கணையாழி என்றும், மெட்டி என்றும் சொல்லப்படுகிற திருவாபரணத்தைப்
பகவான் திருவடியிலிருந்து கையால் கழட்டமுடியாமல், தன் பற்களால்
கடித்து இழுத்ததும் , ஆழ்வாருக்குப் பகவான் அஷ்டாக்ஷர மந்த்ரத்தை
உபதேசித்ததும் ,வைணவர்களுக்கு மிகவும் தெரிந்த உள்ளத்தைக் கொள்ளை
கொள்கிற நிகழ்ச்சி .
3. நாம் இப்போது அநுபவிக்கப் போவது, பிராட்டியின் "மெட்டி"
அமரகோசம் , பிராட்டியைப் பற்றிச் சொல்லும்போது,
"லக்ஷ்மி : பத்மாலயா பத்மா
கமலா ஸ்ரீ : ஹரிப்ரியா
இந்திரா லோகமாதா மா
நமா மங்கள தேவதா
பார்கவி லோகஜனனி
க்ஷீர ஸாகர கந்யா ——-"
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகிறது. இவள் மங்கள தேவதை.
இந்த மங்கள தேவதை "மெட்டி"யை அணிந்து மெட்டியை அனுக்ரஹிக்கிறாள்
4.சோழதேசத்தில் ஆழ்வார் மங்களாசாசனம் செய்த சில திவ்ய தேசங்களில்
உத்ஸவ மூர்த்தியான பிராட்டிக்கு, "மெட்டி " உள்ளது. இந்தமாதிரியான
திவ்யதேசம் ஒன்றில், கைங்கர்யம் செய்யும் பாஞ்சராத்ர ஆகம அர்ச்சகர் ஒருவர் .
உத்ஸவமூர்த்தியான தாயாருக்கு, அர்க்யம் , பாத்யம் சமர்ப்பிக்கும்போது
திருவடிகளில் " மெட்டியைத் " தரிசித்து உபசரிப்பார்.
ஒருசமயம், பாண்டிய தேசத்தில், அவருக்கு ஒரு திவ்யதேச கைங்கர்யம்
கொஞ்சநாட்களுக்குக் கிடைத்தது.
திருமஞ்சன சமயம்—-பெருமாள், உபயநாச்சிமார்களை எழுந்தருளப்பண்ணினார்.
க்ரமேண பூர்வாங்க கர்மாக்களைச் செய்து, அர்க்யம் ,பாத்யம் சமர்ப்பிக்கும்போது ,
உபயநாச்சிமாரான தாயாரின் திருவடிகளில் , "மெட்டி " ஸேவை சாதிப்பதைக்
கண்டு, ஆச்சர்யப்பட்டார். ஏனென்றால், இந்த திவ்ய தேசத்தில் உத்ஸவத்தாயாருக்கு,
திருவடியில் மெட்டி இல்லை என்று சொல்லியிருந்தார்கள். அர்க்யம்
சமர்ப்பிக்கும்போது , மெட்டியை சேவித்தவர் , மயங்கி விட்டார்.
"மெட்டி தேவி"யின் திருவிளையாடல் இது.
5. பிராட்டியின் "மெட்டி"யைப்பற்றிப் பேசிக்கொண்டே இருப்பது, "வாக் யஜ்ஞம் "
மெட்டியின் திருவுருவைத் த்யாநிப்பது, சேவிப்பது, திருக்கல்யாண குணங்களைச்
சொல்வது "கீர்த்தன யஜ்ஞம்". முமுக்ஷூக்கள் பிராட்டியை முன்னிட்டு, பகவானை
சரணம் அடையும் முன்பாக, பிராட்டியின் திருவடி மெட்டியில் சரணாகதி செய்வது,
" சரணாகதி யஜ்ஞம் "
6. மங்களம் பகவான் விஷ்ணு :
மங்களம் மதுஸுதன :
மங்களம் புண்டரீகாக்ஷ :
மங்களா யதனோ ஹரி :
மங்களம் எங்கே இருக்கிறது ?
பகவான் விஷ்ணுவே மங்களம்.
பகவான் மதுஸுதனனே மங்களம்
பகவான் புண்டரீகாக்ஷனே மங்களம்
மங்களம் எங்கே ? ஹரியிடத்தில்
அந்த மங்களம் யார் ?
பெரிய பிராட்டியார்.
அந்தப் பெரிய பிராட்டியாருக்கு,
மங்களச் சின்னங்களில் ஒன்று 'மெட்டி "
இது, பரம மங்களம்.
7. ஒரு ஸம்வாதம்
ஆசார்யன், சிஷ்யனைக் கேட்கிறார்.
" இது என்ன ? '
சிஷ்யன் பதில் சொல்கிறான் "வெல்லம் '
ஆசார்யன் :- கண்ணுக்குத் தெரியும்போது இது வெல்லம்
சரி—-இதைத் தண்ணீரில் சேர்த்து நன்கு கலக்கு
சிஷ்யன்:–அப்படியே செய்தேன் ஆசார்யரே
ஆசார்யன் :–இப்போது வெல்லம் எங்கே –?
சிஷ்யன்:–வெல்லம் என்பது இல்லை
ஆசார்யன்;– உன் கண்ணுக்குத் தெரியாவிடில், வெல்லம்
இல்லை என்று ஆகிவிடுமா ?அந்தத் தண்ணீரை எடுத்து,
சிறிது சாப்பிட்டுப் பார்
சிஷ்யன்:–சாப்பிட்டுப் பார்த்தேன் –இனிப்பாக இருக்கிறது.
ஆசார்யன்:–கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அதை வேறு ஒரு
இந்த்ரியத்தாலே தெரிந்துகொள்வதைப் போல, ஊனக்கண்களுக்கு
"மெட்டி " ஸேவை ஆகாவிட்டாலும், "மானஸீக "மாவது
தர்ஸிக்கலாம் அல்லவா !
" சக்ஷுஸ் " பலம் வேண்டும். தவிரவும், "ஸ்ம்ருதி "பலம் வேண்டும்.
என்று , ஆசார்யன் விளக்கினார்.
8. இப்படி, "மெட்டி " என்கிற இந்தத் திருவாபரணம் .
இதை, பிராட்டியின் திருவடியின் ஆபரணமாக அடியேன் "மனஸ் " ஸால்
வரித்து, அந்தத் திருக்கோலத்தில் உபயநாச்சிமாராக எழுந்தருளும்
ஸ்ரீதேவித்தாயாரை மானஸீகமாகத் தரிஸித்து ,
பெரியபிராட்டியாரின் "மெட்டி"யின் வைபவத்தை, சொல்லத் துவங்குகிறேன்.
9. ஆசார்ய பரம்பரையை அகத்தில் இருத்தி, வணங்கி , ஸ்ரீ ஸுக்த பாஷ்யத்தை
அருளிய ஸ்ரீ நஞ்சீயரையும் , ஸ்ரீகுணரத்ன கோசத்தை அருளிய ஸ்ரீ பராசர
பட்டரையும் , ஸ்ரீ ஸ்துதியையும் , ஸ்ரீ பாதுகாசஹஸ்ரத்தையும்
அருளிய பரமாசார்யன் ஸ்வாமி தேசிகனையும், ஸ்ரீலக்ஷ்மி சஹஸ்ரத்தை அருளிய
அரசாணிபாலை வேங்கடாத்ரி கவிஸார்வ பௌமனையும் புந : புந : தெண்டனிட்டு
மஹாசார்யர்கள் , மஹா பண்டிதர்களை சிரஸ்ஸாலே வணங்கி, இருகரம் கூப்பித்
தொழுது, அனுக்ரஹிக்கப் ப்ரார்த்தித்து, எழுதத் துவங்குகிறேன்
10. ஹே—பெரிய பிராட்டியே—
எந்த நித்ய சூரிகளும் ,எந்த முக்தர்களும் அனவரதமும் உன் மெட்டியைத்
தரிசித்து, உனக்குக் கைங்கர்யம் செய்கிறார்களோ, அந்த, உன்னுடைய
திருவாபரணமான , "மெட்டித் தேவி " அடியேனுக்குத் தர்ஸனம் தந்து, அந்தத்
திருவாபரண வைபவத்தை ,சிறு குழந்தையின் மழலைச் சொற்களைப் போல
அடியேன் சமர்ப்பிக்க, உன் அனுக்ரஹத்தை வேண்டி, உன்னை எப்போதும்
தெண்டனிடுகிறேன் .

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsTo be continued