Announcement

Collapse
No announcement yet.

sivavakkiar sidhar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • sivavakkiar sidhar

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.


    *(27)*
    *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *சிவவாக்கியர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    சித்தர்களுள் தலை சிறந்தவர்களாகக் கருதப்படும் இவர் தாயுமானவர், பட்டிணத்தார் ஆகியோரால் பாராட்டப் பெற்றவர்.


    பஞ்சாட்சர உண்மையையும், அதன் வகைகளையும், சிவனையும், ராமனைப் பற்றியும் மிக அழகாகச் சொல்லி இருப்பவர்.


    *"சிவாயம் என்ற அட்சரம்*
    *சிவன் இருக்கும் அட்சரம்*
    *உபாயம் என்று நம்புவோர்க்கு*
    *உண்மையான அட்சரம்*
    *கபாடம் அற்ற வாசலைக்*
    *கடந்து போன வாயுவை*
    *உபாயம் இட்டு அழைக்குமே*
    *சிவாயம் அஞ்சு எழுத்துமே"*
    -(சிவ வாக்கியரர் பாடல்)


    சங்கரக் குலத்தில் தை மாதத்தில் மக நட்சத்திரத்தில் பிறந்தவர் சிவவாக்கியர்.


    பிறக்கும் போதே " சிவ சிவ" என்று சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டே பிறந்ததால் இவருக்கு சிவவாக்கியர் என்று பெயர்.


    இளம் வயதிலேயே மகா தத்துவத்தையும், காலத் தத்துவத்தையும் நன்கு உணர்ந்த சிவவாக்கியர் மன்மதனையும் வெல்லும் வடிவழகோடு திகழ்ந்தவர்.


    பதினெண் சித்தர் மரபில் வந்த ஒரு குருவை நாடி வேத நெறிகளைப் பயின்றார். அவைகள் அவருக்கு உடன்படாமல் போகவே தம் கருத்துக்களுக்கு விளக்கம் தர தகுந்த ஒரு குருவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.


    இந்நிலையில் காசியின் பெருமை பற்றி பலர் சொல்லக் கேட்டு அங்கு செல்ல வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று சிவவாக்கியருக்கு.


    உடனே புறப்பட்டு விட்டார் காசியைத் தரிசிப்பதற்கு. அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் வசித்து வந்தார். செருப்புதைப்புதான் அவருடைய தொழில். ஒருவரின் கால்களைப் பார்த்தே அவரவர்க்குத் தகுந்தபடி காலணியை செய்து கொடுப்பது அவர் வழக்கம். மூச்சுக் காற்றைக் கட்டுப் படுத்தும் பிராணாயாம வித்தை பயின்றவர் அவர்.


    அவரது வித்தையைப் பார்த்து பாராட்டுபவர்கள் சிலர். தொழிலைப் பார்த்து பழிப்பவர்கள் சிலர். உண்மை உணர்ந்தவர்கள் அவரைப் போற்றினர். விவரமறியாத பலர் அவரை இகழ்ந்தனர்.


    சித்தரோ பாராட்டுதலைக் கேட்டு மனம் மகிழவும் இல்லை. பழிச் சொல்லைக் கேட்டு மனம் குன்றவும் இல்லை. தமக்கு ஏற்படும் புகழ்ச்சி, தாழ்ச்சி எதையும் ஏற்றுக் கொள்ளாமல் அதை அலட்சியம் செய்து, நல்ல குணங்கள் நிறைந்தவராகக் காணப்பட்டவரின் சிந்தனை முழுவதும் ஒரு நல்ல சீடனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.


    இச் சித்தரின் பெருமைகள் காசிக்கு வந்திருந்த சிவவாக்கியர் காதுகளுக்கும் எட்டியது. அவரை எப்படியும் காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் இருக்குமிடத்தை விசாரித்துக் கொண்டு அங்கு போனார்.


    தன் இருப்பிடம் தேடி வந்த சிவவாக்கியரை அன்புடன் வரவேற்றார் சித்தர். சிவவாக்கியருக்கு அவரைப் பார்த்ததும் தமக்குள் ஒரு ஈர்ப்பு சக்தி ஏற்பட, அவருக்கு அருகில் போய் நெருங்கி நின்றார்.


    ஒரு பலகையைப் போட்டு அதன் மேல் உட்காரும்படி சொன்னார் சித்தர்.


    சித்தரின் பார்வையில் இருந்த கனிவு, பேச்சில் இருந்த இனிமை, உச்சரிப்பில் இருந்த அன்பு, இவை அனைத்தும் சிவவாக்கியரை எளிதில் கவர அப்பலகையில் அமர்ந்தார் அவர்.


    பலகையில் அமர்ந்த உடனேயே அவருக்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. மிகப் பெரிய ஞான விளக்கின் அருகில் இருப்பதுபோல் தோற்றம்! சொல்ல முடியாத ஒரு ஆனந்தத்தை அனுபவிப்பதுபோல் ஓர் உணர்வு.


    சிவவாக்கியருக்கு அவர் ஒரு மகாயோகியாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது.


    சிவவாக்கியரை மேலும் கீழுமாகப் பார்த்த சித்தர் தம் ஞானத்தைப் பெறுமளவிற்கு சிவ வாக்கியருக்கு பரிபக்குவம் இருக்கிறதா என்று அறிய விரும்பினார்.


    சிவ வாக்கியர் செருப்பு தைக்கும் தொழில் செய்து சம்பாதித்த பணம் என்னிடம் இருக்கிறது. இதை எடுத்துக் கொண்டு போய் என்னுடைய தங்கையான கங்காதேவியிடம்.கொடுத்து விடு...என்று சொன்னவர், தன் பக்கத்தில் இருந்த பேய் சுரைக்காய் ஒன்றை சிவவாக்கியரிடம் தள்ளி, "இதோ இந்தப் பேய்ச்சுரைக்காய் ஒரே கசப்பாய் இருக்கிறது. வரும் போது இதன் கசப்பையும் கழுவிக் கொண்டு வர முடியுமா உன்னால்?" என்று கேட்டார்.


    சித்தர் தரிசனத்திலே தன்னையே இழந்து விட்ட நிலையிலிருந்த சிவவாக்கியர் தன்வயப்பட்ட நிலையில் மறுப்பு எதுவும் சொல்லாமல் சித்தர் தந்த காசையும், பேய்ச்சுரைக்காயையும் எடுத்துக் கொண்டு கங்கையை நெருங்கினார். கங்கையில் இறங்கித் தண்ணீரைத் தொட்டார்.


    மறுநிமிடம் சுற்றிச் சுழன்று வெள்ளம் பெருக்கெடுத்தோடும் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்கரம் ஒன்று வெளியில் வந்தது. அவரிடம் நீட்டியது கையை. சிவவாக்கியர் அக்கையில் காசை வைக்க உடனை அந்தக் கை வளையோசையுடன் தண்ணீரில் மறைந்தது.


    இதனைக் கண்டு எந்தவித அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ கொள்ளாத சிவவாக்கியர் தான் கொண்டு வந்திருந்த பேய்ச்சுரைக்காயை நீரில் கழுவிக் கொண்டு போய் சித்தரை வணங்கி அவரிடம் கொடுத்தார்.


    சிவவாக்கியரின் பக்குவ நிலையை மறுபடியும் சோதித்துப் பார்க்க விரும்பிய சித்தர் புன்முறுவல் ததும்ப, *"சிவவாக்கியா!...* நான் அவசரப்பட்டு விட்டேன். என் தங்கை கங்கா தேவியிடம் நீ கொடுத்த காசு எனக்குத் திரும்ப வேண்டுமே?" என் தங்கை மிகவும் வைதீகமானவள். அவள் இதோ இந்தத் தோல் பைத் தண்ணீரிலும் தோன்றுவாள். நீ அங்கே கொடுத்த காசுகளை இங்கேயே கேள்!. அவள் கொடுப்பாள்!" என்று சிவவாக்கியரைத் தூண்டினார்.


    சிவவாக்கியரும் எந்த வித சலனமுமின்றி அதன்படியே கேட்டார். சித்தர் செருப்புத் தொழிலுக்காக வைத்திருந்த அந்தத் தோல் பையிலிருந்து வளையல் அணிந்த அதே கை வெளியே வந்து சிவவாக்கியர் கைகளில் காசைக் கொடுத்துவிட்டு மறுபடியும் தோல் பையில் மறைந்தது. அப்போதும் சிவவாக்கியர் ஒரு சிறிதும் ஆச்சர்யபடவில்லை.


    அதைக் கண்ட சித்தரின் உள்ளம் மகிழ்ந்தது. தன் சீடன் பரிபக்குவம் அடைந்து விட்டான் என்று தீர்மானித்து எனக்கேற்ற மாணவன் கிடைத்து விட்டான் என்று அன்போடு சிவவாக்கியரைத் தழுவி ஆசீர்வதித்தார்.


    இருப்பினும், கங்கையில் வளைக் கையில் காசை வைக்கும்போதும் சரி, தோல் பையில் வளைக்கையில் காசை வாங்கும்போதும் சரி,அந்த ஸ்பரிசத்தால் ஒரு கணம் சிவவாக்கியர் மேனி சிலிர்த்ததை உணர்ந்த சித்தர் சிவவாக்கியருக்குப் பெண்கள் விஷயத்தில் உள்ள ஆசை முற்றிலும் போய்விடவில்லை என்பதை உணர்ந்திருந்தார்.


    அந்தப் பேய்ச்சுரைக்காயையும், கொஞ்சம் மணலையும் எடுத்து சிவவாக்கியரிடம் நீட்டிய சித்தர் "அப்பா, சிவவாக்கியா!... முக்தி நிலை சித்திக்கும் வரை நீ சில காலம் இல்லறத்தில் இரு. இந்த இரண்டையும் கலந்து எந்தப்பெண் உனக்குச் சமைத்துத் தருகிறாளோ அவளை நீ திருமணம் செய்து கொள்" என்று கட்டளையிட்டார்.


    தன் மனதுக்குள் இத்துணைக் காலம் இருந்த மனக்குறை அது தான். தனக்குள் இல்லற நாட்டம் ஏற்பட்டிருப்பதை அவர் எவ்வாறு அறிந்தார்? இது வரை வியப்பே ஏற்படாதிருந்த சிவவாக்கியருக்கு இப்போது முதன் முதலாக வியப்பு ஏற்பட்டது.


    குருவின் பாதம் தொட்டு வணங்கி அவர் தந்த பொருட்களோடு சிவவாக்கியர் அங்கிருந்து புறப்பட்டார். சென்ற இடமெல்லாம் குரு உபதேசப்படி தவம் செய்தார். தவஞானம் பெற்றார். அவர் நாவில் சரஸ்வதி நடனமாடினாள். தானறிந்த, அனுபவித்த அற்புதமான விவரங்களை எல்லாம் பாடல்களாகப் பாடத் தொடங்கினார். தத்துவப் பாடல்கள் மூலம் மக்களுக்கு அறிவுரை சொல்லி வழிகாட்டினார்.


    ஆண்களில் பலர் அதை அலட்சியம் செய்தனர். பெண்களில் சிலரோ சிவவாக்கியர் வாக்கை கவனிக்காமல் இளமையும் அழகும் ததும்பும் அவர் உடம்பிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்தினர்.


    சிவவாக்கியர் அவர்களிடம் இதோ இந்த மணலையும், பேய்ச் சுரைக்காயையும் யார் சமைத்துத் தருகிறார்களோ அவர்களை நான் திருமணம் செய்து கொள்வேன். மறுக்க மாட்டேன் என்று சொல்லி தன்னிடம் இருந்த மணலையும் சுரைக்காயையும் காட்டினார்.


    இளமையும், அழகும் நிரம்பிய சிவவாக்கியரை ஆவலோடு நெருங்கிய பெண்கள் அந்தக் கேள்வியைக் கேட்டதும் ஓடிப் போனார்கள்.


    *"ஐயயோ! நான் மாட்டேன்மா!*
    *ம்....ம்ம்....ம்ம்ம் என்னாலையும் முடியாதும்மா!* இன்னொரு பெண்ணும் ஓடினாள்.


    *இது.. அவமானம்..மா...நானும் மாட்டேன்மா...* இப்படியே எல்லாப் பெண்களும் ஓடவும் ஓடிஒளியவும் செய்தார்கள்!
    いいいいいいいいいいいいい

    To be Continued
Working...
X