Announcement

Collapse
No announcement yet.

sivavakkiar sidhar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • sivavakkiar sidhar

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(28)*
    *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.*
    -------------------------------------------------------------------
    *சிவவாக்கியர்.*
    いいいいいいいいいいいいい
    இந்த மணலையும் பேய்ச்சுரைக்காயையும் சமைத்துத் தருபவராகளை நான் திருமணம் செய்து கொள்வேன் என சிவவாக்கியர் கூறவும்,,,,,, அவரை விட்டு தூர ஓடி ஒழிந்தனர்.


    *இது நடக்கிற காரியமா?* இது பெண்களை அவமதிக்கிற செயலும் கூட ஏளனம் செய்தனர்.


    எண்ணத்தில் தூய்மை இருந்தால் எதுவும் நடக்கும். இல்லையென்றால் இப்படி எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டு சிவவாக்கியர் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.


    அறிவுத் தீ மூட்டப்பட வேண்டுமானால் அதற்கு அறிவார்த்தமான கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். யார் அந்தக் கேள்விக்குரிய விடையைத் தருவது?....


    பலர் அவரைச் சித்தர் என்றனர். ஒரு சிலரோ பித்தர் எனாறனர். இன்னும் சிலரோ சிவவாக்கியருக்கு புத்தி பேதலித்து விட்டது என்றே முடுவு கட்டினர்.


    சிவவாக்கியரைப் பார்த்ததும் அவசரம் அவசரமாக தங்கள் பாதையை வேறு வழிக்கு மாற்றினர். இதையெல்லாம் லட்சியம் செய்யாமல் சிவவாக்கியர் தன் வழியே போய்க்கொண்டிருந்தார்.


    ஒரு நாள் பகல் வேளையில் சிவவாக்கியர் நரிக்குறவர்கள் வசுக்கும் பகுதியில் நுழைந்தார். அப்போது அங்கிருந்த கூடாரம் ஒன்றில் இருந்து வெளியில் வந்த கன்னிப் பெண் ஒருத்தி சிவவாக்கியரைக் கண்டாள். கண்டதும் அவளுள் ஓர் உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கி ஒதுங்கி நின்றாள்.


    "பெண்ணே! வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா?" என்று கேட்ட சிவவாக்கியரிடம்...........




    அப்பெண் பணிவாய் சொன்ன பதில்; "சுவாமி!... தாங்கள் யாரென்று தெரியவில்லை. என் பெற்றோர்கள் இப்போது வீட்டில் இல்லை. அவர்கள் மூங்கில் வெட்டப் போயிருக்கிறார்கள். அதை வெட்டிப் பிளந்து கூடை, முறம் செய்து விற்றுப் பிழைப்பதுதான் எங்கள் தொழில். தங்கள் கட்டளை எதுவாக இருந்தாலும் நான் அதை நிறைவேற்றி வைக்க சித்தமாயிருக்கிறேன்."


    "சாப்பிட்டுப் பல நாளாயிற்று. எனக்குப் பசி தாங்கவில்லை. இதோ என்னிடம் இருக்கும் பேய்ச்சுரைக்காயையும், கொஞ்சம் மணலையும் சமைத்து எனக்கு உணவு போட முடியுமா.....உன்னால்?" என சிவவாக்கியர் கேட்டார்.


    சிவவாக்கியர் இப்படிச் சொன்னதும் அவள் மற்ற பெண்களைப் போல் அவரை ஏளனம் செய்து ஒதுங்கி ஓடவில்லை. இது நடக்கக் கூடியதா?... என்று நினைக்கவும் இல்லை.


    முனிவர் சொல்கிறார். அவர் சொல்படி நடப்பது நம் கடமை. நடப்பது எதுவாயினும் நடக்கட்டும் என்று ஒப்புக் கொண்டு சிவவாக்கியரிடமிருந்து அவைகளைப் பெற்றுக் கொண்டு போய் சமைக்கத் தொடங்கினாள்.


    என்ன ஆச்சர்யம்! அவள் உலையிலிட்ட அடுத்த நிமிடமே மணல் அருமையான சாதமாகவும், சுரைக்காய் ருசிமிகுந்த உணவாகவும் உருவானது.


    சமையலை வெகு விரைவில் இனிதே முடித்த அவள் வெளியில் வந்து, 'சுவாமி!, உணவு தயாராகி விட்டது. சாப்பிட வாருங்கள்.என்று பணிவுடன் அழைத்தாள். சிவவாக்கியருக்கு பரிவோடு பரிமாறினாள்.


    சிவவாக்கியருக்கு ஆச்சர்யம்....'இப்படியும் ஒரு பெண்ணா?... ஒரு வார்த்தை கூட ஏன்?... எதற்கு?....என்று கேட்காமல்....எதிர்த்தும் பேசாமல் சொன்னதைச் செய்து முடித்து விட்டாளே.... இவள்தான் நம் குருநாதர் சொன்ன பெண் என்று எண்ணியவராய் உள்ளம் குளிர உணவு உண்ட சிவவாக்கியர் அதன்பிறகு அங்கேயே ஓர் ஓரமாக உட்கார்ந்தார்.


    அந்த சமயம், காட்டிற்கு மூங்கில் வெட்டச் சென்றிருந்த அவள் பெற்றோர்கள் திரும்பி வந்து விட்டனர். சிவவாக்கியரைப் பார்த்ததும் யாரோ ஒரு தவமுனி தங்கள் வீட்டிற்கு வருகை புரிந்திருப்பதைக் கண்டு பயபக்தியுடன் அவரை வணங்கி, "சுவாமி! தங்களின் பாதம் ஏழை எங்களின் குடிசையில் பட நாங்கள் என்ன தவம் செய்தோமோ!" என்று சொல்லி அவரது பதிலை எதிர்பார்ப்பது போல் கைகுவித்து நின்றார்கள்.


    சிவவாக்கியர் அவர்களிடம், "அப்பா, நான் இப்போதுதான் இங்கு உணவு உண்டேன். தவம் செய்யும் எனக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடினேன். உயர்ந்தவர்களோ என்னை ஏளனம் செய்து ஒதுக்கி விட்டார்கள். நீங்கள் எல்லாம் உள்ளத்தால் உயர்ந்தவர்கள். பொறுமையில் சிறந்தவளான உங்கள் குலப் பெண்ணோ நான் சொன்ன கட்டளையை மறுப்பேதும் சொல்லாமல் நிறைவேற்றி விட்டாள். நான் அவளை என் வாழ்க்கைத் துணைவியாக அடைய விரும்புகிறேன். அவளை ஏனக்கு மணமுடித்துக் கொடுப்பதும், கொடுக்காததும் உங்கள் விருப்பம். இதில் நான் உங்களை வற்புறுத்த மாட்டேன்" எனக் கூறி முடித்தார்.


    குறவர்களும், "சுவாமி தங்களைப் போன்றவர்களுக்கு எங்கள் குலப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது நாங்கள் செய்த புண்ணியமே. இருந்தாலும் தாங்கள் எங்களுடனே தங்கியிருப்பதாக இருந்தால்....எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை" என்று தங்கள் நிபந்தனையைக் கூறினர்.


    சிவவாக்கியர் இதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அவர்கள் நிபந்தனையை ஏற்றுக் கொண்டார். அங்கேயே அவர்கள் குலவழக்கப்படி திருமணம் நடந்தது.


    இல்லறத்தை ஏற்றுக் கொண்டாலும் சிவவாக்கியரின் தவம் நின்று விடவில்லை. அவருடைய தவத்திற்கு அவர் மனைவியும் துணையாக நின்றாள். சிவவாக்கியர் குறவர்களின் குலத்தொழிலையும் கற்றுக் கொண்டார்.


    ஒரு நாள் சிவவாக்கியர் மூங்கில் வெட்டுவதற்காகக் காட்டிற்குச் சென்றார். அங்கே பருத்த மூங்கில் ஒன்றை வெட்டியபோது, வெட்டப்பட்ட இடத்திலிருந்து பொடிப் பொடியாகத் தங்கத் துகள்கள் சிதறி விழ ஆரம்பித்தது.


    மேலும் மேலும் வெட்டப்பட தங்கத்துகள்கள் அதிகமா வெளிப்பட்டது.


    இத் தங்கத் துகள்களைக் கண்டதும் சிவவாக்கியரின் மனம் துணுக்குற்றது.
Working...
X