55.விறல்மாரன்


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா
அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
லைவா யுகந்த பெருமாளே

- 55 திருச்செந்தூர்


[div6]பதம் பிரித்து உரை


விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த
மிக வானில் இந்து வெயில் காய


விறல் = வீரனாகிய மாரன் = மன்மதனுடைய ஐந்து மலர் வாளி = ஐந்து மலர்ப் பாணங்களையும் சிந்த = செலுத்த மிக அதிகமாக. வானில் = வானத்தில் (விளங்கும்) இந்து = சந்திரன் வெயில் காய = வெயில் போலக் காய


மித வாடை வந்து தழல் போல ஒன்ற
விலை மாதர் தம் தம் வசை கூற

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மித வாடை வந்து = மெதுவாக தென்றல் வந்து தழல் போல ஒன்ற = நெருப்பு போல் வீசிப் பொருந்த வினை மாதர் = (வீண் பேச்சுத்) தொழில் மாதர் தந்தம் = தத்தம் வசை கூற = வசை மொழிகளைப் பேசவும்.


குற வாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்பம் மயல் தீர


குற வாணர் = குறவர்கள் வாழும் குன்றில் = மலையில் உறை = வசிக்கும் பேதை = வள்ளியைப் போன்ற பேதைப் பெண் கொண்ட = அடைந்த கொடிதான துன்ப மயல் = கொடிய துன்ப மயக்கம் தீர = நீங்க


குளிர் மாலையின் கண் அணி மாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ


குளிர் மாலையின் கண் = குளிர்ந்த மாலைப் பொழுதில் (வந்து). அணி மாலை தந்து = நீ அணிந்துள்ள மாலையைத் தந்து குறை தீர வந்து = என் குறை தீர வந்து குறுகாயோ = அணுக மாட்டாயோ?


மறி மான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழி பாடு தந்த தந்த மதியாளா


மறி மான் = இளைய மானை உகந்த = ஏத்தும்இறையோன் = சிவபெருமான் மகிழ்ந்து = மகிழ்ந்து வழி பாடு தந்த = வழி பாடு செய்யப் பெற்றமதியாளா = அறிஞனே


மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச
வடி வேல் எறிந்த அதி தீரா


மலை = (ஏழு) மலைகளையும் மாவும் = (சூரனாகிய) மாமரத்தையும் சிந்த = சிந்தவும் அலை வேலை = அலை வீசுகின்ற கடல் அஞ்ச = பயப்படவும் வடி வேல் எறிந்த = கூரிய வேலைச் செலுத்திய அதி தீரா = மிக வலிமை உள்ளவனே.


அறிவால் அறிந்து உன் இரு தாளில் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே


அறிவால் அறிந்து = அறிவு கொண்டு உன்னை அறிந்துஉன் இரு தாள் = உனது இரண்டு திருவடிகளையும் இறைஞ்சு = வணங்கும் அடியார் இடைஞ்சல் = அடியார்களின் துன்பங்களை களை வோனே = தீர்ப்பவனே.


அழகான செம் பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே.


அழகான = அழகிய செம்பொன் மயில் மேல் = செம்பொன் மயிலின் மீது அமர்ந்து = அமர்ந்து அலைவாய் = கடற்கரைத் தலமாகிய திருச்செந்தூரில் உகந்த பெருமாளே = மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே.]/div6]


[link[சுருக்க உரை


மன்மதன் ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த, வானத்தில் உள்ள நிலவு வெயில் போலக் காயவும், தென்றல் வந்து நெருப்புப் போல வீசவும், மாதர்கள் வசை மொழி பேசவும், குறவர்கள் வாழும் குன்றில் உள்ள வள்ளியைப் போன்ற இந்தப் பேதைப் பெண் அடைந்த கொடிய காம மயக்கம் தீர, மாலைப் பொழுதில் நீ வந்து என் குறையைத் தீர அணுகமாட்டாயோ?


இள மானை ஏந்தும் சிவபெருமான் உபதேசம் பெற உன்னை வழிபாடு செய்யும் அறிஞனே. ஏழு மலைகளும், சூரனாய் வந்த மாமரமும் சிந்தவும், கடல் அஞ்சவும், கூரிய வேலைச் செலுத்திய தீரனே, அறிவு கொண்டு உன்னை அறிந்து, உனது இரு திருவடிகளையும் வணங்கும் உன் அடியார்களின் இடர்களைக் கணைவோனே, அழகிய மயில் மேல் அமர்ந்து திருச்செந்தூரில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே, உன் மாலையைத் தந்து இந்தப் பேதைப் பெண்ணின் காம மயக்கத்தைத் தீர்ப்பாயாக.[/link]


விளக்கக் குறிப்புகள்


இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது.


அ. மாரன் ஐந்து மலர் வாளி .....
ஐங்கணைகளாவன--- தாமரைப் பூ (நினைப்பு ஊட்டும்) , மாம் பூ பசலை நிறம் தரும்), அசோகம் பூ (உணர்வை நீக்கும்), முல்லைப் பூ கிடை காட்டும்,நீலோற்பலப் பூ படுக்கச் செய்யும்). அன்றில், பறவை, தென்றல், நிலவு இவை காமத்தை வளர்ப்பன.