56. வெங்காளம்


வெங்கா ளபா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் கினியோனே
குன்றே டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தார் செந்திற் பெருமாளே.- 56 திருச்செந்தூர்பதம் பிரித்து உரை


வெம் காளம் பாணம் சேல் கண் பால்
மென் பாகு அம் சொல் குயில் மாலை


வெம் காளம் = கொடிய விடம் பாணம் = அம்பு சேல்=சேல் மீன் (இவைகளுக்கு ஒப்பாகும்) கண் = விழிகள் பால் = பால் மென் பாகு = மென்மையான் வெல்லம்(இவைகளுக்கு ஒப்பாகும்). அம்= அழகிய சொல் = பேச்சு குயில் = குயிலை நிகர்க்கும் மாலை = இருளை நிகர்க்கும்.


மென் கேசம் தான் என்றே கொண்டார்
மென் தோள் ஒன்ற பொருள் தேடி


மென் கேசம் தான் என்றே = மெல்லிய கூந்தல் என்று சொல்லும்படி. கொண்டார் = கொண்டுள்ள விலைமாதர்களின் மென் தோள்= மெல்லிய தோளை ஒன்ற= கூடும் பொருட்டு பொருள் தேடி = பொருள் தேடு வதற்காக

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
வங்காளம் சோனம் சீனம் போய்
வன்பே துன்ப படலாமோ


வங்காளம் சோன(க)ம் சீனம் போய் = வங்காளம்,சோனகம்,சீனம்எனப்படும் இடங்களுக்குப் போய் வன்= கொடிய துன்பப்படலாமோ = துன்பங்கள் படலாமோ?


மைந்து ஆரும் தோள் மைந்தா அந்தா
வந்தே இந்த பொழுது ஆள்வாய்


மைந்து ஆரும் = வில்மை மிக்க தோள் மைந்தா = தோள்களைக் கொண்ட குமரனே அந்தா = அழகனே வந்தே = வந்து இந்தப் பொழுது = இப்போதே ஆள்வாய் = ஆண்டருள்வாயாக.


கொங்கு ஆர் பைந்தேன் உண்டே வண்டு ஆர்
குன்றாள் கொங்கைக்கு இனியோனே


கொங்கு ஆர் = பூந்தாதுக்களில் உள்ள பைந்தேன் உண்டே = பசிய தேனை உண்டு வண்டார் =வண்டுகள் நிரம்பும் குன்றாள் = மலையில் வாழும் வள்ளியின் கொங்கைக்கு = தனங்களுக்கு
இனியோனே = இனியவனே.


குன்றோடும் சூழ் அம்பேழும்
சூரும் போய் மங்க பொரு கோபா


குன்றோடும் = (ஏழு) குன்றுகளும் சூழ் அம்பு ஏழும் = சூழ்ந்துள்ள ஏழு கடல்களும் சூரும் = சூரனும் போய் மங்க = பட்டு அழிய பொரு = சண்டை செய்த கோபா= சினம் கொண்டவனே.


கங்காளம் சேர் மொய்ம்பு ஆர் அன்பார்
கன்றே உம்பர்க்கு ஒரு குரு நாதா


கங்காளம் சேர் = எலும்பு மாலை பூண்ட மொய்ம்பார் = தோள்களைக் கொண்ட (சிவபெருமானுடைய) அன்பு ஆர் = அன்பு நிறைந்த கன்றே = குழந்தையே. உம்பர்க்கு = தேவர்களுக்கு ஒரு = ஒப்பற்ற நாதா = தலைவனே.


கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்தில் பெருமாளே.


கம்பு ஊர் = சங்குகள் தவழும் சிந்தார் = கடல் தென்பால் வந்தாய் = தெற்கே இருக்க வந்துஅமர்ந்தவனே கந்தா = கந்தனே செந்திற் பெருமாளே= திருச்செந்தூர்ப் பெருமாளே.


ஒப்புக


குன்று ஏழும்...
குன்று கிரவுஞ்சம் அல்ல. சூரனுக்கு அரணாயிருந்த ஏழு மலைகள்


கடலழக் குன்றழச் சூரழ............................................................... கந்தர் அலங்காரம்