*(29)*
*சிவமய அருளான சித்தர்கள் தொடர்.*
====================================
*சிவவாக்கியர் சித்தர்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
வனத்தில் பருத்த மூங்கிலொன்றை வெட்டயபோது, வெட்டப்பட்ட இடத்திலிருந்து பொடிப் பொடியாகத் தங்கத் துகள்கள் சிதறி வெளி வந்து விழுந்தன.


இறைவா!, சிவபெருமானே!..என்ன சோதனை இது?...நான் உன்னிடம் கேட்பதெல்லாம் முக்தியைத்தானே! அதை எனக்கருளாமல் இப்படியான பொருளாசையை காட்டித்தரலாமா?......


செல்வங்கள் கூடியிருந்தால் கவலைகள் கரைகட்டி நிற்குமே?...என இறைவனிடம் முறையிட்டுவிட்டு ஓடிப்போய் தூரத்தில் நின்று கொண்டு உதிர்ந்தெழும் கங்கத்துகள்களைப் பார்த்தார்.


சிவவாக்கியரின் புலம்பலையும், அச்சத்தையும் கண்டு என்னமோ ஏதோ என்று அங்கு ஓடிவந்த சில நரிக்குறவ இளைஞர்கள் என்ன....ஏது....என்று விசாரிக்க,.......


அதற்கு சிவவாக்கியரோ பதட்டத்துடன், "அதோ அந்த மூங்கில் புதரிலிருந்து மனிதர்களைக் கொல்லும் ஆட்கொல்லி புறப்பட்டு வருகிறது. அதைப் பார்த்துத்தான் பயந்து பின்வந்து நிற்கிறேன்" என்றார் உதிர்ந்து வரும் தங்கத்துகள்களைக் காட்டி..


கூடியிருந்த அத்தனை பேரும்.......சிவவாக்கியரைப் பார்த்து....இவன் சரியான பைத்தியக்காரன். போலும்!, இவன் வாழத் தெரியாதவனாவான்!, என மனதிற்குள் சொல்லிக் கொண்டு,....."ஆமாம்....ஆமாம்...இது ஆட்கொல்லிதான். நீங்கள் இங்கு இருந்தால் அது உங்களைக் கொன்று போட்டுவிடும். உடனே இங்கிருந்து போய் விடுங்கள்" என்று சிவவாக்கியரை அவ்விடத்தை விட்டு விரட்டினார்கள். அவரும் அவ்விடத்தை விட்டு அகழ்ந்து சென்று விடுகிறார்.


சிவவாக்கியர் போனதும், அங்கிருந்த கூட்டத்தினர் அனைவரும், மூங்கில் புதர்க்கு வந்து தெறித்து விழுந்த தங்கத்துகள்களை மூட்டை மூட்டையாய் கட்டி அட்டி போட்டனர். வெகுநேரமாய் தங்கத்துகள்களை சேகரித்ததில் இரவாகிப் போனது. இந்த இரவில் காட்டிலிருந்து வெளியேறிச் செல்ல முடியாததால், வேறு வழியின்றி இரவு முழுவதையும் காட்டில் கழித்து விட்டு விடிந்ததும் கிளம்பலாம் என தீர்மானித்து காட்டிலே தங்கி விட்டனர்.


பசியின் காரணமாய் இரண்டு பேர்கள் மூட்டையை பாதுகாப்பதென்றும், இரண்டு பேர் ஊருக்குள் சென்று சாப்பிட்டு விட்டுமற்றவர்க்கு சாப்பாடு வாங்கி வருவது
எனவும் முடிவு செய்தனர்.


அதன்படி இரண்டு பேர் கிராமத்திற்கு போய் வயிறார சாப்பிட்டு விட்டு மற்றவர்க்கு உணவை வாங்கிக் கொண்டு வந்தனர். வரும் வழியிலிலே இருவரின் மனதில் ஓர் எண்ணம் எழுகிறது.


ஏன் ? நாம் நால்வரும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும்? இருப்பதை நாம் இருவர் மட்டும் எடுத்துக் கொண்டால் என்ன? என இருவரும் முடிவு செய்து வாங்கிவந்த உணவில் விஷத்தை கலந்து விதைத்து வனத்திற்கு வந்து சேர்ந்தனர்.


அங்கோ தங்கமூட்டைக்கு காவலிருந்த இருவரும் வேறு விதமாக கணக்குப் போட்டு வைத்திருந்தனர்.


மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று கொன்டு, உணவெடுத்துக் கொண்டு வந்த இருவரையும் கொன்று போட்டு விட்டு, "ஒழிந்தார்கள் பங்குக்குண்டானவர்கள்!, என சந்தோஷம் கொண்டார்கள் மீதமிருந்த அந்த இருவர்கள்.


பின், வாங்கி வரப்பட்ட உணவை இருவரும் உண்டனர். அவ்வளவுதான்... விஷம் வெற்றி கொண்டது. மீதமிருந்த இருவரும் இறந்தனர்.


ஆக தங்கத்தின் மீது கொண்ட மோகத்தால் நால்வரும் மாண்டனர். எமன் அவர்களை அழித்தான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மறுநாள் பொழுதில், வழக்கம் போல் வனத்திற்கு மூங்கில் வெட்ட வந்தார் சிவவாக்கியர். அங்கே இறந்து கிடந்த நான்கு பேரையும் கண்டார்.


அட அற்ப மானிடர்களே! இதைத்தான் முன்னமே சொன்னேனே?....கேட்டீர்களா?...இந்த ஆட்க்கொள்ளி உங்களைக் கொன்று போட்டுவிட்டது பார்த்தீர்களா?...என வருந்தி விட்டு மூங்கில் வெட்ட நகர்ந்து சென்றார்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
To be continued