என்னிடம் திருமணப் பொருத்தம் பார்க்க வரும் பல பெற்றோர்கள் கையில் பத்து, இருபது வரன் ஜாதகங்களையும், தன் பெண் அல்லது, பிள்ளை ஜாதகங்களையும் கொண்டு வருகிறார்கள். " ஜோசியர் ஸ்வாமீ, உடனே பார்த்து சொல்லுங்க" என்று அவசரப் படுவார்கள்.
ஜாதகத்தில் எந்த தகவலும் இருக்காது, , ராசி நவாம்சம் மட்டுமே இருக்கும் , சரி நாமே ஜாதகத்தை சரிபார்க்கலாம் என்றால் பிறந்த ஊர் இருக்காது, , பிறந்த நேரம் இருக்காது, ஏன்? பிறந்த தேதி கூட இருக்காது. லக்னம் மாறி இருக்கும்
ஜாதகங்கள் வெவ்வேறு அயனாம்சத்தில் இருக்கும்., வந்தவர்கள் மிக அவசரப்படுவார்கள். ஆண் பெண் இருவர் ஜாதகமும் ஒரே அயனாம்சத்தில் இருக்க வேண்டும், இரண்டும் திருக்கணிதம் அல்லது வாக்கியம். இது மிகவும் முக்கியமானது.
தசவிதப் பொருத்தம் எனப்படும் பத்து பொருத்தம் மட்டும் பார்த்தால் போதாது. ஜாதகப்பொருத்தம் மிகவும் முக்கியம். அதற்கு ஜாதகத்தை ஒரே அயனாம்சத்தில் கொண்டு வரவேண்டும், அவர்கள் கொண்டுவரும் ஜாதகம் அவ்வாறு இருக்காது. நாம்தான் அத்தனை ஜாதகத்தையும் செக் பண்ணவேண்டும்.ஒரே அயனாம்சத்திற்கு கொண்டு வரவேண்டும்,அதற்கு D.O.B., TIME AM / PM, பிறந்த ஊர் வேண்டும். இதற்கு கால அவகாசம் வேண்டும். கொடுத்துவிட்டுப் போங்கள் , செக் பண்ணிப் பார்த்துவிட்டு போன் பண்ணுகிறேன். நேரில் வாருங்கள் அல்லது போனில் சொல்கிறேன், தக்ஷிணையை கொடுத்துவிட்டு போங்கள், என்றால் அவசரம் என்பார்கள்.
தசவிதப்பொருத்தம் பார்கக பிறந்த நஷத்திரம் தெரிந்தால் போதும். ஆனால் ஜாதகப் பொருத்தம் பார்க்க ராசி, அம்சம், பாவம்,தசா புக்தி, கிரக ஸ்புடம்,ஷட்ப்லம், நீச்சம், உச்சம், யுத்தம், அஷ்டவர்க்கம் இன்னும் பல அம்சங்க்களும் வேண்டும். பெண் , பிள்ளை இரண்டு ஜாதகத்திலும் பார்க்கவேண்டும். இவ்வளவும் பார்க்க எவ்வளவு நேரம் ஆகும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
சிலர் வெறும் ராசிக் கட்டத்தை மட்டும் வைத்து, அம்சம் கூட பார்ப்பது கிடையாது . ஜாதகம் சரிதானா என்று பார்ப்பதும் கிடையாது. உடனே பொருத்தம் என்று சொல்லி விடுகிறார்கள். தஷிணையாக ஜாதகத்திற்கு அம்பது ரூபாயை வாங்கி விடுகிறார்கள், இதை நான் குறை சொல்வதாக எண்ணாதீர்கள்
முதலில் நாம் யாருக்கு திருமணம் செய்யப்போகிறோமோ அவரின் ஜாதகத்தை ஆராந்து பார்த்து முடிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஜோதிடற்கு 250 ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும், இலவசமாக பார்க்கக் கூடாது . ஜோசியருக்கும் வயிறு , குடும்பம்,செலவுகள் உண்டு.ஜோசியருக்கு கொடுக்கும் தக்ஷிணையை ஒரு செலவாக நினைக்க கூடாது, அது அனாவசியம் இல்லை. ஒரு புண்ணியத்தைத்தான் சம்பாதிக்கிறிர்கள்.இதில் கஞ்சத்தனத்தை காட்டக் கூடாது.
சிலர், ஜோதிடப் பத்திரிகைகளில் வரும் கேள்வி பதில் பகுதியில் பொருத்தம் கேட்டுக்கொள்கிறார்கள். என் அபிப்ராயம் இது அவ்வளவு சரியில்லை, காரணம் இலவசத்தில் அவர்கள் எத்தனை விளக்கம் கொடுக்கமுடியும், எனவே இலவசத்தில் எதுவும் பார்க்காதீர்கள்.
வெறும் ராசிக் கட்டத்தை மட்டும் வைத்து , ஜாதகங்களை செக் பண்ணாமல், ஜாதகப் பொருத்தம் உள்ளது, பத்துக்கு ஏழு பொருத்தம், ஒன்பது பொருத்தம் என்று பார்ப்பதை தவிருங்கள், இது நம் குழந்தைகளின் வாழ்க்கை பிரச்சினை.
நீங்களே ஜோசியரிடம் ஜாதகம் ஒரே அயனானம்சத்தில் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள். மேற்கண்ட எல்லா விஷயங்ளையும் பார்க்கச் சொல்லுங்கள். ஜோசியருக்கு கால அவகாசம் கொடுங்கள். அவசரப்படாதீர்கள். மேற்கண்ட எல்லா விஷயங்ளையும் சரிபார்த்து சொல்ல நேரம் ஆகும். ஜாதகத்திற்கு 50 ரூபாய் நியாயமான தக்ஷிணை தாண். அவசரப்பட்டுப் பார்ப்பதற்கு பார்க்காமலே இருக்கலாம், இது நம் குழந்தைகளின் வாழ்க்கை பிரச்சினை என்பதை நினைவில் கொள்ளவும்.
Bookmarks